Thiruppugal 778 Alisuzhalalaga
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தனனத் தான தாத்தன
தனதன தனனத் தான தாத்தன
தனதன தனனத் தான தாத்தன – தனதான
அளிசுழ லளகக் காடு காட்டவும்
விழிகொடு கலவித் தீயை மூட்டவும்
அமளியில் முடியப் போது போக்கவும் – இளைஞோர்கள்
அவர்வச மொழுகிக் காசு கேட்கவும்
அழகிய மயிலிற் சாயல் காட்டவும்
அளவிய தெருவிற் போயு லாத்தவும் – அதிபார
இளமுலை மிசையிற் றூசு நீக்கவும்
முகமொடு முகம்வைத் தாசை யாக்கவும்
இருநிதி யிலரைத் தூர நீக்கவும் – இனிதாக
எவரையு மளவிப் போய ணாப்பவும்
நினைபவ ரளவிற் காதல் நீக்கியென்
இடரது தொலையத் தாள்கள் காட்டிநின் – அருள்தாராய்
நெளிபடு களமுற் றாறு போற்சுழல்
குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட
நிணமது பருகிப் பாறு காக்கைகள் – கழுகாட
நிரைநிரை யணியிட் டோரி யார்த்திட
அதிர்தரு சமரிற் சேனை கூட்டிய
நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு – பொரும்வீரா
களிமயில் தனில்புக் கேறு தாட்டிக
அழகிய கனகத் தாம மார்த்தொளிர்
கனகிரி புயமுத் தார மேற்றருள் – திருமார்பா
கரியவ னகரிற் றேவ பார்ப்பதி
யருள்சுத குறநற் பாவை தாட்பணி
கருணைய தமிழிற் பாடல் கேட்டருள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தனனத் தான தாத்தன
தனதன தனனத் தான தாத்தன
தனதன தனனத் தான தாத்தன – தனதான
அளி சுழல் அளகக் காடு காட்டவும்
விழி கொடு கலவித் தீயை மூட்டவும்
அமளியில் முடியப் போது போக்கவும் – இளைஞோர்கள்
அவர் வசம் ஒழுகிக் காசு கேட்கவும்
அழகிய மயிலின் சாயல் காட்டவும்
அளவிய தெருவில் போய் உலாத்தவும் – அதிபார
இளமுலை மிசையில் தூசு நீக்கவும்
முகமொடு முகம் வைத்து ஆசை ஆக்கவும்
இரு நிதி இலரைத் தூர நீக்கவும் – இனிதாக
எவரையும் அளவிப் போய் அணாப்பவும்
நினைபவர் அளவில் காதல் நீக்கி என்
இடரது தொலையத் தாள்கள் காட்டி நின் – அருள்தாராய்
நெளி படு களம் உற்று ஆறு போல் சுழல்
குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட
நிணமது பருகிப் பாறு காக்கைகள் – கழுகு ஆட
நிரை நிரை அணியிட்டு ஓரி ஆர்த்திட
அதிர் தரு சமரில் சேனை கூட்டிய
நிசிசரர் மடியச் சாடு வேல் கொடு – பொரும் வீரா
களி மயில் தனில் புக்கு ஏறு தாட்டிக
அழகிய கனகத் தாமம் ஆர்த்து ஒளிர்
கனகிரி புய முத்தாரம் ஏற்று அருள் – திரு மார்ப
கரியவனகரின் தேவ பார்ப்பதி சுத
குற நல் பாவை தாள் பணி
கருணைய தமிழில் பாடல் கேட்டு அருள் – பெருமாளே
English
aLisuzha laLagak kAdu kAttavum
vizhikodu kalavith theeyai mUttavum
amaLiyil mudiyap pOthu pOkkavum – iLainjOrkaL
avarvasa mozhukik kAsu kEtkavum
azhakiya mayiliR sAyal kAttavum
aLaviya theruviR pOyu lAththavum – athipAra
iLamulai misaiyit RUsu neekkavum
mukamodu mukamvaith thAsai yAkkavum
irunithi yilaraith thUra neekkavum – inithAka
evaraiyu maLavip pOya NAppavum
ninaipava raLaviR kAthal neekkiyen
idarathu tholaiyath thALkaL kAttinin – aruLthArAy
neLipadu kaLamut RARu pORchuzhal
kuruthiyil muzhukip pEykaL kUppida
niNamathu parukip pARu kAkkaikaL – kazhukAda
nirainirai yaNiyit tOri yArththida
athirtharu samariR chEnai kUttiya
nisisarar madiyac chAdu vERkodu – porumveerA
kaLimayil thanilpuk kERu thAttika
azhakiya kanakath thAma mArththoLir
kanakiri puyamuth thAra mEtRaruL – thirumArpA
kariyava nakarit REva pArppathi
yaruLsutha kuRanaR pAvai thAtpaNi
karuNaiya thamizhiR pAdal kEttaruL – perumALE.
English Easy Version
aLi suzhal aLakak kAdu kAttavum
vizhi kodu kalavith theeyai mUttavum
amaLiyil mudiyap pOthu pOkkavum – iLainjOrkaL
avar vasam ozhukik kAsu kEdkavum
azhakiya mayilin sAyal kAttavum
aLaviya theruvil pOy ulAththavum – athipAra
iLamulai misaiyil thUsu neekkavum
mukamodu mukam vaiththu Asai Akkavum
iru nithi ilaraith thUra neekkavum – inithAka
evaraiyum aLavip pOy aNAppavum
ninaipavar aLavil kAthal neekki en
idarathu tholaiyath thALkaL kAtti nin – aruLthArAy
neLi padu kaLam utRu ARu pOl suzhal
kuruthiyil muzhukip pEykaL kUppida
niNamathu parukip pARu kAkkaikaL – kazhuku Ada
nirai nirai aNiyittu Ori Arththida
athir tharu samaril sEnai kUttiya
nisisarar madiyac chAdu vEl kodu – porum veerA
kaLi mayil thanil pukku ERu thAttika
azhakiya kanakath thAmam Arththu oLir
kanakiri puya muththAram EtRu aruL – thiru mArpa
kariyavanakarin thEva pArppathi
sutha kuRa nal pAvai thAL paNi
karuNaiya thamizhil pAdal kEttu aruL – perumALE.