Thiruppugal 780 Eththanaikodi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தன தான தான தத்தன தான தான
தத்தன தான தான – தனதான
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போன – தளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
யிப்படி யாவ தேது – இனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினி லாயு மாயு – மடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
சித்திர ஞான பாத – மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
நிர்த்தம தாடு மாறு – முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
நெட்டிலை சூல பாணி – யருள்பாலா
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல – மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தன தான தான தத்தன தான தான
தத்தன தான தான – தனதான
எத்தனை கோடி கோடி விட்டுடல் ஓடி ஆடி
எத்தனை கோடி போனது – அளவேதோ
இப்படி மோக போகம் இப்படி யாகி யாகி
இப்படி யாவ தேது – இனிமேல்
யோசித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினில் ஆயும் மாயும் – அடியேனை
சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது
சித்திர ஞான பாதம் – அருள்வாயே
நித்தமும் ஓதுவார்கள் சித்தமெ வீடதாக
நிர்த்தமது ஆடும் – ஆறுமுகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுருவான மூணு
நெட்டிலை சூல பாணி – அருள்பாலா
பைத்தலை நீடும் ஆயிரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல – மயில் வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் – பெருமாளே.
English
eththanai kOdi kOdi vittuda lOdi yAdi
eththanai kOdi pOnadh – aLavEdhO
ippadi mOha bOgam ippadi yAgi yAgi
ippadi yAvadhEdhu – inimElO
chiththidil cheechi cheechi kuththira mAya mAyai
sikkini lAyu mAyum – adiyEnai
chiththini lAda lOdu muththamizh vANar Odhu
chiththira nyAna pAdham – aruLvAyE
niththamum OdhuvArgaL chiththame veeda dhAga
nirththama dhAdu mARu – mugavOnE
nitkaLa rUpar pAdhi pachchuru vAna mUNu
nettilai sUla pANi – aruLbAlA
paiththalai needum Ayiraththalai meedhu peeRu
paththira pAdha neela – mayilveerA
pachchiLa pUga pALai seykkayal thAvu vELUr
patriya mUvar dhEvar – perumALE.
English Easy Version
eththanai kOdi kOdi vittuda lOdi yAdi
eththanai kOdi pOnadh – aLavEdhO
ippadi mOha bOgam ippadi yAgi yAgi
ippadi yAvadhEdhu – inimEl
Ochiththidil cheechi cheechi kuththira mAya maya
sikkini lAyu mAyum – adiyEnai
chiththini lAda lOdu muththamizh vANar Odhu
chiththira nyAna pAdham – aruLvAyE
niththamum OdhuvArgaL chiththame veeda dhAga
nirththama dhAdu mARu – mugavOnE
nitkaLa rUpar pAdhi pachchuru vAna mUNu
nettilai sUla pANi – aruLbAlA
paiththalai needum Ayiraththalai meedhu peeRu
paththira pAdha neela – mayilveerA
pachchiLa pUga pALai seykkayal thAvu vELUr
patriya mUvar dhEvar – perumALE