திருப்புகழ் 787 அருக்கி மெத்தென சிரித்துமை (திருப்படிக்கரை)

Thiruppugal 787 Arukkimeththenasiriththumai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தத்தனத் தனத்த தத்தனத்
தனத்த தத்தனத் – தனதான

அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்
டழைத்தி தப்தடச் – சிலகூறி

அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த்
தணைத்தி தழ்க்கொடுத் – தநுராகத்

துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க்
குளக்க ருத்தினிற் – ப்ரமைகூரா

துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித்
துனைத்தி ருப்புகழ்ப் – பகர்வேனோ

தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற்
றடப்பொ ருப்பெடுத் – தணையாகச்

சமுத்தி ரத்தினைக் குறுக்க டைத்ததிற்
றரித்த ரக்கர்பொட் – டெழவேபோர்

செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்
செயித்த வுத்தமத் – திருமாமன்

திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த்
திருப்ப டிக்கரைப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தத்தனத் தனத்த தத்தனத்
தனத்த தத்தனத் – தனதான

அருக்கி மெத்தெனச் சிரித்து மைக் க(ண்)ணிட்டு
அழைத்து இதப்படச் – சில கூறி

அரைப் பணம் அத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து
அணைத்து இதழ் கொடுத்து – அநுராகத்து

உருக்கி மட்டு அறப் பொருள் பறிப்பவர்க்கு
உளக் கருத்தினில் – ப்ரமை கூராது

உரைத்து செய்ப் பதித் தலத்தினைத் துதித்து
உனைத் திருப்புகழ் – பகர்வேனோ

தருக்க மற்கடப் படைப் பலத்தினில்
தடப் பொருப்பு எடுத்து – அணையாகச்

சமுத்திரத்தினைக் குறுக்க அடைத்து அதில்
தரித்த அரக்கர் பொட்டு – எழவே போர்

செருக்கு விக்ரமச் சரத்தை விட்டு உறச்
செயித்த உத்தமத் – திரு மாமன்

திருத் தகப்பன் மெச்சு ஒருத்த முத்தமிழ்
திருப் படிக்கரைப் – பெருமாளே.

English

arukki meththenac chiaiththu maikkaNit
tazhaiththi thappadac – chilakURi

araippa Naththaivit Ruduththa pattavizhth
thaNaiththi thazhkkoduth – thanurAkath

thurukki mattaRap porutpa Rippavark
kuLakka ruththiniR – pramaikUrA

thuraiththu seyppathith thalaththi naiththuthith
thunaiththi ruppukazhp – pakarvEnO

tharukku maRkadap padaippa laththinit
Radappo ruppeduth – thaNaiyAkac

chamuththi raththinaik kuRukka daiththathit
Rariththa rakkarpot – tezhavEpOr

serukku vikramac charaththai vittuRac
cheyiththa vuththamath – thirumAman

thiruththa kappanmec choruththa muththamizhth
thiruppa dikkaraip – perumALE.

English Easy Version

arukki meththenac chiriththu maik ka(N)Nittu
azhaiththu ithappadac – chila kURi

araip paNam aththai vitRu uduththa pattu avizhththu
aNaiththu ithazh koduththu – anurAkaththu

urukki mattu aRap poruL paRippavarkku
uLak karuththinil – pramai kUrAthu

uraiththu seyp pathith thalaththinaith
thuthiththu unaith thiruppukazh – pakarvEnO

tharukka maRkadap padaip palaththinil
thadap poruppu eduththu – aNaiyAkac

samuththiraththinaik kuRukka adaiththu athil
thariththa arakkar pottu – ezhavE pOr

serukku vikramac charaththai vittu uRac
cheyiththa uththamath – thiru mAman

thiruth thakappan mecchu oruththa muththamizh
thirup padikkaraip – perumALE.