திருப்புகழ் 809 தருவூரிசை (வழுவூர்)

Thiruppugal 809 Tharuvurisai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன – தனதானா

தருவூரிசை யாரமு தார்நிகர்
குயிலார்மொழி தோதக மாதர்கள்
தணியாமய லாழியி லாழவு – மமிழாதே

தழலேபொழி கோரவி லோசன
மெறிபாசம காமுனை சூலமுள்
சமனார்முகில் மேனிக டாவினி – லணுகாதே

கருவூறிய நாளுமு நூறெழு
மலதேகமு மாவலு மாசைக
படமாகிய பாதக தீதற – மிடிதீரக்

கனிவீறிய போதமெய் ஞானமு
மியலார்சிவ நேசமு மேவர
கழல்சேரணி நூபுர தாளிணை – நிழல்தாராய்

புருகூதன்மி னாளொரு பாலுற
சிலைவேடுவர் மானொரு பாலுற
புதுமாமயில் மீதணை யாவரு – மழகோனே

புழுகார்பனிர் மூசிய வாசனை
யுரகாலணி கோலமென் மாலைய
புரிநூலுமு லாவுது வாதச – புயவீரா

மருவூர்குளிர் வாவிகள் சோலைகள்
செழிசாலிகு லாவிய கார்வயல்
மகதாபத சீலமு மேபுனை – வளமூதூர்

மகதேவர்பு ராரிச தாசிவர்
சுதராகிய தேவசி காமணி
வழுவூரில்நி லாவிய வாழ்வருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன – தனதானா

தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர்
குயிலார் மொழி தோதக மாதர்கள்
தணியா மயல் ஆழியில் ஆழவும் – அமிழாதே

தழலே பொழி கோர விலோசனம்
எறி பாச மகா முனை சூலம் உள்
சமனார் முகில் மேனி கடாவினில் – அணுகாதே

கரு ஊறிய நாளு மு(ந்)நூறு எழு மல
தேகமும் ஆவலும் ஆசை
கபடம் ஆகிய பாதக தீது அற – மிடி தீர

கனி வீறிய போத(ம்) மெய் ஞானமும்
இயலார் சிவ நேசமுமே வர
கழல் சேர் அணி நூபுர தாள் இணை – நிழல் தாராய்

புருகூதன் மி(ன்)னாள் ஒரு பால் உற
சிலை வேடுவர் மான் ஒரு பால் உற
புதுமா மயில் மீது அணையாவரும் – அழகோனே

புழுகு ஆர் ப(ன்)னிர் மூசிய வாசனை
உர(ம்) கால் அணி கோல மென் மாலைய
புரி நூலும் உலாவு துவாதச – புய வீரா

மருவூர் குளிர் வாவிகள் சோலைகள்
செழி சாலி குலாவிய கார் வயல்
மக தாபத சீலமுமே புனை – வள மூதூர்

மக தேவர் புராரி சதாசிவர்
சுதர் ஆகிய தேவ சிகாமணி
வழுவூரில் நிலாவிய வாழ்வருள் – பெருமாளே.

English

tharuvUrisai yAramu thArnikar
kuyilArmozhi thOthaka mAtharkaL
thaNiyAmaya lAzhiyi lAzhavu – mamizhAthE

thazhalEpozhi kOravi lOsana
meRipAsama kAmunai cUlamuL
samanArmukil mEnika dAvini – laNukAthE

karuvURiya nALumu nURezhu
malathEkamu mAvalu mAsaika
padamAkiya pAthaka theethaRa – miditheerak

kaniveeRiya pOthamey njAnamu
miyalArsiva nEsamu mEvara
kazhalsEraNi nUpura thALiNai – nizhalthArAy

purukUthanmi nALoru pAluRa
silaivEduvar mAnoru pAluRa
puthumAmayil meethaNai yAvaru – mazhakOnE

puzhukArpanir mUsiya vAsanai
yurakAlaNi kOlamen mAlaiya
purinUlumu lAvuthu vAthasa – puyaveerA

maruvUrkuLir vAvikaL sOlaikaL
sezhisAliku lAviya kArvayal
makathApatha seelamu mEpunai – vaLamUthUr

makathEvarpu rArisa thAsivar
sutharAkiya thEvasi kAmaNi
vazhuvUrilni lAviya vAzhvaruL – perumALE.

English Easy Version

tharu Ur isaiyAr amuthu Ar nikar
kuyilAr mozhi thOthaka mAtharkaL
thaNiyA mayal Azhiyil Azhavum – amizhAthE

thazhalE pozhi kOra vilOsanam
eRi pAsa makA munai cUlam uL
samanAr mukil mEni kadAvinil – aNukAthE

karu URiya nALu mu(n)nURu ezhu
mala thEkamum Avalum Asai
kapadam Akiya pAthaka theethu aRa – midi theera

kani veeRiya pOtha(m) mey njAnamum
iyalAr siva nEsamumE vara
kazhal sEr aNi nUpura thAL iNai – nizhal thArAy

purukUthan mi(n)nAL oru pAl uRa
silai vEduvar mAn oru pAl uRa
puthumA mayil meethu aNaiyAvarum – azhakOnE

puzhuku Ar pa(n)nir mUsiya vAsanai
ura(m) kAl aNi kOla men mAlaiya
puri nUlum ulAvu thuvAthasa – puya veerA

maruvUr kuLir vAvikaL sOlaikaL
sezhi sAli kulAviya kAr vayal
maka thApatha seelamumE punai – vaLa mUthUr

maka thEvar purAri sathAsivar
suthar Akiya thEva sikAmaNi
vazhuvUril nilAviya vAzhvaruL – perumALE