திருப்புகழ் 784 மேக வார்குழல (வைத்தீசுரன் கோயில்)

Thiruppugal 784 Megavarkuzhala

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தானதன தானதன தானதன
தான தானதன தானதன தானதன
தான தானதன தானதன தானதன – தனதான

மேக வார்குழல தாடதன பாரமிசை
யார மாடகுழை யாடவிழி யாடபொறி
மேனி வாசனைகள் வீசஅல்குல் மோதிபரி – மளமேற

மீனு லாடையிடை யாடமயில் போலநடை
யோல மோலமென பாதமணி நூபுரமு
மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல் – முழவோசை

ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு
வோரை வாருமென வேசரச மோடுருகி
ஆசை போலமனை யேகொடணை வார்கள்குவ – டதிபார


ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு
வேர்வை பாயஅணை யூடமளி யாடியிட
ரான சூலைபல நோய்கள்கட லாடியுட – லுழல்வேனோ

நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி
நாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடை
நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ் – முநிவோர்கள்

நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை
வேத கீதவொலி பூரையிது பூரையென
நாச மாயசுரர் மேவுகிரி தூளிபட – விடும்வேலா

தோகை மாதுகுற மாதமுத மாதுவினல்
தோழி மாதுவளி நாயகிமி னாளைசுக
சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை – புணர்வோனே

தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு
மீதெய் வானவடி வாதொழுதெ ணாவயனர்
சூழு காவிரியும் வேளூர்முரு காவமரர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தானதன தானதன தானதன
தான தானதன தானதன தானதன
தான தானதன தானதன தானதன – தனதான

மேக வார் குழல் அது ஆட தன பார(ம்) மிசை
ஆரம் ஆட குழை ஆட விழி ஆட பொறி
மேனி வாசனைகள் வீச அல்குல மோதி – பரிமளம் ஏற

மீ(மி)ன் நூல் ஆடை இடை ஆட மயில் போல நடை
ஓலம் ஓலம் என பாத மணி நூபுரமு(ம்)
மேல் வில் வீச பணி கீர குயில் போல குரல் – முழவு ஓசை

ஆகவே அவைகள் கூடிடுவர் வீதி
வருவோரை வாரும் எனவே சரசமோடு உருகி
ஆசை போல மனையே கொ(ண்)டு அணைவார்கள் குவடு – அதி பார

ஆணி மா முலையின் மூழ்கி சுக வாரி கொடு
வேர்வை பாய அணையூடு அமளி ஆடி
இடரான சூலை பல நோய்கள் கடல் ஆடி உடல் – உழல்வேனோ

நாக லோகர் மதி லோகர் பக(ல்) லோகர் விதி
நாடுளோர்கள் அமரோர்கள் கண நாதர் விடை
நாதர் வேதியர்கள் ஆதி சரசோதி திகழ் – முநிவோர்கள்

நாதரே நரர் மன் நாரணர் புராண வகை
வேத கீத ஒலி பூரை இது பூரை
எனநாசமாய் அசுரர் மேவி கிரி தூளி பட – விடும் வேலா

தோகை மாது குற மாது அமுத மாதுவின் நல்
தோழி மாது வ(ள்)ளி நாயகி மி(ன்)னாளை சுக
சோகமோடு இறுகி மார் முலை விடாமல் அணை – புணர்வோனே

தோள் இராறு முகம் ஆறு மயில் வேல் அழகு
மீது எ(ஏ)ய்வான வடிவா தொழுது எ(ண்)ணா வயனர்
சூழு காவிரியும் வேளூர் முருகா அமரர் – பெருமாளே

English

mEka vArkuzhala thAdathana pAramisai
yAra mAdakuzhai yAdavizhi yAdapoRi
mEni vAsanaikaL veesaalkul mOthipari – maLamERa

meenu lAdaiyidai yAdamayil pOlanadai
yOla mOlamena pAthamaNi nUpuramu
mElvil veesapaNi keerakuyil pOlakural – muzhavOsai

Aka vEyavaikaL kUdiduvar veethivaru
vOrai vArumena vEsarasa mOduruki
Asai pOlamanai yEkodaNai vArkaLkuva – dathipAra

ANi mAmulaiyin mUzhkisuka vArikodu
vErvai pAyaaNai yUdamaLi yAdiyida
rAna cUlaipala nOykaLkada lAdiyuda – luzhalvEnO

nAka lOkarmathi lOkarpaka lOkarvithi
nAdu LOrkaLama rOrkaLkaNa nAtharvidai
nAthar vEthiyarkaL Athisara sOthithikazh – munivOrkaL

nAtha rEnararma nAraNarpu rANavakai
vEtha keethavoli pUraiyithu pUraiyena
nAsa mAyasurar mEvukiri thULipada – vidumvElA

thOkai mAthukuRa mAthamutha mAthuvinal
thOzhi mAthuvaLi nAyakimi nALaisuka
sOka mOdiRuki mArmulaivi dAmalaNai – puNarvOnE

thOLi rARumuka mARumayil vElazhaku
meethey vAnavadi vAthozhuthe NAvayanar
cUzhu kAviriyum vELUrmuru kAvamarar – perumALE.

English Easy Version

mEka vAr kuzhal athu Ada thana pAra(m) misai
Aram Ada kuzhai Ada vizhi Ada poRi
mEni vAsanaikaL veesa alkul mOthi – parimaLam ERa

mee(mi)n nUl Adai idai Ada mayil pOla nadai
Olam Olam ena pAtha maNi nUpuramu(m)
mEl vil veesa paNi keera kuyil pOla kural – muzhavu Osai

AkavE avaikaL kUdiduvar veethi
varuvOrai vArum enavE sarasamOdu uruki
Asai pOla manaiyE ko(N)du aNaivArkaL kuvadu – athi pAra

ANi mA mulaiyin mUzhki suka vAri kodu
vErvai pAya aNaiyUdu amaLi Adi idarAna
cUlai pala nOykaL kadal Adi udal – uzhalvEnO

nAka lOkar mathi lOkar paka(l) lOkar vithi
nAduLOrkaL amarOrkaL kaNa nAthar vidai
nAthar vEthiyarkaL Athi sarasOthi thikazh – munivOrkaL

nAtharE narar man nAraNar purANa vakai
vEtha keetha oli pUrai ithu pUrai
enanAsamAy asurar mEvi kiri thULi pada – vidum vElA

thOkai mAthu kuRa mAthu amutha mAthuvin nal
thOzhi mAthu va(L)Li nAyaki mi(n)nALai suka
sOkamOdu iRuki mAr mulai vidAmal aNai – puNarvOnE

thOL irARu mukam ARu mayil vEl azhaku
meethu e(E)yvAna vadivA thozhuthu e(N)NA
vayanar cUzhu kAviriyum vELUr murukA amarar – perumALE