திருப்புகழ் 797 பெருக்க மாகிய (திருவிடைக்கழி)

Thiruppugal 797 Perukkamagiya

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன – தனதான

பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக
நகைத்து வாமென அமளிய ருகுவிரல்
பிடித்து போயவர் தொடையொடு தொடைபட – வுறவாடிப்

பிதற்றி யேயள விடுபண மதுதம
திடத்தி லேவரு மளவுந லுரைகொடு
பிலுக்கி யேவெகு சரசமொ டணைகுவர் – கனமாலாய்

முருக்கி னேரித ழமுதுப ருகுமென
வுரைத்து லீலைக ளதிவித மொடுமலை
முலைக்கு ளேதுயில் கொளமயல் புரிகுவர் – பொருள்தீரின்


முறுக்கி யேயுதை கொடுவசை யுரைதரு
மனத்து ரோகிக ளிடுதொழில் வினையற
முடுக்கி யேயுன திருகழல் மலர்தொழ – அருள்தாராய்

நெருக்கி யேவரு மவுணர்கள் குலமற
வுறுக்கி யேமயில் முதுகினில் விசைகொடு
நிலத்தி லேசமர் பொருதவ ருயிர்பலி – கொளும்வேலா


நெகத்தி லேஅயன் முடிபறி யிறைதிரி
புரத்தி லேநகை புரிபர னடியவர்
நினைப்பி லேயருள் தருசிவ னுதவிய – புதல்வோனே

செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியை
மருக்கு லாவிய மலரணை மிசைபுணர்
திருக்கை வேல்வடி வழகிய குருபர – முருகோனே

சிறக்கு மாதவ முனிவரர் மகபதி
யிருக்கு வேதனு மிமையவர் பரவிய
திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன – தனதான

பெருக்கமாகிய நிதியினர் வரின் மிக
நகைத்து வாம் என அமளி அருகு விரல்
பிடித்து போய் அவர் தொடையோடு தொடை பட – உறவாடி

பிதற்றியே அளவிடு பணம் அது தமது
இடத்திலே வரும் அளவு நல் உரை கொ(ண்)டு
பிலுக்கியே வெகு சரசமோடு அணைகுவர் – கன மாலாய்

முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என
உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை
முலைக்கு(ள்)ளே துயில் கொள மயல் புரிகுவர் – பொருள் தீரின்

முறுக்கியே உதை கொடு வசை உரை தரு
மனத் துரோகிகள் இடு தொழில் வினை அற
முடுக்கியே உனது இரு கழல் மலர் தொழ – அருள் தாராய்

நெருக்கியே வரும் அவுணர்கள் குலம் அற
உறுக்கியே மயில் முதுகினில் விசை கொடு
நிலத்திலே சமர் பொருது அவர் உயிர் பலி – கொளும் வேலா

நெகத்திலே அயன் முடி பறி இறை திரி
புரத்திலே நகை புரி பரன் அடியவர்
நினைப்பிலே அருள் தரு சிவன் உதவிய – புதல்வோனே

செருக்கு வேடுவர் தரும் ஒரு சிறுமியை
மருக் குலாவிய மலர் அணை மிசை புணர்
திருக் கை வேல் வடிவு அழகிய குருபர – முருகோனே

சிறக்கு மா தவ முனிவரர் மக பதி
இருக்கு வேதனும் இமையவர் பரவிய
திருக் குரா அடி நிழல் தனில் உலவிய – பெருமாளே

English

perukka mAkiya nithiyinar varinmika
nakaiththu vAmena amaLiya rukuviral
pidiththu pOyavar thodaiyodu thodaipada – vuRavAdip

pithatRi yEyaLa vidupaNa mathuthama
thidaththi lEvaru maLavuna luraikodu
pilukki yEveku sarasamo daNaikuvar – kanamAlAy

murukki nEritha zhamuthupa rukumena
vuraiththu leelaika Lathivitha modumalai
mulaikku LEthuyil koLamayal purikuvar – poruLtheerin

muRukki yEyuthai koduvasai yuraitharu
manaththu rOkika Liduthozhil vinaiyaRa
mudukki yEyuna thirukazhal malarthozha – aruLthArAy

nerukki yEvaru mavuNarkaL kulamaRa
vuRukki yEmayil muthukinil visaikodu
nilaththi lEsamar poruthava ruyirpali – koLumvElA

nekaththi lEayan mudipaRi yiRaithiri
puraththi lEnakai puripara nadiyavar
ninaippi lEyaruL tharusiva nuthaviya – puthalvOnE

serukku vEduvar tharumoru siRumiyai
marukku lAviya malaraNai misaipuNar
thirukkai vElvadi vazhakiya gurupara – murukOnE

siRakku mAthava munivarar makapathi
yirukku vEthanu mimaiyavar paraviya
thirukku rAvadi nizhalthani lulaviya – perumALE

English Easy Version

perukkamAkiya nithiyinar varin mika
nakaiththu vAm ena amaLi aruku viral
pidiththu pOy avar thodaiyOdu thodai pada – uRavAdi

pithatRiyE aLavidu paNam athu thamathu
idaththilE varum aLavu nal urai ko(N)du
pilukkiyE veku sarasamOdu aNaikuvar – kana mAlAy

murukki nEr ithazh amuthu parukum ena
uraiththu leelaikaL athi vithamodu malai
mulaikku(L)LE thuyil koLa mayal purikuvar – poruL theerin

muRukkiyE uthai kodu vasai urai tharu
manath thurOkikaL idu thozhil vinai aRa
mudukkiyE unathu iru kazhal malar thozha – aruL thArAy

nerukkiyE varum avuNarkaL kulam aRa
uRukkiyE mayil muthukinil visai kodu
nilaththilE samar poruthu avar uyir pali – koLum vElA

nekaththilE ayan mudi paRi iRai thiri
puraththilE nakai puri paran adiyavar
ninaippilE aruL tharu sivan uthaviya – puthalvOnE

serukku vEduvar tharum oru siRumiyai
maruk kulAviya malar aNai misai puNar
thiruk kai vEl vadivu azhakiya gurupara – murukOnE

siRakku mA thava munivarar maka pathi
irukku vEthanum imaiyavar paraviya
thiruk kurA adi nizhal thanil ulaviya – perumALE.