திருப்புகழ் 812 இபமாந்தர் சக்ர (திருவாஞ்சியம்)

Thiruppugal 812 Ibamandharsakra

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதாந்த தத்த தனதன
தனதாந்த தத்த தனதன
தனதாந்த தத்த தனதன – தனதான

இபமாந்தர் சக்ர பதிசெறி
படையாண்டு சக்ர வரிசைக
ளிடவாழ்ந்து திக்கு விசயம – ணரசாகி

இறுமாந்து வட்ட வணைமிசை
விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
யெழிலார்ந்த பட்டி வகைபரி – மளலேபந்

தபனாங்க ரத்ந வணிகல
னிவைசேர்ந்த விச்சு வடிவது
தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு – வியபோது

தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
தனவாஞ்சை மிக்கு னடிதொழ – நினையாரே

உபசாந்த சித்த குருகுல
பவபாண்ட வர்க்கு வரதன்மை
யுருவோன்ப்ர சித்த நெடியவன் – ரிஷிகேசன்

உலகீன்ற பச்சை யுமையணன்
வடவேங்க டத்தி லுறைபவ
னுயர்சார்ங்க சக்ர கரதலன் – மருகோனே

த்ரிபுராந்த கற்கு வரசுத
ரதிகாந்தன் மைத்து னமுருக
திறல்பூண்ட சுப்ர மணியஷண் -முகவேலா

திரைபாய்ந்த பத்ம தடவய
லியில்வேந்த முத்தி யருள்தரு
திருவாஞ்சி யத்தி லமரர்கள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதாந்த தத்த தனதன
தனதாந்த தத்த தனதன
தனதாந்த தத்த தனதன – தனதான

இபமாந்தர் சக்ர பதி செறி
படையாண்டு சக்ர வரிசைகளிட
வாழ்ந்து திக்கு விசய மண் – அரசாகி

இறுமாந்து வட்ட வணைமிசை
விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
எழிலார்ந்த பட்டி வகை பரிமள – லேபம்

தபனாங்க ரத்ந வணிகலன்
இவைசேர்ந்த விச்சு வடிவது
தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு – வியபோது

தழல்தாங் கொளுத்தியிட ஒரு
பிடிசாம்பல் பட்டது அறிகிலர்
தனவாஞ்சை மிக்கு உனடிதொழ – நினையாரே

உபசாந்த சித்த குருகுலபவ
பாண்டவர்க்கு வரதன்
மையுருவோன் ப்ரசித்த நெடியவன் – ரிஷிகேசன்

உலகீன்ற பச்சை யுமையணன்
வடவேங்க டத்தி லுறைபவன்
உயர்சார்ங்க சக்ர கரதலன் – மருகோனே

த்ரிபுராந்த கற்கு வரசுத
ரதிகாந்தன் மைத்துனமுருக
திறல்பூண்ட சுப்ர மணிய – ஷண்முகவேலா

திரைபாய்ந்த பத்ம தட
வயலியில்வேந்த முத்தி யருள்தரு
திருவாஞ்சியத்தில் அமரர்கள் – பெருமாளே

English

ibamAndhar chakrapathi seRi
padai ANdu chakra varisaigaL
ida vAzhndhu dhikku vijayamaN – arasAgi

iRu mAndhu vattavaNai misai
viri sArndhu vetri malar thodai
ezhilArndha patti vagai parima- La lEpan

thapanAnga rathna aNikalan
ivai sErndha vichchu vadivadhu
thamar sUzhndhu mikka uyir nazhu – viyapOdhu

thazhal thAng koLuththi ida oru
pidi sAmbal pattadh aRigilar
dhana vAnchai mikkunadi thozha – ninaiyArE

upasAntha chiththa kurukula
bava pANdavarkku varadhan mai
uruvOn prasidhdha nediyavan – rishikEsan

ulageendra pachchai umai aNan
vada vEnkataththil uRaibavan
uyar sArnga chakra karathalan – marugOnE

thripurAntha kaRku vara sutha
rathi kAnthan maiththuna muruga
thiRal pUNda subramaNiya shaN- muka vElA

thirai pAyndha padhma thata vaya
liyil vEndha muththi aruL tharu
thiru vAnji yaththil amarargaL – perumALE.

English Easy Version

ibamAndhar chakrapathi seRi
padai Andu chakra varisaigaL
ida vAzhndhu dhikku vijayamaN – arasAgi

iRu mAndhu vattavaNai misai
viri sArndhu vetri malar thodai
ezhilArndha patti vagai – parimaLa lEpan

thapanAnga rathna aNikalan
ivai sErndha vichchu vadivadhu
thamar sUzhndhu mikka uyir nazhu – viyapOdhu

thazhal thAng koLuththi ida oru
pidi sAmbal pattadh aRigilar
dhana vAnchai mikkunadi thozha – ninaiyArE

upasAntha chiththa kurukulabava
pANdavarkku varadhan mai
uruvOn prasidhdha nediyavan – rishikEsan

ulageendra pachchai umai aNan
vada vEnkataththil uRaibavan
uyar sArnga chakra karathalan – marugOnE

thripurAntha kaRku vara sutha
rathi kAnthan maiththuna muruga
thiRal pUNda subramaNiya – shaNmuga vElA

thirai pAyndha padhma thata vayaliyil
vEndha muththi aruL tharu
thiru vAnji yaththil amarargaL – perumALE