திருப்புகழ் 791 குவளை பொருதிரு (பாகை)

Thiruppugal 791 Kuvalaiporudhiru

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதன தனன தனதன
தான தானன – தனதான

குவளை பொருதிரு குழையை முடுகிய
கோல வேல்விழி – மடவார்தங்

கொடிய ம்ருகமத புளக தனகிரி
கூடி நாடொறு – மயலாகித்

துவள வுருகிய சரச விதமது
சோர வாரிதி – யலையூடே

சுழலு மெனதுயிர் மவுன பரமசு
கோம கோததி – படியாதோ

கவள கரதல கரட விகடக
போல பூதர – முகமான

கடவுள் கணபதி பிறகு வருமொரு
கார ணாகதிர் – வடிவேலா

பவள மரகத கநக வயிரக
பாட கோபுர – அரிதேரின்

பரியு மிடறிய புரிசை தழுவிய
பாகை மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதன தனன தனதன
தான தானன – தனதான

குவளை பொருது இரு குழையை முடுகிய
கோல வேல் விழி – மடவார் தம்

கொடிய ம்ருகமத புளக தன கிரி
கூடி நாடொறு(ம்) – மயல் ஆகி

துவள உருகிய சரச விதம் அது
சோர வாரிதி – அலையூடே

சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம்
மகா உததி – படியாதோ

கவள கர தல கரட விகட
கபோல பூதர – முகமான

கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு
காரணா கதிர் – வடிவேலா

பவள மரகத கநக வயிர
கபாட கோபுர – அரி தேரின்

பரியும் இடறிய புரிசை தழுவிய
பாகை மேவிய – பெருமாளே.

English

kuvaLai poruthiru kuzhaiyai mudukiya
kOla vElvizhi – madavArtham

kodiya mrukamatha puLaka thanakiri
kUdi nAdoRu – mayalAkith

thuvaLa vurukiya sarasa vithamathu
sOra vArithi – yalaiyUdE

suzhalu menathuyir mavuna paramasu
kOma kOthathi – padiyAthO

kavaLa karathala karada vikadaka
pOla pUthara – mukamAna

kadavuL gaNapathi piRaku varumoru
kAra NAkathir – vadivElA

pavaLa marakatha kanaka vayiraka
pAda kOpura – arithErin

pariyu midaRiya purisai thazhuviya
pAkai mEviya – perumALE.

English Easy Version

kuvaLai poruthu iru kuzhaiyai mudukiya
kOla vEl vizhi – madavAr tham

kodiya mrukamatha puLaka thana kiri
kUdi nAdoRu(m) – mayal Aki

thuvaLa urukiya sarasa vitham athu
sOra vArithi – alaiyUdE

suzhalum enathu uyir mavuna parama
sukam makA uthathi – padiyAthO

kavaLa kara thala karada vikada
kapOla pUthara – mukamAna

kadavuL gaNapathi piRaku varum oru
kAraNA kathir – vadivElA

pavaLa marakatha kanaka vayira
kapAda kOpura – ari thErin

pariyum idaRiya purisai thazhuviya
pAkai mEviya – perumALE.