திருப்புகழ் 811 அன்னம் மிசை (கன்னபுரம்)

Thiruppugal 811 Annammisai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தன்னதனத் தன்னதனத் தன்னதனத் தன்னதனத்
தன்னதனத் தனாதாத்த – தந்ததான

அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத்
தன்னமயப் புலால்யாக்கை – துஞ்சிடாதென்


றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக்
கன்னியசற் றுலாமூச்ச – டங்கயோகம்


என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட்
டின்னணமெய்த் தடாமார்க்க – மின்புறாதென்


றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத்
தின்னதெனப் படாவாழ்க்கை – தந்திடாதோ


கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக்
கண்ணவிரச் சுறாவீட்டு – கெண்டையாளைக்


கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுபுரைக் கன்முழையிற்
கன்னிலையிற் புகாவேர்த்து – நின்றவாழ்வே

பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப்
பொன்னிநதிக் கராநீர்ப்பு – யங்கனாதா

பொன்மலையிற் பொன்னினகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப்
பொன்னுலகத் திராசாக்கள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தன்னதனத் தன்னதனத் தன்னதனத் தன்னதனத்
தன்னதனத் தனாதாத்த – தந்ததான

அன்னம் மிசை செம் நளிநம் சென்மி கணக்கு அந் நியமத்து
அன்ன மயப் புலால் யாக்கை – துஞ்சிடாது என்ற

அந் நினைவு உற்று அல் நினைவு உற்று அன்னியரில் தன்னெறி புக்கு
அன்னிய சற்று உலா மூச்சு – அடங்க யோகம்

என்னு மருள் கின்னம் உடை பல் நவை கற்ற இன்னவை விட்டு
இன்னணம் எய்த்து அடா மார்க்கம் – இன்புறாது என்று

இன்னது எனக்கு என்னும் மதப் புன்மை கெடுத்து இன்னல் விடுத்து
இன்னது எனப்படா வாழ்க்கை – தந்திடாதோ

கன்னல் மொழி பின் அளகம் அத்து அன்ன நடை பன்ன உடை அச்
சுறா வீட்டு கண் அவிர் – கெண்டையாளை

கன்னமிடப் பின் இரவில் துன்னு புரைக் கல் முழையில்
கல் நிலையில் புகா வேர்த்து – நின்ற வாழ்வே

பொன் அசலப் பின் அசலச் சென்னியில் நல் கன்ன புர
பொன்னி நதிக் கரா நீர்ப் – புயங்க நாதா

பொன் மலையில் பொன்னின் நகர்ப் புண்ணியர் பொற் பொன்
மவுலிப் பொன் உலகத்து இராசாக்கள் – தம்பிரானே

English

annamisaic cennaLinac cenmikaNak kanniyamath
thannamayap pulAlyAkkai – thunjidAthen

Ranninaivut Ranninaivut Ranniyarit RanneRipuk
kanniyasat RulAmUccha – dangayOkam

ennumarut kinnamudaip pannavaikat Rinnavaivit
tinnaNameyth thadAmArkka – minpuRAthen

Rinnathenak kennumathap punmaikeduth thinnalviduth
thinnathenap padAvAzhkkai – thanthidAthO


kannalmozhip pinnaLakath thannanadaip pannavudaik
kaNNavirac chuRAveettu – keNdaiyALaik

kannamidap pinniravit Runnupuraik kanmuzhaiyiR
kannilaiyiR pukAvErththu – ninRavAzhvE

ponnasalap pinnasalac chenniyinaR kannapurap
ponninathik karAneerppu – yanganAthA

ponmalaiyiR ponninakarp puNNiyarpoR ponmavulip
ponnulakath thirAsAkkaL – thambirAnE.

English Easy Version

annam misai cem naLinam cenmi kaNakku an niyamaththu
anna mayap pulAl yAkkai – thunjidAthu enRa

anninaivu utRu al ninaivu utRu anniyaril thanneRi pukku
anniya satRu ulA mUcchu – adanga yOkam

ennu maruL kinnam udai pal navai katRu innavai vittu
innaNam eyththu adA mArkkam – inpuRAthu enRu

innathu enakku ennum mathap punmai keduththu innal viduththu
innathu enappadA vAzhkkai – thanthidAthO

kannal mozhi pin aLakam aththu anna nadai panna udai
ac chuRA veettu kaN avir – keNdaiyALai

kannamidap pin iravil thunnu puraik kal muzhaiyil
kal nilaiyil pukA vErththu – ninRa vAzhvE

pon asalap pin asalac cenniyil nal kanna pura
ponni nathik karA neerp – puyanga nAthA

pon malaiyil ponnin nakarp puNNiyar poR pon mavulip
pon ulakaththu irAsAkkaL – thambirAnE