திருப்புகழ் 781 பாட கச்சிலம்போடு (வைத்தீசுரன் கோயில்)

Thiruppugal 781 Padakachchilambodu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தத்தனந் தான தத்ததன
தான தத்தனந் தான தத்ததன
தான தத்தனந் தான தத்ததன – தனதான

பாட கச்சிலம் போடு செச்சைமணி
கோவெ னக்கலந் தாடு பொற்சரணர்
பாவை சித்திரம் போல்வர் பட்டுடையி – னிடைநூலார்

பார பொற்றனங் கோபு ரச்சிகர
மாமெ னப்படர்ந் தேம லிப்பரித
மாகு நற்கரும் போடு சர்க்கரையின் – மொழிமாதர்

ஏட கக்குலஞ் சேரு மைக்குழலொ
டாட ளிக்குலம் பாட நற்றெருவி
லேகி புட்குலம் போல பற்பலசொ – லிசைபாடி

ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம்
வாரு முற்பணந் தாரு மிட்டமென
ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர் – செயலாமோ

சேட னுக்கசண் டாள ரக்கர்குல
மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள்
சேர வற்றநின் றாட யிற்கரமி – ரறுதோள்மேல்

சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடி
யோர்கள் கட்டியம் பாட எட்டரசர்
சேசெ யொத்தசெந் தாம ரைக்கிழவி – புகழ்வேலா

நாட கப்புனங் காவ லுற்றசுக
மோக னத்திமென் தோளி சித்ரவளி
நாய கிக்கிதம் பாடி நித்தமணி – புனைவோனே

ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல்
நாய கிக்குநன் பாக ரக்கணியும்
நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தத்தனந் தான தத்ததன
தான தத்தனந் தான தத்ததன
தான தத்தனந் தான தத்ததன – தனதான

பாடகம் சிலம்போடு செச்சை மணி
கோ எனக் கலந்து ஆடு பொன் சரணர்
பாவை சித்திரம் போல்வர் பட்டு உடையின் – இடை நூலார்

பார பொன் தனம் கோபுரச் சிகரமாம்
எனப் படர்ந்த ஏமலிப்பர் இத(ம்)
பாகு நல் கரும்போடு சர்க்கரையின் – மொழி மாதர்

ஏடகக் குலம் சேரு மைக் குழலொடு
ஆடு அளிக் குலம் பாட நல் தெருவில்
ஏகி புட் குலம் போல பற்பல சொல் – இசை பாடி

ஏறி இச்சகம் பேசி எத்தி இதம்
வாரு(ம்) முன் பணம் தாரும் இட்டம் என
ஏணி வைத்து வந்து ஏற விட்டிடுவர் – செயலாமோ

சேடன் உக்க சண்டாள அரக்கர் குலம்
மாள அட்ட குன்று ஏழு அலைக் கடல்கள்
சேர வற்ற நின்று ஆட இல் கரம் ஈரறு – தோள் மேல்

சேண் நிலத்தர் பொன் பூவை விட்டு இருடி
யோர்கள் கட்டியம் பாட எட்டு அரசர்
சே செ ஒத்த செம் தாமரைக் கிழவி – புகழ் வேலா

அகம் நாடு புனம் காவலுற்ற சுக
மோகனத்தி மென் தோளி சித்ர வ(ள்)ளி
நாயகிக் கீதம் பாடி நித்தம் அணி – புனைவோனே

ஞான வெற்பு உகந்து ஆடும் அத்தர் தையல்
நாயகிக்கு நன் பாகர் அக்கு அணியும்
நாதர் மெச்ச வந்து ஆடு முத்தம் அருள் – பெருமாளே.

English

pAda kacchilam pOdu secchaimaNi
kOve nakkalan thAdu poRcharaNar
pAvai chiththiram pOlvar pattudaiyi – nidainUlAr

pAra potRanang kOpu racchikara
mAme nappadarn thEma lipparitha
mAku naRkarum pOdu sarkkaraiyin – mozhimAthar

Eda kakkulanj chEru maikkuzhalo
dAda Likkulam pAda natReruvi
lEki putkulam pOla paRpalaso – lisaipAdi

ERi yicchakam pEsi yeththiyitham
vAru muRpaNan thAru mittamena
ENi vaiththuvan thERa vittiduvar – seyalAmO

sEda nukkachaN dALa rakkarkula
mALa attakun REzha laikkadalkaL
sEra vatRanin RAda yiRkarami – raRuthOLmEl

sENi laththarpon pUvai vittirudi
yOrkaL kattiyam pAda ettarasar
sEse yoththasen thAma raikkizhavi – pukazhvElA

nAda kappunang kAva lutRasuka
mOka naththimen thOLi chithravaLi
nAya kikkitham pAdi niththamaNi – punaivOnE

njAna veRpukan thAdu maththarthaiyal
nAya gikkunan pAka rakkaNiyum
nAthar mecchavan thAdu muththamaruL – perumALE.

English Easy Version

pAdakam silampOdu secchai maNi
kO enak kalanthu Adu pon charaNar
pAvai chiththiram pOlvar pattu udaiyin – idai nUlAr

pAra pon thanam kOpurac chikaramAm
enap padarntha Emalippar itha(m)
pAku nal karumpOdu sarkkaraiyin – mozhi mAthar

Edakak kulam sEru maik kuzhalodu
Adu aLik kulam pAda nal theruvil
Eki put kulam pOla paRpala sol – isai pAdi

ERi icchakam pEsi eththi itham
vAru(m) mun paNam thArum ittam ena
ENi vaiththu vanthu ERa vittiduvar – seyalAmO

sEdan ukkac chaNdALa arakkar kulam
mALa atta kunRu Ezhu alaik kadalkaL
sEra vatRa ninRu Ada il karam – eeraRu thOL mEl

sEN nilaththar pon pUvai vittu
irudiyOrkaL kattiyam pAda ettu arasar
sE se oththa sem thAmaraik kizhavi – pukazh vElA

akam nAdu punam kAvalutRa suka
mOkanaththi men thOLi sithra va(L)Li
nAyakik keetham pAdi niththam aNi – punaivOnE

njAna veRpu ukanthu Adum aththar thaiyal
nAyagikku nan pAkar akku aNiyum
nAthar meccha vanthu Adu muththam aruL – perumALE