Thiruppugal 813 Vangkaramarbilani
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன – தனதான
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் – மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய – லிடுமாதர்
சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ – னுழலாமற்
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் – புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென – விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேணிகுரு வானவந மோநமென
திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு – முருகோனே
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
யின்பான தேனிரச மார்முலைவி டாதகர – மணிமார்பா
எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன – தனதான
வங்கார மார்பில் அணி தாரொடு உயர் கோடு அசைய,
கொந்து ஆர மாலை குழல் ஆரமொடு தோள்புரள,
வண் காதில் ஓலைகதிர் போல ஒளி வீச, இதழ் – மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசி உற
வந்தாரை வாரும் இரு(ம்) நீர் உறவென ஆசைமயல் – இடுமாதர்
சங்காளர் சூதுகொலைகாரர்குடி கேடர் சுழல்
சிங்கார தோளர் பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசியவர் மாயவலையோடு அடியென் – உழலாமல்
சங்கோதை நாதமொடு கூடி வெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீச உபதேசமது
தண்காதிலோதி இரு பாதமலர் சேரஅருள் – புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகனநமோநமென
கந்தாகுமாரசிவ தேசிகநமோநமென
சிந்தூர பார்வதி சுதாகரநமோநமென – விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவநமோநமென
கங்காள வேணிகுருவானவ நமோநமென
திண்சூரர் ஆழிமலை தூள்பட வை வேலைவிடு – முருகோனே
இங்கீத வேதபிரமாவை விழ மோதி
ஒரு பெண்காதலோடு வன மேவி வளிநாயகியை
இன்பான தேனிரச மார்முலைவிடாதகர – மணிமார்பா
எண் தோளர் காதல்கொடு காதல்கறியேபருகு
செங்காடு மேவிபிரகாசமயில் மேலழகொடு
என்காதல் மாலைமுடி ஆறுமுகவா அமரர் – பெருமாளே.
English
vangAra mArbil aNi thAroduyar kOdasaiya
kondhAra mAlai kuzhal Aramodu thOL puraLa
vaN kAdhil Olai kadhirpOla oLi veesa idhazh – malar pOla
manjAdu chApanudhal vAL anaiya vEl vizhigaL
konjAra mOha kiLiyAga nagai pEsi uRa
vandhArai vArumiru neeruRaven Asai mayal – idu mAdhar
sangALar sUdhu kolaikArar kudi kEdar suzhal
singAra thOLar paNa Asai uLar jAathi ilar
sandALar cheechi avar mAya valaiyOd adiyen – uzhalAmal
sangOdhai nAdhamodu kUdi vegu mAyai iruL
vendhOda mUla azhal veesa upadhEsam adhu
thaN kAdhil Odhi irupAdha malar sEra aruL – purivAyE
singAra rUpa mayil vAhana namO namena
kandhA kumAra siva dhEsika namO namena
sindhUra pArvathi sudhAkara namO namena – virudhOdhai
sindhAna jOthi kadhir vElava namO namena
gangALa vENi guruvAnava namO namena
thiN sUra rAzhimalai thUL pada vaivElai vidu – murugOnE
ingeetha vEdha biramAvai vizha mOdhi oru
peN kAdhalOdu vana mEvi vaLi nAyakiyai
inbAna thEni rasa mAr mulai vidAdhakara – maNi mArbA
eNthOLar kAdhal kodu kAdhal kaRiyE parugu
sengkAdu mEvi pirakAsa mayil mEl azhagod
en kAdhal mAlai mudi ARumugavA amarar – perumALE.
English Easy Version
vangAra mArbil aNi thAroduyar kOdasaiya
kondhAra mAlai kuzhal Aramodu thOL puraLa
vaN kAdhil Olai kadhirpOla oLi veesa idhazh – malar pOla
manjAdu chApanudhal vAL anaiya vEl vizhigaL
konjAra mOha kiLiyAga nagai pEsi uRa
vandhArai vArumiru neeruRavena asai mayal – idu mAdhar
sangALar sUdhu kolaikArar kudi kEdar suzhal
singAra thOLar paNa Asai uLar jAathi ilar
sandALar cheechi avar mAya valaiyOd adiyen – uzhalAmal
sangOdhai nAdhamodu kUdi vegu mAyai iruL
vendhOda mUla azhal veesa upadhEsam adhu
thaN kAdhil Odhi irupAdha malar sEra aruL – purivAyE
singAra rUpa mayil vAhana namO namena
kandhA kumAra siva dhEsika namO namena
sindhUra pArvathi sudhAkara namO namena – virudhOdhai
sindhAna jOthi kadhir vElava namO namena
gangALa vENi guruvAnava namO namena
thiN sUra rAzhimalai thUL pada vaivElai vidu – murugOnE
ingeetha vEdha biramAvai vizha mOdhi oru
peN kAdhalOdu vana mEvi vaLi nAyakiyai
inbAna thEni rasa mAr mulai vidAdhakara – maNi mArbA
eNthOLar kAdhal kodu kAdhal kaRiyE parugu
sengkAdu mEvi pirakAsa mayil mEl azhagod
en kAdhal mAlai mudi ArumugavA amarar – perumALE