திருப்புகழ் 801 எந்தன்சடலங்கம் (கந்தன்குடி)

Thiruppugal 801 Endhansadalangam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன
தந்தந்தன தந்தந்தன – தனதான

எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
யென்றுந்துயர் பொன்றும்படி – யொருநாளே

இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
யென்றும்படி பந்தங்கெட – மயிலேறி

வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
மண்டும்படி நின்றுஞ்சுட – ரொளிபோலும்

வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
வண்டன்தமி யன்றன்பவம் – ஒழியாதோ

தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு – மணியாரம்

சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
சம்புந்தொழ நின்றுந்தினம் – விளையாடும்

கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு – வருவோனே

கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
கந்தன்குடி யின்தங்கிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன
தந்தந்தன தந்தந்தன – தனதான

எந்தன்சடல அங்கம் பல பங்கம்படு தொந்தங்களை
யென்றுந்துயர் பொன்றும்படி – யொருநாளே

இன்பந்தரு செம்பொன்கழலுந்தும் கழல் தந்தும்பினை
யென்றும்படி பந்தங்கெட – மயிலேறி

வந்தும் பிரசண்டம் பகிரண்டம் புவியெங்கும் திசை
மண்டும்படி நின்றுஞ்சுட – ரொளிபோலும்

வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன் துகளென்றுங்கொளும்
வண்டன் தமி யன்றன்பவம் – ஒழியாதோ

தந்தந்தன திந்திந்திமி யென்றும் பல சஞ்சங்கொடு
தஞ்சம்புரி கொஞ்சுஞ் சிறு – மணியாரம்

சந்தந்தொனி கண்டும் புயலங்கன்சிவனம்பன்பதி
சம்புந்தொழ நின்றும் தினம் – விளையாடும்

கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழும் அன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு – வருவோனே

கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும் புனல் தங்குஞ்சுனை
கந்தன்குடி யின்தங்கிய – பெருமாளே

English

endhansada langampala bangampadu thondhankaLai
endrunthuyar pondrumpadi – orunALE

inbantharu semponkazha lundhunkazhal thandhumpinai
endrumpadi bandhang keda – mayilERi

vandhumpira chaNdambagi raNdambuvi engundhisai
maNdumpadi nindrum suda – roLipOlum

vanjankudi koNdunthiri nenjanthuga LendrunkoLum
vaNdanthami yandranbavam – ozhiyAdhO

thandhanthana dhindhindhimi endrumpala sanchankodu
thanjampuri konjum siRu – maNiyAram

chandham dhoni kaNdumpuya langansiva nambanpathi
sambunthozha nindrundhinam – viLaiyAdum

kandhanguha nendranguru vendrunthozhu manbankavi
kaNduyndhida andranbodu – varuvOnE

kaNdinkani sindhunsuvai pongumpunal thangunj sunai
kandhankudi yinthangiya – perumALE.

English Easy Version

endhansada langampala bangampadu thondhankaLai
endrunthuyar pondrumpadi – orunALE

inbantharu semponkazha lundhunkazhal thandhum pinai
endrumpadi bandhang keda – mayilERi

vandhum pira chaNdambagi raNdambuvi engundhisai
maNdumpadi nindrum suda – roLipOlum

vanjankudi koNdunthiri nenjan thugaL endrunkoLum
vaNdan thami yandranbavam – ozhiyAdhO

thandhanthana dhindhindhimi endrum pala sanchankodu
thanjampuri konjum siRu – maNiyAram

chandham dhoni kaNdum puya langansiva nambanpathi
sambunthozha nindrundhinam – viLaiyAdum

kandhanguha nendranguru vendrunthozhu manban kavi
kaNduyndhida andranbodu – varuvOnE

kaNdinkani sindhunsuvai pongumpunal thangunj sunai
kandhankudi yinthangiya – perumALE.