திருப்புகழ் 788 அமுதினை மெத்த (மாயூரம்)

Thiruppugal 788 Amudhinaimeththa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தத்தத் தனந்த தானன
தனதன தத்தத் தனந்த தானன
தனதன தத்தத் தனந்த தானன – தனதான

அமுதினை மெத்தச் சொரிந்து மாவின
தினியப ழத்தைப் பிழிந்து பானற
வதனொடு தித்தித் தகண்ட ளாவிய – விதழாராய்

அழகிய பொற்றட் டினொண்டு வேடையின்
வருபசி யர்க்குற் றவன்பி னாலுண
வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் – மயல்தீரக்

குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய
நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய
குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண – தனபாரக்

குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு
மவர்மய லிற்புக் கழிந்த பாவியை
குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற – அருள்வாயே

வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையு
மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன்
மதிகொட ழித்திட் டிடும்பை ராவணன் – மதியாமே

மறுவறு கற்பிற் சிறந்த சீதையை
விதனம்வி ளைக்கக் குரங்கி னாலவன்
வமிச மறுத்திட் டிலங்கு மாயவன் – மருகோனே

எமதும லத்தைக் களைந்து பாடென
அருளஅ தற்குப் புகழ்ந்து பாடிய
இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் – முருகோனே

எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய
பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய
இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தத்தத் தனந்த தானன
தனதன தத்தத் தனந்த தானன
தனதன தத்தத் தனந்த தானன – தனதான

அமுதினை மெத்தச் சொரிந்து மாவினது
இனிய பழத்தைப் பிழிந்து பால் நறவு
அதனொடு தித்தித்த கண்டு அளாவிய – இதழாராய்

அழகிய பொன் தட்டில் நொண்டு வேடையின்
வரு பசியார்க்கு உற்ற அன்பினால் உணவு
அருள்பவர் ஒத்துத் தளர்ந்த காமுகர் – மயல் தீர

குமுதம் விளர்க்கத் தடம் குலாவிய
நிலவு எழு முத்தைப் புனைந்த பாரிய
குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண – தன பாரக்

குவடு இளகக் கட்டி உந்தி மேல் விழும்
அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை
குரை கழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வு உற – அருள்வாயே

வமிசம் மிகுத்துப் ப்ரபஞ்சம் யாவையும்
மறுகிட உக்ரக் கொடும்பையான புன்
மதி கொடு அழித்திட்டு இடும்பை ராவணன் – மதியாமே

மறு அறு கற்பில் சிறந்த சீதையை
விதனம் விளைக்கக் குரங்கினால் அவன்
வமிசம் அறுத்திட்டு இலங்கு மாயவன் – மருகோனே

எமது மலத்தைக் களைந்து பாடு என
அருள அதற்குப் புகழ்ந்து பாடிய
இயல் கவி மெச்சிட்டு உயர்ந்த பேறு அருள் – முருகோனே

எழில் வளை மிக்கத் தவழ்ந்து உலாவிய
பொ(ன்)னி நதி தெற்கில் திகழ்ந்து மேவிய
இணை இலி ரத்னச் சிகண்டி ஊர் உறை – பெருமாளே

English

amuthinai meththac chorinthu mAvina
thiniyapa zhaththaip pizhinthu pAnaRa
vathanodu thiththith thakaNda LAviya – vithazhArAy

azhakiya potRat tinoNdu vEdaiyin
varupasi yarkkut Ravanpi nAluNa
varuLpava roththuth thaLarntha kAmukar – mayaltheerak

kumuthamvi Larkkath thadamku lAviya
nilavezhu muththaip punaintha pAriya
kulaviya sithrap prasaNda pUraNa – thanapArak

kuvadiLa kakkat tiyunthi mElvizhu
mavarmaya liRpuk kazhintha pAviyai
kuraikazhal patRip pukazhnthu vAzhvuRa – aruLvAyE

vamisami kuththup prapanjam yAvaiyu
maRukida vukrak kodumpai yAnapun
mathikoda zhiththit tidumpai rAvaNan – mathiyAmE

maRuvaRu kaRpiR chiRantha seethaiyai
vithanamvi Laikkak kurangi nAlavan
vamisa maRuththit tilangu mAyavan – marukOnE

emathuma laththaik kaLainthu pAdena
aruLA thaRkup pukazhnthu pAdiya
iyalkavi mecchit tuyarntha pERaruL – murukOnE

ezhilvaLai mikkath thavazhnthu lAviya
poninathi theRkit Rikazhnthu mEviya
iNaiyili rathnac chikaNdi yUruRai – perumALE.

English Easy Version

amuthinai meththac chorinthu mAvinathu
iniya pazhaththaip pizhinthu pAl naRavu
athanodu thiththiththa kaNdu aLAviya – ithazhArAy

azhakiya pon thattil noNdu vEdaiyin
varu pasiyArkku utRa anpinAl uNavu
aruLpavar oththuth thaLarntha kAmukar – mayal theera

kumutham viLarkkath thadam kulAviya
nilavu ezhu muththaip punaintha pAriya
kulaviya sithrap prasaNda pUraNa – thana pArak

kuvadu iLakak katti unthi mEl vizhum
avar mayalil pukku azhintha pAviyai
kurai kazhal patRip pukazhnthu vAzhvu uRa – aruLvAyE

vamisam mikuththup prapanjam yAvaiyum
maRukida ukrak kodumpaiyAna pun
mathi kodu azhiththittu idumpai rAvaNan – mathiyAmE

maRu aRu kaRpil chiRantha seethaiyai
vithanam viLaikkak kuranginAl avan
vamisam aRuththittu ilangu mAyavan – marukOnE

emathu malaththaik kaLainthu pAdu ena
aruLa athaRkup pukazhnthu pAdiya
iyal kavi mecchittu uyarntha pERu aruL – murukOnE

ezhil vaLai mikkath thavazhnthu ulAviya
po(n)ni nathi theRkil thikazhnthu mEviya
iNai ili rathnac chikaNdi Ur uRai – perumALE