Thiruppugal 776 Madhanachchorkara
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன
தனனத்தத் தானத் தானன – தனதான
மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள்
மருளப்பட் டாடைக் காரிக – ளழகாக
மவுனச்சுட் டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக் காரிகள்
வகைமுத்துச் சாரச் சூடிகள் – விலைமாதர்
குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்
குசலைக்கொட் சூலைக் காலிகள் – மயல்மேலாய்க்
கொளுவிக்கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை
குமுதப்பொற் பாதச் சேவையி – லருள்வாயே
கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்திக் கூறிற் பாழ்பட
ககனக்கட் டாரிக் காயிரை – யிடும்வேலா
கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக் கோகில
கவுரிப்பொற் சேர்வைச் சேகர – முருகோனே
திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப் பாவையை
தினமுற்றுச் சாரத் தோள்மிசை – யணைவோனே
திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் டேறிக் காழியில்
சிவன்மெச்சக் காதுக் கோதிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன
தனனத்தத் தானத் தானன – தனதான
மதனச் சொல் காரக் காரிகள் பவள கொப்பு ஆடச் சீறிகள்
மருளப் பட்டு ஆடைக் காரிகள் – அழகாக
மவுனச் சுட்டு ஆடிச் சோலிகள் இசலிப்பித்து ஆசைக் காரிகள்
வகை முத்துச் சாரச் சூடிகள் – விலை மாதர்
குதலைச் சொல் சாரப் பேசிகள் நரக அச்சில் சாடிப் பீடிகள்
குசலைக் கொள் சூலைக் காலிகள் – மயல் மேலாய்க்
கொளுவிக் கட்டு ஆசைப் பாசனை பவம் துக்கக் கார சூதனை
குமுதப் பொன் பாதச் சேவையில் – அருள்வாயே
கதறக் கல் சூரைக் கார் கடல் எரியத் திக்கு ஊறில் பாழ்பட
ககன(ம்) கட்டாரிக்கா(க) இரை – இடும் வேலா
கதிர் சுற்றிட்ட ஆசைப் பால் கிரி உறை பச்சைப் பாசக் கோகில
கவுரி பொன் சேர்வைச் சேகர – முருகோனே
திதலைப் பொன் பாணிக் கார் குயில் அழகில் பொன் தோகைப் பாவையை
தினம் உற்றுச் சாரத் தோள் மிசை – அணைவோனே
திலதப் பொட்டு ஆசைச் சேர் முக மயில் உற்றிட்டு ஏறிக் காழியில்
சிவன் மெச்சக் காதுக்கு ஓதிய – பெருமாளே.
English
mathanacchoR kArak kArikaL pavaLakkop pAdac cheeRikaL
maruLappat tAdaik kArika – LazhakAka
mavunacchut tAdic chOlikaL isalippith thAsaik kArikaL
vakaimuththuc chArac cUdikaL – vilaimAthar
kuthalaicchoR chArap pEsikaL narakacchiR sAdip peedikaL
kusalaikkot cUlaik kAlikaL – mayalmElAyk
koLuvikkat tAsaip pAsanai pavathukkak kArac cUthanai
kumuthappoR pAthac chEvaiyi – laruLvAyE
kathaRakkaR cUraik kArkada leriyaththik kURiR pAzhpada
kakanakkat tArik kAyirai – yidumvElA
kathirsutRit tAsaip pAlkiri yuRaipacchaip pAsak kOkila
kavuaippoR chErvaic chEkara – murukOnE
thithalaippoR pANik kArkuyi lazhakiRpot ROkaip pAvaiyai
thinamutRuc chArath thOLmisai – yaNaivOnE
thilathappot tAsaic chErmuka mayilutRit tERik kAzhiyil
sivanmecchak kAthuk kOthiya – perumALE.
English Easy Version
mathanac chol kArak kArikaL pavaLa koppu Adac cheeRikaL
maruLap pattu Adaik kArikaL – azhakAka
mavunac chuttu Adic chOlikaL isalippiththu Asaik kArikaL
vakai muththuc chAras cUdikaL – vilai mAthar
kuthalaic chol sArap pEsikaL naraka acchil sAdip peedikaL
kusalaik koL cUlaik kAlikaL – mayal mElAyk
koLuvik kattu Asaip pAsanai pavam thukkak kAra cUthanai
kumuthap pon pAthac chEvaiyil – aruLvAyE
kathaRak kal cUraik kAr kadal eriyath thikku URil pAzhpada
kakana(m) kattArikkA(ka) irai – idum vElA
kathir sutRitta Asaip pAl kiri uRai pacchaip pAsak kOkila
kavuri pon sErvaic chEkara – murukOnE
thithalaip pon pANik kAr kuyil azhakil pon thOkaip pAvaiyai
thinam utRuc chArath thOL misai – aNaivOnE
thilathap pottu Asaic chEr muka mayil utRittu ERik kAzhiyil
sivan mecchak kAthukku Othiya – perumALE.