திருப்புகழ் 806 காதோடு தோடிகலி (திருமாகாளம்).

Thiruppugal 806 Kadhoduthodikali

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானான தானதன தானதன தானதன
தானான தானதன தானதன தானதன
தானான தானதன தானதன தானதன – தனதான

காதோடு தோடிகலி யாடவிழி வாள்சுழல
கோலாக லாரமுலை மார்புதைய பூணகல
காரோடு கூடளக பாரமல ரோடலைய – அணைமீதே


காலோடு காலிகலி யாடபரி நூபுரமொ
டேகாச மானவுடை வீசியிடை நூல்துவள
காவீர மானஇத ழூறல்தர நேரமென – மிடறோதை

நாதான கீதகுயில் போலஅல்குல் மால்புரள
மார்போடு தோள்கரமொ டாடிமிக நாணழிய
நானாவி நோதமுற மாதரொடு கூடிமயல் – படுவேனை

நானாரு நீயெவனெ னாமலென தாவிகவர்
சீர்பாத மேகவலை யாயுமுன வேநிதமு
நாதாகு மாரமுரு காஎனவு மோதஅருள் – புரிவாயே

பாதாள சேடனுட லாயிரப ணாமகுட
மாமேரொ டேழுகட லோதமலை சூரருடல்
பாழாக தூளிவிணி லேறபுவி வாழவிடு – சுடர்வேலா

பாலாழி மீதரவின் மேல்திருவொ டேயமளி
சேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரிய
பாரேவை யேவியமு ராரியைவர் தோழனரி – மருகோனே

மாதாபு ராரிசுக வாரிபரை நாரியுமை
ஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன்
மாடேறி யாடுமொரு நாதன்மகிழ் போதமருள் – குருநாதா


வானோர்க ளீசன்மயி லோடுகுற மாதுமண
வாளாகு காகுமர மாமயிலின் மீதுதிரு
மாகாள மாநகரில் மாலொடடி யார்பரவு – பெருமாளே.

பதம் பிரித்தது

தானான தானதன தானதன தானதன
தானான தானதன தானதன தானதன
தானான தானதன தானதன தானதன – தனதான

காதோடு தோடு இகலி ஆட விழி வாள் சுழல
கோலாகலம் ஆர முலை மார் புதைய பூண் அகல
காரோடு கூட அளக பார(ம்) மலரோடு அலைய – அணை மீதே

காலோடு கால் இகலி ஆட பரி நூபுரமொடு
ஏகாசமான உடை வீசி இடை நூல் துவள
காவீரமான இதழ் ஊறல் தர நேர(ய)ம் என – மிட(ற்)று ஓதை

நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள
மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய
நானா விநோதம் உற மாதரொடு கூடி மயல் – படுவேனை

நான் ஆரு நீ எவன் எனாமல் எனது ஆவி கவர்
சீர் பாதமே கவலையாயும் உ(ன்)னவே நிதமு(ம்)
நாதா குமார முருகா எனவும் ஓத – அருள் புரிவாயே

பாதாள சேடன் உடல் ஆயிர(ம்) பணா மகுட(ம்)
மா மேரு ஒடே ஏழு கடல் ஓத(ம்) மலை சூரர் உடல்
பாழாக தூளி வி(ண்)ணில் ஏற புவி வாழவிடு – சுடர் வேலா

பால் ஆழி மீது அரவின் மேல் திருவொடே அமளி
சேர் நீல ரூபன் வலி ராவண குழாம் இரிய
பார் ஏவை ஏவிய முராரி ஐவர் தோழன் அரி – மருகோனே

மாதா புராரி சுகவாரி பரை நாரி உமை
ஆகாச ரூபி அபிராமி வலம் மேவும் சிவன்
மாடு ஏறி ஆடும் ஒரு நாதன் மகிழ் போதம் அருள் – குருநாதா

வானோர்கள் ஈசன் மயிலோடு குற மாது மணவாளா
குகா குமர மா மயிலின் மீது திரு மாகாள மா
நகரில் மாலொடு அடியார் பரவு – பெருமாளே

English

kAthOdu thOdikali yAdavizhi vALsuzhala
kOlAka lAramulai mArputhaiya pUNakala
kArOdu kUdaLaka pAramala rOdalaiya – aNaimeethE

kAlOdu kAlikali yAdapari nUpuramo
dEkAsa mAnavudai veesiyidai nUlthuvaLa
kAveera mAnaitha zhURalthara nEramena – midaROthai


nAthAna keethakuyil pOlaalkul mAlpuraLa
mArpOdu thOLkaramo dAdimika nANazhiya
nAnAvi nOthamuRa mAtharodu kUdimayal – paduvEnai

nAnAru neeyevane nAmalena thAvikavar
seerpAtha mEkavalai yAyumuna vEnithamu
nAthAku mAramuru kAenavu mOthaaruL – purivAyE

pAthALa sEdanuda lAyirapa NAmakuda
mAmEro dEzhukada lOthamalai cUrarudal
pAzhAka thULiviNi lERapuvi vAzhavidu – sudarvElA

pAlAzhi meetharavin mElthiruvo dEyamaLi
sErneela rUpanvali rAvaNaku zhAmiriya
pArEvai yEviyamu rAriyaivar thOzhanari – marukOnE

mAthApu rArisuka vAriparai nAriyumai
AkAsa rUpiyapi rAmivala mEvusivan
mAdERi yAdumoru nAthanmakizh pOthamaruL – gurunAthA


vAnOrka Leesanmayi lOdukuRa mAthumaNa
vALAku kAkumara mAmayilin meethuthiru
mAkALa mAnakaril mAlodadi yArparavu – perumALE.

English Easy Version

kAthOdu thOdu ikali Ada vizhi vAL suzhala
kOlAkalam Ara mulai mAr puthaiya pUN akala
kArOdu kUda aLaka pAra(m) malarOdu alaiya – aNai meethE

kAlOdu kAl ikali Ada pari nUpuramodu
EkAsamAna udai veesi idai nUl thuvaLa
kAveeramAna ithazh URal thara nEra(ya)m ena – mida(R)Ru Othai

nAthAna keetha kuyil pOla alkul mAl puraLa
mArpOdu thOL karamodu Adi mika nAN azhiya
nAnA vinOtham uRa mAtharodu kUdi mayal – paduvEnai

nAn Aru nee evan enAmal enathu Avi kavar
seer pAthamE kavalaiyAyum u(n)navE nithamu(m)
nAthA kumAra murukA enavum Otha aruL – purivAyE

pAthALa sEdan udal Ayira(m) paNA makuda(m)
mA mEru odE Ezhu kadal Otha(m) malai cUrar udal
pAzhAka thULi vi(N)Nil ERa puvi vAzhavidu – sudar vElA

pAl Azhi meethu aravin mEl thiruvodE amaLi
sEr neela rUpan vali rAvaNa kuzhAm iriya
pAr Evai Eviya murAri aivar thOzhan ari – marukOnE

mAthA purAri sukavAri parai nAri umai
AkAsa rUpi apirAmi valam mEvum sivan
mAdu ERi Adum oru nAthan makizh pOtham aruL – gurunAthA

vAnOrkaL eesan mayilOdu kuRa mAthu maNavALA
kukA kumara mA mayilin meethu thiru mAkALa
mA nakaril mAlodu adiyAr paravu – perumALE