Thiruppugal 794 Pagarumuththamizh
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தத்தனத் தனன தத்தனத்
தனன தத்தனத் – தனதான
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனு மெப்படிப் – பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் – தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் -பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ்ப லத்தினைத் – தரவேணும்
தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
சரவ ணத்தினிற் – பயில்வோனே
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத் – திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர்க் – குமரேசா
செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
றிருவி டைக்கழிப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தத்தனத் தனன தத்தனத்
தனன தத்தனத் – தனதான
பகரு முத்தமிழ்ப் பொருளும் மெய்த்தவப்
பயனும் எப்படிப் – பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு(ம்) நட்புறப்
பரவு கற்பகத் – தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் – பெருவாழ்வும்
புலன் அகற்றிடப் பலவிதத்தினைப்
புகழ் பலத்தினைத் – தரவேணும்
தகரில் அற்றகைத் தலம்விட பிணைச்
சரவ ணத்தினிற் – பயில்வோனே
தனிவ னத்தினிற் புனமறத்தியை
தழுவு பொற்புயத் – திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல் அயிற்சுடர்க் – குமரேசா
செழுமலர்ப்பொழிற் குரவமுற்ற பொற்றிருவி
டைக்கழிப் – பெருமாளே
English
pagaru muththamizh poruLu meyththavap
payanum eppadip – pala vAzhvum
pazhaiya muththiyiR padhamu natpuRap
paravu kaRpagath – tharu vAzhvum
pugaril budhdhiyutr arasu petruRap
poliyum arbuthap – peru vAzhvum
pulan agatridap pala vidhaththinaip
pugazh balath thinaith – tharavENum
thagaril atra kaith thalam vidap piNai
saravaNath thiniR – payilvOnE
thani vanath thiniR punam aRath thiyaith
thazhuvu poR buyath – thirumArbA
sikara veRpinaip pagirum viththagath
thiRal ayiR sudark – kumarEsA
sezhu malarp pozhiR kurava mutra pOR
thiruvidaik kazhip – perumALE.
English Easy Version
pagaru muththamizh poruLum meyththavap
payanum eppadip – pala vAzhvum
pazhaiya muththiyiR padhamum natpuRap
paravu kaRpagath – tharu vAzhvum
pugaril budhdhiyutr arasu petruRap
poliyum arbuthap – peru vAzhvum
pulan agatridap pala vidhaththinaip
pugazh balath thinai – tharavENum
thagaril atra kaith thalam vida piNai
saravaNath thiniR – payilvOnE
thani vanath thiniR punamaRaththiyaith
thazhuvu poR buyath – thirumArbA
sikara veRpinaip pagirum viththagath
thiRal ayiR sudark – kumarEsA
sezhu malarp pozhiR kurava mutra pOR
thiruvidaik kazhip – perumALE