திருப்புகழ் 777 விடம் என மிகுத்த (சீகாழி)

Thiruppugal 777 Vidamenamiguththa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தத்ததன தனதனன தத்ததன
தனதனன தத்ததன – தனதான

விடமெனமி குத்தவட வனலெனவு யர்த்துரவி
விரிகதிரெ னப்பரவு – நிலவாலே

விதனமிக வுற்றுவரு ரதிபதிக டுத்துவிடு
விரைதருவி தட்கமல – கணையாலே

அடலமரி யற்றுதிசை யினில்மருவி மிக்கவனல்
அழலொடுகொ தித்துவரு – கடைநாளில்

அணுகிநம னெற்றமயல் கொளுமநிலை சித்தமுற
அவசமொட ணைத்தருள – வரவேணும்

அடவிதனில் மிக்கபரு வரையவர ளித்ததிரு
அனையமயில் முத்தமணி – சுரயானை

அழகியம ணிக்கலச முலைகளில்ம யக்கமுறு
மதிவிரக சித்ரமணி – மயில்வீரா

கடதடக ளிற்றுமுக ரிளையவகி ரிக்குமரி
கருணையொட ளித்ததிற – முருகோனே

கமலமல ரொத்தவிழி யரிமருக பத்தர்பணி
கழுமலந கர்க்குமர – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தத்ததன தனதனன தத்ததன
தனதனன தத்ததன – தனதான

விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி
விரி கதிர் எனப் பரவு – நிலவாலே

விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்து விடு
விரை தரு இதழ் கமல – கணையாலே

அடல் அமர் இயற்று திசையினில் மருவி மிக்க அனல்
அழலொடு கொதித்து வரு – கடை நாளில்

அணுகி நமன் எற்ற மயல் கொளும் அ(ந்)நிலை சித்தம் உற
அவசமோடு அணைத்து அருள – வர வேணும்

அடவி தனில் மிக்க பரு வரையவர் அளித்த திரு
அனைய மயில் முத்த மணி – சுர யானை

அழகிய மணிக் கலச முலைகளில் மயக்கம் உறும்
அதி விரக சித்ர மணி – மயில் வீரா

கட தட களிற்று முகர் இளையவ கிரிக் குமரி
கருணையோடு அளித்த திற – முருகோனே

கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி
கழுமல நகர்க் குமர – பெருமாளே

English

vidamenami kuththavada vanalenavu yarththuravi
virikathire napparavu – nilavAlE

vithanamika vutRuvaru rathipathika duththuvidu
viraitharuvi thatkamala – kaNaiyAlE

adalamari yatRuthisai yinilmaruvi mikkavanal
azhaloduko thiththuvaru – kadainALil

aNukinama netRamayal koLumanilai siththamuRa
avasamoda NaiththaruLa – varavENum

adavithanil mikkaparu varaiyavara Liththathiru
anaiyamayil muththamaNi – surayAnai

azhakiyama Nikkalasa mulaikaLilma yakkamuRu
mathiviraka sithramaNi – mayilveerA

kadathadaka LitRumuka riLaiyavaki rikkumari
karuNaiyoda LiththathiRa – murukOnE

kamalamala roththavizhi yarimaruka paththarpaNi
kazhumalana karkkumara – perumALE.

English Easy Version

vidam ena mikuththa vadavu anal ena uyarththu ravi
viri kathir enap paravu – nilavAlE

vithanam mika utRu varu rathipathi kaduththu vidu
virai tharu ithazh kamala – kaNaiyAlE

adal amar iyatRu thisaiyinil maruvi mikka anal
azhalodu kothiththu varu – kadai nALil

aNuki naman etRa mayal koLum a(n)nilai siththam uRa
avasamOdu aNaiththu aruLa – vara vENum

adavi thanil mikka paru varaiyavar aLiththa thiru
anaiya mayil muththa maNi – sura yAnai

azhakiya maNik kalasa mulaikaLil mayakkam uRum
athi viraka sithra maNi – mayil veerA

kada thada kaLitRu mukar iLaiyava kirik kumari
karuNaiyOdu aLiththa thiRa – murukOnE

kamala malar oththa vizhi ari maruka paththar paNi
kazhumala nakark kumara – perumale