திருப்புகழ் 773 செக்கர்வானப் பிறை (சீகாழி)

Thiruppugal 773 Sekkarvanappirai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத்
தத்தனா தத்தனத் – தனதான

செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத்
தெற்கிலூ தைக்கனற் – றணியாத

சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச்
சித்தம்வா டிக்கனக் – கவிபாடிக்

கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக்
கற்பதா ருச்செகத் – த்ரயபாநு

கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க்
கைக்குணான் வெட்கிநிற் – பதுபாராய்

சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித்
தப்ரதா பர்க்குமெட் – டரிதாய

தத்வவே தத்தினுற் பத்திபோ தித்தஅத்
தத்வரூ பக்கிரிப் – புரைசாடிக்

கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக்
குத்துரா வுத்தபொற் – குமரோனே

கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக்
கொச்சைவாழ் முத்தமிழ்ப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத்
தத்தனா தத்தனத் – தனதான

செக்கர் வானப் பிறைக்கு இக்கு மாரற்கு அ(ல்)ல
தெற்கில் ஊதைக்கு அனல் – தணியாத

சித்ர வீணைக்கு அலர் பெற்ற தாயர்க்கு அவச்
சித்தம் வாடி கனக் – கவி பாடி

கைக் கபோலக் கிரி பொன் கொள் ராசிக் கொடைக்
கற்ப தாருச் செக – த்ரய பானு

கற்ற பேர் வைப்பு எனச் செத்தை யோகத்தினர்க்
கைக்குள் நான் வெட்கி – நிற்பது பாராய்

சக்ர பாணிக்கும் அப் பத்ம யோனிக்கு(ம்) நித்த
ப்ரதாபர்க்கும் எட்ட – அரிது ஆய

தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அத்
தத்வ ரூப கிரிப் புரை – சாடிக்

கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ
குத்து ராவுத்த பொற் – குமரோனே

கொற்றவா உற்பலச் செச்சை மாலைப் புயக்
கொச்சை வாழ் முத்தமிழ்ப் – பெருமாளே

English

chekkarvA nappiRaik kikkumA raRkalath
theRkilU thaikkanat – RaNiyAtha

sithravee Naikkalarp petRathA yarkkavac
ciththamvA dikkanak – kavipAdik

kaikkapO lakkirip poRkoLrA sikkodaik
kaRpathA rucchekath – thrayabAnu

katRapEr vaippenac cseththaiyO kaththinark
kaikkuNAn vetkiniR – pathupArAy

sakrapA Nikkumap pathmayO nikkunith
thaprathA parkkumet – tarithAya

thathvavE thaththinuR paththipO thiththAth
thathvarU pakkirip – puraisAdik

kokkilE pukkoLith thittacUr pottezhak
kuththurA vuththapoR – kumarOnE

kotRavA vuRpalac cecchaimA laippuyak
kocchaivAzh muththamizhp – perumALE.

English Easy Version

chekkar vAnap piRaikku ikku mAraRku a(l)la
theRkil Uthaikku anal – thaNiyAtha

sithra veeNaikku alar petRa thAyarkku avac
ciththam vAdi kanak – kavi pAdi

kaik kapOlak kiri pon koL rAsik kodaik
kaRpa thAruc ceka – thraya bAnu

katRa pEr vaippu enac ceththai yOkaththinark
kaikkuL nAn vetki – niRpathu pArAy

sakra pANikkum ap pathma yOnikku(m) niththa
prathAparkkum etta – arithu Aya

thathva vEthaththin uRpaththi pOthiththa ath
thathva rUpa kirip – purai sAdik

kokkilE pukku oLiththidda cUr pottu ezha
Kuththu rAvuththa poR – kumarOnE

kotRavA uRpalac cecchai mAlaip puyak
kocchai vAzh muththamizhp – perumALE.