திருப்புகழ் 774 தினமணி சார்ங்க (சீகாழி)

Thiruppugal 774 Dhinamanisarngka

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தாந்த தான தனதன தாந்த தான
தனதன தாந்த தான – தனதான

தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
தினகர னேய்ந்த மாளி – கையிலாரஞ்

செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்
வயிரியர் சேர்ந்து பாட – இருபாலும்

இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை
புழுககில் சாந்து பூசி – யரசாகி

இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
மொருபிடி சாம்ப லாகி – விடலாமோ

வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை
மயிலொடு பாங்கி மார்க – ளருகாக

மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி
மலைமிசை தோன்று மாய – வடிவோனே

கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
கருணைகொள் பாண்டி நாடு – பெறவேதக்

கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய
கவுணியர் வேந்த தேவர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தாந்த தான தனதன தாந்த தான
தனதன தாந்த தான – தனதான

தினமணி சார்ங்க பாணி யென மதிள் நீண்டு சால
தினகரன் ஏய்ந்த – மாளிகையில் ஆரஞ்

செழுமணி சேர்ந்த பீடிகையில் இசை வாய்ந்த பாடல்
வயிரியர் சேர்ந்து பாட – இருபாலும்

இனவளை பூண்கையார்க வரியிட வேய்ந்து மாலை
புழுககில் சாந்து பூசி – அரசாகி

இனிதிறுமாந்து வாழும் இருவினை நீண்ட காயம்
ஒருபிடி சாம்ப லாகி – விடலாமோ

வனசரர் ஏங்க வான முகடுற வோங்கி ஆசை
மயிலொடு பாங்கிமார்கள் – அருகாக

மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி
மலைமிசை தோன்று மாய – வடிவோனே

கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
கருணைகொள் பாண்டி நாடு – பெற வேதக்

கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய
கவுணியர் வேந்த – தேவர்பெருமாளே.

English

dhinamaNi sArngapANi ena madhiL neendu sAla
dhinakaran Eyndha mALi – gaiyil Aram

sezhumaNi sErndha peedigaiyil isai vAyndha pAdal
vayiriyar sErndhu pAda – iru pAlum

inavaLai pUNkai yAr kavariyida vEyndhu mAlai
puzhugagil sAndhu pUsi – arasAgi

inidhiRu mAndhu vAzhum iruvinai neenda kAyam
orupidi sAmbalAgi – vidalAmO

vanachara rEnga vAna mugaduRa Ongi Asai
mayilodu pAngi mArgaL – arugAga

mayilodu mAngaL sUzha vaLavari vEngai Agi
malai misai thOndru mAya – vadivOnE

ganasamaN mUngar kOdi kazhumisai thUnga neeRu
karuNaikoL pAndi nAdu – peRavEdha

kavi tharu kAntha bAla kazhumala pUndha rAya
kavuNiyar vEndha dhEvar – perumALE.

English Easy Version

dhinamaNi sArngapANi ena madhiL neendu
sAladhinakaran Eyndha – mALigaiyil Aram

sezhumaNi sErndha peedigaiyil isai vAyndha pAdal
vayiriyar sErndhu pAda – iru pAlum

inavaLai pUNkaiyAr kavariyida vEyndhu mAlai
puzhugagil sAndhu – pUsi arasAgi

inidhiRu mAndhu vAzhum iruvinai neenda kAyam
orupidi sAmbalAgi – vidalAmO

vanacharar Enga vAna mugaduRa Ongi Asai
mayilodu pAngimArgaL – arugAga

mayilodu mAngaL sUzha vaLavari vEngai Agi
malai misai thOndru mAya – vadivOnE

ganasamaN mUngar kOdi kazhumisai thUnga
neeRu karuNaikoL pAndi nAdu – peRa vEdha

kavi tharu kAntha bAla kazhumala pUndha rAya
kavuNiyar vEndha dhEvar – perumALE