திருப்புகழ் 803 பனகப் படமிசைந்த (திலதைப்பதி)

Thiruppugal 803 Panagappadamisaindha

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த – தனதான

பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
படர்பொற் பணிபு னைந்த – முலைமீதிற்

பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை
படுபுட் பவன முன்றி – லியலாரும்

அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல்
அழகிற் றனித ளர்ந்து – மதிமோக

மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப
அலையிற் றிரிவ னென்று – மறிவேனோ

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த – தனதானா

தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
தனிமத் தளமு ழங்க – வருவோனே

செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி
செறிநற் கழைதி ரண்டு – வளமேவித்

திருநற் சிகரி துங்க வரையைப் பெருவு கின்ற
திலதைப் பதிய மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த – தனதான

ப(ன்)னகப் படம் இசைந்த முழையில் தரள(ம்) நின்று
படர் பொன் பணி புனைந்த – முலை மீதே

பரிவு அற்று எரியு(ம்) நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை
படு புள் பவன(ம்) முன்றில் – இயல் ஆரும்

அ(ன்)னம் ஒத்திடு சிறந்த நடையில் கிளியின் இன் சொல்
அழகில் தனி தளர்ந்தும் – அதி மோகம்

அளவிப் புளக கொங்கை குழையத் தழுவி இன்ப
அலையில் திரிவன் என்றும் – அறிவேனோ

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த – தனதானா

தகிடத் தகிட தந்த திமிதத் திமித என்று
தனி மத்தளம் முழங்க – வருவோனே

செ(ம்) நெ(ல்) நற் கழனி பொங்கி திமிலக் கமலம் அண்டி
செறி நல் கழை திரண்டு – வளம் மேவி

திரு நல் சிகரி துங்க வரையைப் பொருவுகின்ற
திலதைப்பதி அமர்ந்த – பெருமாளே

English

panakap padami saintha muzhaiyit RaraLa ninRu
padarpoR paNipu naintha – mulaimeethiR

parivat Reriyu nenjil mukiliR kariya koNdai
paduput pavana munRi – liyalArum

anamoth thidusi Rantha nadaiyiR kiLiyi ninsol
azhakit Ranitha Larnthu – mathimOka

maLavip puLaka kongai kuzh aiyath thazhuvi yinpa
alaiyit Ririva nenRu – maRivEnO

thananath thanana thantha thananath thanana thantha
thananath thanana thantha – thanathAnA

thakidath thakida thantha thimithath thimitha venRu
thanimath thaLamu zhanga – varuvOnE

senenaR kazhani pongi thimilak kamala maNdi
seRinaR kazhaithi raNdu – vaLamEvith

thirunaR chikari thunga varaiyaip peruvu kinRa
thilathaip pathiya marntha – perumALE.

English Easy Version

pa(n)nakap padam isaintha muzhaiyil tharaLa(m) ninRu
padar pon paNi punaintha – mulai meethE

parivu atRu eriyu(m) nenjil mukilin kariya koNdai
padu puL pavana(m) munRil – iyal Arum

a(n)nam oththidu siRantha nadaiyil kiLiyin in sol
azhakil thani thaLarnthum – athi mOkam

aLavip puLaka kongai kuzhaiyath thazhuvi inpa
alaiyil thirivan enRum – aRivEnO

thananath thanana thantha thananath thanana thantha
thananath thanana thantha – thanathAnA

thakidath thakida thantha thimithath thimitha enRu
thani maththaLam muzhanga – varuvOnE

se(m) ne(l) naR kazhani pongi thimilak kamalam aNdi
seRi nal kazhai thiraNdu – vaLam mEvi

thiru nal sikari thunga varaiyaip poruvukinRa
thiladhaippadhi amarntha – perumALE.,