திருப்புகழ் 805 சோதி மந்திரம் (திருவம்பர்)

Thiruppugal 805 Sodhimandhiram

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தந்தனந் தான தந்ததன
தான தந்தனந் தான தந்ததன
தான தந்தனந் தான தந்ததன – தந்ததான

சோதி மந்திரம் போத கம்பரவு
ஞான கம்பரந் தேயி ருந்தவெளி
தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட – முங்கொளாமல்

சூது பந்தயம் பேசி யஞ்சுவகை
சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு
தோத கம்பரிந் தாடு சிந்துபரி – கந்துபாயும்

வீதி மண்டலம் பூண மர்ந்துகழி
கோல மண்டிநின் றாடி யின்பவகை
வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ – டுங்குபோதில்

வேதி யன்புரிந் தேடு கண்டளவி
லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட
வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட – ரென்றுபோமோ

ஆதி மண்டலஞ் சேர வும்பரம
சோம மண்டலங் கூட வும்பதும
வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப – டர்ந்ததோகை

ஆழி மண்டலந் தாவி யண்டமுத
லான மண்டலந் தேடி யொன்றதொமு
கான மண்டலஞ் சேட னங்கணயில் – கொண்டுலாவிச்

சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடி
யாகி விண்பறந் தோட மண்டியொரு
சூரி யன்திரண் டோட கண்டுநகை – கொண்டவேலா

சோடை கொண்டுளங் கான மங்கைமய
லாடி இந்திரன் தேவர் வந்துதொழ
சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தான தந்தனந் தான தந்ததன
தான தந்தனந் தான தந்ததன
தான தந்தனந் தான தந்ததன – தந்ததான

சோதி மந்திரம் போதகம் பரவு
ஞான அகம் பரந்தே இருந்த வெளி
தோடு அலர்ந்த பொன் பூ இருந்த இடமும் – கொ(ள்)ளாமல்

சூது பந்தயம் பேசி அஞ்சு வகை
சாதி விண் பறிந்து ஓடு கண்டர் மிகு
தோதகம் பரிந்து ஆடு சிந்து பரி – கந்து பாயும்

வீதி மண்டலம் பூண் அமர்ந்து கழி
கோல(ம்) மண்டி நின்று ஆடி இன்ப வகை
வேணும் என்று கண் சோர ஐம்புலன் – ஒடுங்கு போதில்

வேதியன் புரிந்து ஏடு கண்ட அளவில்
ஓடி வெம் சுடும் காடு அணைந்து சுட
வீழ்கி வெந்து உகுந்தீடும் இந்த இடர் – என்று போமோ

ஆதி(த்த) மண்டலம் சேரவும் பரம
சோம மண்டலம் கூடவும் பதும
வாளன் மண்டலம் சாரவும் சுழி – படர்ந்த தோகை

ஆழி மண்டலம் தாவி அண்ட முதலான
மண்டலம் தேடி ஒன்ற அதொ முக(மா)ன
மண்டலம் சேடன் அங்கு அ(ண்)ண அயில் – கொண்டு உலாவி

சூதர் மண்டலம் தூள் எழுந்து
பொடியாகி விண் பறந்து ஓட மண்டி
ஒரு சூரியன் திரண்டு ஓட கண்டு நகை – கொண்ட வேலா

சோடை கொண்டு உளம் கான மங்கை மயல்
ஆடி இந்திரன் தேவர் வந்து தொழ
சோழ மண்டலம் சாரும் அம்பர் வளர் – தம்பிரானே

English

sOdhi mandhiram pOtha kamparavu
njAna kamparan thEyi runthaveLi
thOda larnthapon pUvi runthaida – mungoLAmal

cUthu panthayam pEsi yanjuvakai
sAthi viNpaRin thOdu kaNdarmiku
thOtha kampAin thAdu sinthupari – kanthupAyum

veethi maNdalam pUNa marnthukazhi
kOla maNdinin RAdi yinpavakai
vENu menRukaN sOra aimpulano – dungupOthil

vEthi yanpurin thEdu kaNdaLavi
lOdi vemchudung kAda Nainthusuda
veezhki venthukun theedu minthaida – renRupOmO

Athi maNdalanj chEra vumparama
sOma maNdalang kUda vumpathuma
vALan maNdalanj chAra vumchuzhipa – darnthathOkai

Azhi maNdalan thAvi yaNdamutha
lAna maNdalan thEdi yonRathomu
kAna maNdalanj chEda nangaNayil – koNdulAvic

cUthar maNdalan thULe zhunthupodi
yAki viNpaRan thOda maNdiyoru
cUri yanthiraN dOda kaNdunakai – koNdavElA

sOdai koNduLang kAna mangaimaya
lAdi inthiran thEvar vanthuthozha
chOzha maNdalanj chAru mamparvaLar – thambirAnE.

English Easy Version

sOdhi mandhiram pOthakam paravu
njAna akam paranthE iruntha veLi
thOdu alarntha pon pU iruntha idamum – ko(L)LAmal

cUthu panthayam pEsi anju vakai
sAthi viN paRinthu Odu kaNdar miku
thOthakam parinthu Adu sinthu pari – kanthu pAyum

veethi maNdalam pUN amarnthu kazhi kOla(m)
maNdi ninRu Adi inpa vakai
vENum enRu kaN sOra aimpulan – odungu pOthil

vEthiyan purinthu Edu kaNda aLavil
Odi vem chudum kAdu aNainthu suda
veezhki venthu ukuntheedum intha idar – enRu pOmO

Athi(ththa) maNdalam sEravum parama
sOma maNdalam kUdavum pathuma
vALan maNdalam chAravum chuzhi – padarntha thOkai

Azhi maNdalam thAvi aNda muthalAna
maNdalam thEdi onRa atho muka(mA)na
maNdalam sEdan angu a(N)Na ayil – koNdu ulAvi

cUthar maNdalam thUL ezhunthu podiyAki
viN paRanthu Oda maNdi oru cUriyan
thiraNdu Oda kaNdu nakai – koNda vElA

sOdai koNdu uLam kAna mangai mayal
Adi inthiran thEvar vanthu thozha
sOzha maNdalam sArum ampar vaLar – thambirAnE