திருப்புகழ் 785 ஏட்டின் விதிப்படி (திருக்கடவூர்)

Thiruppugal 485 Eluppuththol

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன – தனதான

ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர
வீட்டி லடைத்திசை வேகசை மூணதி
லேற்றி யடித்திட வேகட லோடம – தெனவேகி

ஏற்கு மெனப்பொரு ளாசைபெ ணாசைகொ
ளாத்து வெனத்திரி யாபரி யாதவ
மேற்றி யிருப்பிட மேயறி யாமலு – முடல்பேணிப்

பூட்டு சரப்பளி யேமத னாமென
ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில்
பூத்த மலக்குகை யோபொதி சோறென – கழுகாகம்

போற்றி நமக்கிரை யாமென வேகொள
நாட்டி லொடுக்கென வேவிழு போதினில்
பூட்டு பணிப்பத மாமயி லாவருள் – புரிவாயே

வீட்டி லடைத்தெரி யேயிடு பாதக
னாட்டை விடுத்திட வேபல சூதினில்
வீழ்த்த விதிப்படி யேகுரு காவலர் – வனமேபோய்

வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது
பார்த்து முடித்திட வேயொரு பாரத
மேற்புனை வித்தம காவிர மாயவன் – மருகோனே

கோட்டை யழித்தசு ரார்பதி கோவென
மூட்டி யெரித்தப ராபர சேகர
கோத்த மணிக்கதி ரேநிக ராகிய – வடிவேலா

கூற்று மரித்திட வேயுதை பார்வதி
யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்
கோட்டு முலைக்கதி பாகட வூருறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன – தனதான

ஏட்டின் விதிப்படியே கொ(ண்)டு மா புர
வீட்டில் அடைத்து இசைவே கசை மூணு அதில்
ஏற்றி அடித்திடவே கடல் ஓடம் அது – என ஏகி

ஏற்கும் எனப் பொருள் ஆசை பெ(ண்)ணாசை
கொளாது என திரியா பரியா தவம்
ஏற்றி இருப்பிடமே அறியாமலும் – உடல் பேணி

பூட்டு சரப்பளியே மதனாம் என
ஆட்டி அசைத்தி இயலே திரி நாளையில்
பூத்த மலக் குகையோ பொதி சோறோ என – கழு காகம்

போற்றி நமக்கு இரையாம் எனவே கொள
நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில்
பூட்டு பணி பத மா மயிலா அருள் – புரிவாயே

வீட்டில் அடைத்து எரியே இடு பாதகன்
நாட்டை விடுத்திடவே பல சூதினில்
வீழ்த்த விதிப்படியே குரு காவலர் – வனமே போய்

வேற்றுமை உற்று உருவோடு இயல் நாளது
பார்த்து முடித்திடவே ஒரு பாரத
மேற் புனைவித்த மகா விர மாயவன் – மருகோனே

கோட்டை அழித்த அசுரர் பதி கோ என
மூட்டி எரித்த பராபர சேகர
கோத்த மணிக் கதிரே நிகராகிய – வடிவேலா

கூற்று மரித்திடவே உதை பார்வதியார்க்கும்
இனித்த பெ(ண்)ணாகிய மான் மகள்
கோட்டு முலைக்கு அதிபா கடவூர் உறை – பெருமாளே

English

Ettin vidhippadiyE kodu mA pura
veettil adaith thisaivE kasai mUNadhil
Etri adiththidavE kadal Odamadhu – ena vEgi

ERkum ena poruLAsai peNAsai ko
LA thu enath thiriyA pariyA thavam
Etri iruppidamE aRiyAmalum udal pENi

pUttu sarappaLiyE madhanAmena
Atti asaith iyalE thiri nALaiyil
pUththa malakguhaiyO podhi sORena – kazhu kAgam

pOtri namak iraiyAm enavE koLa
nAtti lodukkenavE vizhu pOdhinil
pUttu paNip padha mA mayilA aruL – purivAyE

veettil adaith theriyE idu pAthakan
nAttai viduth thidavE pala sUdhinil
veezhththa vidhip padiyE kuru kAvalar – vanamE pOy

vEtrumai yutruru vOdiyal nAL adhu
pArththu mudith thidavE oru bAratha
mERpunai viththa mahAvira mAyavan – marugOnE

kOttai azhiththa surArpathi gO ena
mUtti eriththa parApara sEkara
kOththa maNik kadhirE nigarAgiya – vadivElA

kUtru marith thidavE udhai pArvathi
yArkkum iniththa peNAgiya mAn magaL
kOttu mulaik adhipA kadavUr uRai – perumALE.

English Easy Version

Ettin vidhippadiyE kodu mA pura
veettil adaiththu isaivE kasai mUNadhil
Etri adiththidavE kadal Odamadhu – ena vEgi

ERkum ena poruLAsai peNAsai
koLA thu enath thiriyA pariyA thavam
Etri iruppidamE aRiyAmalum – udal pENi

pUttu sarappaLiyE madhanAmena
Atti asaith iyalE thiri nALaiyil
pUththa malakguhaiyO podhi sORena – kazhu kAgam

pOtri namak iraiyAm enavE koLa
nAtti lodukkenavE vizhu pOdhinil
pUttu paNip padha mA mayilA aruL – purivAyE

veettil adaith theriyE idu pAthakan
nAttai viduth thidavE pala sUdhinil
veezhththa vidhip padiyE kuru kAvalar – vanamE pOy

vEtrumai yutruru vOdiyal nAL adhu
pArththu mudith thidavE oru bAratha
mERpunai viththa mahAvira mAyavan – marugOnE

kOttai azhiththu asurArpathi kO ena
mUtti eriththa parApara sEkara
kOththa maNik kadhirE nigarAgiya – vadivElA

kUtru marith thidavE udhai pArvathiyArkkum
iniththa peNAgiya mAn magaL
kOttu mulaik adhipA kadavUr uRai – perumALE