திருப்புகழ் 792 அனல் அப்பு அரி (திருவிடைக்கழி)

Thiruppugal 792 Analappuari

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் – தனதான

அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத்
தடர்பொய்க் குருதிக் – குடில்பேணா

அவலக் கவலைச் சவலைக் கலைகற்
றதனிற் பொருள்சற் – றறியாதே

குனகித் தனகிக் கனலொத் துருகிக்
குலவிக் கலவிக் – கொடியார்தங்

கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற்
குலைபட் டலையக் – கடவேனோ

தினைவித் தினநற் புனமுற் றகுறத்
திருவைப் புணர்பொற் – புயவீரா

தெளியத் தெளியப் பவளச் சடிலச்
சிவனுக் கொருசொற் – பகர்வோனே

கனகச் சிகரக் குலவெற் புருவக்
கறுவிப் பொருகைக் – கதிர்வேலா

கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக்
கழியிற் குமரப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் – தனதான

அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து
அடர் பொய்க் குருதிக் – குடில் பேணா

அவலக் கவலைச் சவலைக் கலை கற்று
அதனில் பொருள் சற்று – அறியாதே

குனகித் தனகிக் கனல் ஒத்து உருகிக்
குலவிக் கலவி – கொடியார் தம்

கொடுமைக் கடுமைக் குவளைக் கடையில்
குலை பட்டு அலையக் – கடவேனோ

தினை வித்தின நல் புனம் உற்ற குறத்
திருவைப் புணர் பொற் – புய வீரா

தெளியத் தெளியப் பவளச் சடிலச்
சிவனுக்கு ஒரு சொல் – பகர்வோனே

கனகச் சிகரக் குல வெற்பு உருவக்
கறுவிப் பொரு கைக் – கதிர் வேலா

கழியைக் கிழியக் கயல் தத்தும் இடைக்
கழியில் குமரப் – பெருமாளே

English

analap paripuk kakuNath rayamvaith
thadarpoyk kuruthik – kudilpENA

avalak kavalaic cavalaik kalaikat
RathaniR poruLsat – RaRiyAthE

kunakith thanakik kanaloth thurukik
kulavik kalavik – kodiyArthang

kodumaik kadumaik kuvaLaik kadaiyiR
kulaipat talaiyak – kadavEnO

thinaivith thinanaR punamut RakuRath
thiruvaip puNarpoR – puyaveerA

theLiyath theLiyap pavaLac cadilac
sivanuk korusoR – pakarvOnE

kanakac cikarak kulaveR puruvak
kaRuvip porukaik – kathirvElA

kazhiyaik kizhiyak kayalthath thumidaik
kazhiyiR kumarap – perumALE.

English Easy Version

anal appu ari pukka kuNa thrayam vaiththu
adar poyk kuruthik – kudil pENA

avalak kavalaic cavalaik kalai katRu
athanil poruL satRu – aRiyAthE

kunakith thanakik kanal oththu urukik
kulavik kalavi – kodiyAr tham

kodumaik kadumaik kuvaLaik kadaiyil
kulai pattu alaiyak – kadavEnO

thinai viththina nal punam utRa kuRath
thiruvaip puNar poR – puya veerA

theLiyath theLiyap pavaLac cadilac
civanukku oru sol – pakarvOnE

kanakac cikarak kula veRpu uruvak
kaRuvip poru kaik – kathir vElA

kazhiyaik kizhiyak kayal thaththum
idaikkazhiyil kumarap – perumALE