திருப்புகழ் 816 கூசாதே பார் (திருவாரூர்)

Thiruppugal 816 Kusadhepar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானா தானா தானா தானா
தானா தானத் – தனதான

கூசா தேபா ரேசா தேமால்
கூறா நூல்கற் – றுளம்வேறு

கோடா தேவேல் பாடா தேமால்
கூர்கூ தாளத் – தொடைதோளில்

வீசா தேபேர் பேசா தேசீர்
வேதா தீதக் – கழல்மீதே

வீழா தேபோய் நாயேன் வாணாள்
வீணே போகத் – தகுமோதான்

நேசா வானோ ரீசா வாமா
நீபா கானப் – புனமானை

நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்
நீள்கார் சூழ்கற் – பகசாலத்

தேசா தீனா தீனா ரீசா
சீரா ரூரிற் – பெருவாழ்வே

சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானா தானா தானா தானா
தானா தானத் – தனதான

கூசாதே பார் ஏசாதே மால்
கூறா நூல்கற்று – உளம்வேறு

கோடாதே வேல் பாடாதே மால்
கூர் கூதாளத் – தொடைதோளில்

வீசாதே பேர் பேசாதே சீர்
வேத அதீதக் – கழல்மீதே

வீழாதே போய் நாயேன் வாணாள்
வீணே போகத் – தகுமோதான்

நேசா வானோர் ஈசா வாமா
நீபா கானப் – புனமானை

நேர்வாய் ஆர்வாய் சூர்வாய் சார்வாய்
நீள்கார் சூழ்கற் – பகசாலத்

தேச ஆதீனா தீனார் ஈசா
சீர் ஆரூரிற் – பெருவாழ்வே

சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் – பெருமாளே.

English

kUsA thEpA rEsA thEmAl
kURA nUlkaR – RuLamvERu

kOdA thEvEl pAdA thEmAl
kUrkU thALath – thodaithOLil

veesA thEpEr pEsA thEseer
vEthA theethak – kazhalmeethE

veezhA thEpOy nAyEn vANAL
veeNE pOkath – thakumOthAn

nEsA vAnO reesA vAmA
neepA kAnap – punamAnai

nErvA yArvAy sUrvAy sArvAy
neeLkAr sUzhkaR – pakasAlath

thEsA theenA theenA reesA
seerA rUriR – peruvAzhvE

sEyE vELE pUvE kOvE
thEvE thEvap – perumALE.

English Easy Version

kUsAthE pAr EsAthE mAl
kURA nUlkatRu – uLamvERu

kOdAthE vEl pAdAthE mAl
kUr kUthALath – thodaithOLil

veesAthE pEr pEsAthE seer
vEtha atheethak – kazhalmeethE

veezhAthE pOy nAyEn vANAL
veeNE pOkath – thakumOthAn

nEsA vAnO reesA vAmA
neepA kAnap – punamAnai

nErvAy ArvAy sUrvAy sArvAy
neeLkAr chUzhkaR – pakasAlath

thEsa AtheenA theenAr eesA
seer ArUriR – peruvAzhvE

sEyE vELE pUvE kOvE
thEvE thEvap – perumALE.