திருப்புகழ் 800 சூழ்ந்து ஏன்ற துக்க (தான் தோன்றி)

Thiruppugal 800 Suzhndhuendrathukka

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன
தாந்தாந்த தத்ததன – தனதான

சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்தூன்று மப்பில்வளர்
தூண்போன்ற இக்குடிலு – முலகூடே

சோர்ந் தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு
தோம்பாங்கை யுட்பெரிது – முணராமே

வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள்
வேண்டீங்கை யிட்டுவர – குழுவார்போல்

வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை
வாம்பாங்கில் நற்கழல்கள் – தொழஆளாய்


வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள்
வான்தோன்று மற்றவரு – மடிபேண

மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும்
வான்தீண்ட வுற்றமயில் – மிசையேறித்

தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர்
சாய்ந்தேங்க வுற்றமர்செய் – வடிவேலா

தான்தோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ
தான்தோன்றி நிற்கவல – பெருமாளே.

பதம் பிரித்தது

தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன
தாந்தாந்த தத்ததன – தனதான

சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் அப்பில் வளர்
தூண் போன்ற இக்குடிலும் – உலகு ஊடே

சோர்ந்து ஊய்ந்தும் அக்கினியில் நூண் சாம்பல் பட்டுவிடு
தோம் பாங்கை உள் பெரிதும் – உணராமே

வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள்
வேண்டி ஈங்கை இட்டு வரகு – உழுவார் போல்

வே(கு)ம் பாங்கும் அற்று வினையா(கு)ம் பாங்கும் அற்று விளை
வா(கு)ம் பாங்கில் நல் கழல்கள் – தொழ ஆளாய்

வாழ்ந்து ஆன்ற கற்புடைமை வாய்ந்து ஆய்ந்த நல் தவர்கள்
வான் தோன்று மற்றவரும் – அடிபேண

மான் போன்ற பொன் தொடிகள் தாம் தோய்ந்த நல் புயமும்
வான் தீண்ட உற்ற மயில் – மிசை ஏறி

தாழ்ந்து ஆழ்ந்த மிக்க கடல் வீழ்ந்து ஈண்டு வெற்பு அசுரர்
சாய்ந்து ஏங்க உற்று அமர் – செய் வடிவேலா

தான் தோன்றியப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ
தான் தோன்றி நிற்க வ(ல்)ல – பெருமாளே

English

sUzhnthEnRa thukkavinai sErnthUnRu mappilvaLar
thUNpOnRa ikkudilu – mulakUdE

sOrnthUynthu makkiniyil nUNsAmpal pattuvidu
thOmpAngai yutperithu – muNarAmE

veezhntheeNdi naRkalaikaL thAnthONdi mikkaporuL
vENdeengai yittuvara – kuzhuvArpOl

vEmpAngu matRuvinai yAmpAngu matRuviLai
vAmpAngil naRkazhalkaL – thozhaALAy

vAzhnthAnRa kaRpudaimai vAynthAyntha natRavarkaL
vAnthOnRu matRavaru – madipENa

mAnpOnRa potRodikaL thAnthOyntha naRpuyamum
vAntheeNda vutRamayil – misaiyERith

thAzhnthAzhntha mikkadal veezhntheeNdu veRpasurar
sAynthEnga vutRamarsey – vadivElA


thAnthOnRi yapparkudi vAzhntheenRa naRputhalva
thAnthOnRi niRkavala – perumALE.

English Easy Version

sUzhnthu EnRa thukka vinai sErnthu UnRum appil vaLar
thUN pOnRa ikkudilum – ulaku UdE

sOrnth Uynthum akkiniyil nUN sAmpal pattuvidu
thOm pAngai uL perithum – uNarAmE

veeznthu eeNdi nal kalaikaL thAn thONdi mikka poruL
vENdi eengai ittu varaku – uzhuvAr pOl

vE(ku)m pAngum atRu vinaiyA(ku)m pAngum atRu viLai
vA(ku)m pAngil nal kazhalkaL – thozha ALAy

vAzhnthu AnRa kaRpudaimai vAynthu Ayntha nal thavarkaL
vAn thOnRu matRavarum – adipENa

mAn pOnRa pon thodikaL thAm thOyntha nal puyamum
vAn theeNda utRa mayil – misai ERi

thAzhnthu Azhntha mikka kadal veezhnthu eeNdu veRpu asurar
sAynthu Enga utRu amar sey – vadivElA

thAn thOnRiyappar kudi vAzhnthu eenRa nal puthalva
thAn thOnRi niRka va(l)la – perumALE.