திருப்புகழ் 793 இரக்கும் அவர்க்கு (திருவிடைக்கழி)

Thiruppugal 793 Irakkumavarkku

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத்
தனத்தனதத் தனத்தனதத் – தனதான

இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற்
றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் – புலவோரென்


றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட்
டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் – றியல்மாதர்


குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப்
பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் – திடுமானின்

குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக்
குறித்திருபொற் கழற்புணையைத் – தருவாயே


அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக்
கலக்கணறக் குலக்கிரிபொட் – டெழவாரி


அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத்
தனைச்சிறையிட் டிடைக்கழியிற் – பயில்வோனே


கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக்
கழைத்தரளத் தினைத்தினையிற் – குறுவாளைக்


கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக்
கயத்தொடுகைப் பிடித்தமணப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத்
தனத்தனதத் தனத்தனதத் – தனதான

இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும் அற்ற
எனக்கு இயலுக்கு இசைக்கு எதிர் எப் – புலவோர் என்று

எடுத்து முடித் தடக் கை முடித்து இரட்டை உடுத்து இலைச்சினை இட்டு
அடைப்பை இடப் ப்ரபுத்துவம் உற்று – இயல் மாதர்

குரக்கு முகத்தினைக் குழலைப் பனிப் பிறை ஒப்பு எனப் புயல் ஒப்பு
எனக் குறுகி கலைக்குள் மறைத்திடு – மானின்

குளப்பு அடியில் சளப்பம் இடும் இப் பவக் கடலைக் கடக்க இனிக்
குறித்து இரு பொன் கழல் புணையைத் – தருவாயே

அரக்கர் அடல் கடக்க அமர்க் களத்து அடையப் புடைத்து உலகுக்கு
அலக்கண் அறக் குலக் கிரி பொட்டு – எழ வாரி

அனைத்தும் வறப்புறச் சுரர் கற்பகப் புரியில் புகக் கமலத்தனைச்
சிறையிட்டு இடைக்கழியில் – பயில்வோனே

கரக் கரடக் களிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த மணிக்
கழைத் தரளத்தினைத் தினையில் – குறுவாளை

கணிக் குறவக் குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வரக்
கயத்தொடு கைப் பிடித்த மணப் – பெருமாளே

English

irakkumavark kirakkamikuth thaLippanasop panaththilumat
Renakkiyaluk kisaikkethirep – pulavOren



Reduththumudith thadakkaimudith thirattaiyuduth thilacchinaiyit
tadaippaiyidap prapuththuvamut – RiyalmAthar

kurakkumukath thinaikkuzhalaip panippiRaiyop penappuyalop
penakkuRukik kalaikkuLmaRaith – thidumAnin

kuLappadiyiR chaLappadumip pavakkadalaik kadakkainik
kuRiththirupoR kazhaRpuNaiyaith – tharuvAyE

arakkaradaR kadakkaamark kaLaththadaiyap pudaiththulakuk
kalakkaNaRak kulakkiripot – tezhavAri


anaiththumvaRap puRacchurarkaR pakappuriyiR pukakkamalath
thanaicchiRaiyit tidaikkazhiyiR – payilvOnE

karakkaradak kaLitRumarup pulakkaiyiniR kozhiththamaNik
kazhaiththaraLath thinaiththinaiyiR – kuRuvALaik


kaNikkuRavak kuRicchiyiniR chilaikkuRavark kilacchaivarak
kayaththodukaip pidiththamaNap – perumALE.

English Easy Version

irakkum avarkku irakkam mikuththu aLippana soppanaththilum
atRa
enakk iyalukku isaikku ethir ep – pulavOr enRu

eduththu mudith thadak kai mudiththu irattai uduththu ilaicchinai ittu
adaippai idap prapuththuvam utRu – iyal mAthar

kurakku mukaththinaik kuzhalaip panip piRai oppu enap puyal oppu
enak kuRuki kalaikkuL maRaiththidu – mAnin

kuLappu adiyil saLappam idum ip pavak kadalaik kadakka inik
kuRiththu iru pon kazhal puNaiyaith – tharuvAyE

arakkar adal kadakka amark kaLaththu adaiyap pudaiththu ulakukku
alakkaN aRak kulak kiri pottu – ezha

vAri anaiththum vaRappuRac churar kaRpakap puriyil pukak kamalath
thanaic chiRaiyittu idaikkazhiyil – payilvOnE

karak karadak kaLitRu maruppu ulakkaiyinil kozhiththa maNik
kazhaith tharaLaththinaith thinaiyil – kuRuvALai

kaNik kuRavak kuRicchiyinil silai kuRavarkku ilacchai varak
kayaththodu kaip pidiththa maNap – perumALE.