திருப்புகழ் 821 கரமு முளரியின் (திருவாரூர்)

Thiruppugal 821 Karamumulariyin

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான

கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை
கலக மிடுவிழி கடலென விடமென – மனதூடே

கருதி யனநடை கொடியிடை யியல்மயில்
கமழு மகிலுட னிளகிய ம்ருகமத
களப புளகித கிரியினு மயல்கொடு – திரிவேனும்

இரவு பகலற இகலற மலமற
இயலு மயலற விழியினி ரிழிவர
இதய முருகியெ யொருகுள பதமுற – மடலூடே

யெழுத அரியவள் குறமக ளிருதன
கிரியில் முழுகின இளையவ னெனுமுரை
யினிமை பெறுவது மிருபத மடைவது – மொருநாளே

சுரபி மகவினை யெழுபொருள் வினவிட
மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு
துயரில் செவியினி லடிபட வினவுமி – னதிதீது

துணிவி லிதுபிழை பெரிதென வருமநு
உருகி யரகர சிவசிவ பெறுமதொர்
சுரபி யலமர விழிபுனல் பெருகிட – நடுவாகப்

பரவி யதனது துயர்கொடு நடவிய
பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு
படிய ரதமதை நடவிட மொழிபவ – னருளாரூர்ப்

படியி லறுமுக சிவசுத கணபதி
யிளைய குமரநி ருபபதி சரவண
பரவை முறையிட அயில்கொடு நடவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான

கரமு(ம்) முளரியின் மலர் முக மதி குழல்
கனமது எ(ண்)ணு(ம்) மொழி கனி கதிர் மு(ல்)லை நகை
கலகம் இடு விழி கடல் என விடம் என – மனது ஊடே

கருதி அ(ன்)ன நடை கொடி இடை இயல் மயில்
கமழும் அகில் உடன் இளகிய ம்ருகமத
களப புளகித கிரியினு(ம்) மயல் கொடு – திரிவேனும்

இரவு பகல் அற இகல் அற மலம் அற
இயலும் மயல் அற விழியில் நி(நீ)ர் இழிவர
இதயம் உருகியெ ஒரு குள பதம் உற – மடல் ஊடே

எழுத அரியவள் குற மகள் இரு தன
கிரியில் முழுகின இளையவன் எனும் உரையின்
இனிமை பெறுவதும் இரு பதம் அடைவதும் – ஒரு நாளே

சுரபி மகவினை எழு பொருள் வினவிட
மனுவின் நெறி மணி அசைவு உற அவ் இசை மிகு
துயரில் செவியினில் அடி பட வினவுமின் – அதி தீது

துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு
உருகி அரகர சிவ சிவ பெறுமது ஒர்
சுரபி அலமர விழி புனல் பெருகிட – நடுவாகப்

பரவி அதனது துயர் கொடு நடவிய
பழுதின் மதலையை உடல் இரு பிளவொடு
படிய ரதம் அதை நடவிய மொழிபவன் – அருள் ஆரூர்ப்

படியில் அறுமுக சிவசுத கணபதி
இளைய குமர நிருப பதி சரவண
பரவை முறையிட அயில் கொடு நடவிய – பெருமாளே

English

karamu muLariyin malarmuka mathikuzhal
kanama theNumozhi kanikathir mulainakai
kalaka miduvizhi kadalena vidamena – manathUdE

karuthi yananadai kodiyidai yiyalmayil
kamazhu makiluda niLakiya mrukamatha
kaLapa puLakitha kiriyinu mayalkodu – thirivEnum

iravu pakalaRa ikalaRa malamaRa
iyalu mayalaRa vizhiyini rizhivara
ithaya murukiye yorukuLa pathamuRa – madalUdE

yezhutha ariyavaL kuRamaka Liruthana
kiriyil muzhukina iLaiyava nenumurai
yinimai peRuvathu mirupatha madaivathu – morunALE

surapi makavinai yezhueporuL vinavida
manuvi neRimaNi yasaivuRa visaimiku
thuyaril seviyini ladipada vinavumi – nathitheethu

thuNivi lithupizhai perithena varumanu
uruki yarakara sivasiva peRumathor
surapi yalamara vizhipunal perukida – naduvAkap

paravi yathanathu thuyarkodu nadaviya
pazhuthin mathalaiyai yudaliru piLavodu
padiya rathamathai nadavida mozhipava – naruLArUrp

padiyi laRumuka sivasutha gaNapathi
yiLaiya kumarani rupapathi saravaNa
paravai muRaiyida ayilkodu nadaviya – perumALE.

English Easy Version

karamu(m) muLariyin malar muka mathi kuzhal
kanamathu e(N)Nu(m) mozhi kani kathir mu(l)lai nakai
kalakam idu vizhi kadal ena vidam ena – manathu UdE

karuthi a(n)na nadai kodi idai iyal mayil
kamazhum akil udan iLakiya mrukamatha
kaLapa puLakitha kiriyinu(m) mayal kodu – thirivEnum

iravu pakal aRa ikal aRa malam aRa
iyalum mayal aRa vizhiyil ni(nee)r izhivara
ithayam urukiye oru kuLa patham uRa – madal UdE

ezhutha ariyavaL kuRa makaL iru thana
kiriyil muzhukina iLaiyavan enum uraiyin
inimai peRuvathum iru patham adaivathum – oru nALE

surapi makavinai ezhu poruL vinavida
manuvin neRi maNi asaivu uRa av isai miku
thuyaril seviyinil adi pada vinavumin – athi theethu

thuNivil ithu pizhai perithu ena varum manu
uruki arakara siva siva peRumathu or
surapi alamara vizhi punal perukida – naduvAkap

paravi athanathu thuyar kodu nadaviya
pazhuthin mathalaiyai udal iru piLavodu
padiya ratham athai nadaviya mozhipavan – aruL ArUrp

padiyil aRumuka sivasutha gaNapathi
iLaiya kumara nirupa pathi saravaNa
paravai muRaiyida ayil kodu nadaviya – perumALE