திருப்புகழ் 823 கலகவிழி மாமகளிர் (பெரியமடம்)

Thiruppugal 823 Kalagavizhimamagalir

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தானதன தத்தனா தாத்த
தனதனன தானதன தத்தனா தாத்த
தனதனன தானதன தத்தனா தாத்த – தனதான

கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய்
களவுமத னூல்பலப டித்தவா வேட்கை
கனதனமு மார்புமுற லிச்சையா லார்த்து – கழுநீரார்


கமழ்நறைச வாதுபுழு கைத்துழாய் வார்த்து
நிலவரசு நாடறிய கட்டில்போட் டார்ச்செய்
கருமமறி யாதுசிறு புத்தியால் வாழ்க்கை – கருதாதே

தலமடைசு சாளரமு கப்பிலே காத்து
நிறைபவுசு வாழ்வரசு சத்யமே வாய்த்த
தெனவுருகி யோடியொரு சற்றுளே வார்த்தை – தடுமாறித்

தழுவியநு ராகமும்வி ளைத்துமா யாக்கை
தனையுமரு நாளையும வத்திலே போக்கு
தலையறிவி லேனைநெறி நிற்கநீ தீக்ஷை – தரவேணும்

அலகில்தமி ழாலுயர்ச மர்த்தனே போற்றி
அருணைநகர் கோபுரவி ருப்பனே போற்றி
அடல்மயில்ந டாவியப்ரி யத்தனே போற்றி – அவதான

அறுமுகசு வாமியெனும் அத்தனே போற்றி
அகிலதல மோடிவரு நிர்த்தனே போற்றி
அருணகிரி நாதஎனும் அப்பனே போற்றி – அசுரேசர்

பெலமடிய வேல்விடுக ரத்தனே போற்றி
கரதலக பாலிகுரு வித்தனே போற்றி
பெரியகுற மாதணைபு யத்தனே போற்றி -பெருவாழ்வாம்


பிரமனறி யாவிரத தக்ஷிணா மூர்த்தி
பரசமய கோளரித வத்தினால் வாய்த்த
பெரியமட மேவியசு கத்தனே யோக்யர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தானதன தத்தனா தாத்த
தனதனன தானதன தத்தனா தாத்த
தனதனன தானதன தத்தனா தாத்த – தனதான

கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய்ப் பொய்
களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை
கன தனமும் மார்பும் உறல் இச்சையால் ஆர்த்து – கழு நீர் ஆர்

கமழ் நறை சவாது புழு கைத் துழாய் வார்த்து
நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார்ச் செய்
கருமம் அறியாது சிறு புத்தியால் வாழ்க்கை – கருதாதே

தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து
நிறை பவுசு வாழ்வு அரசு சத்யமே வாய்த்தது
என உருகி ஓடி ஒரு சற்றுளே வார்த்தை – தடுமாறித்

தழுவி அநுராகமும் விளைத்து மா யாக்கை
தனையும் அரு நாளையும் அவத்திலே போக்கு
தலை அறிவிலேனை நெறி நிற்க நீ தீக்ஷை – தரவேணும்

அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி
அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி
அடல் மயில் நடாவிய ப்ரியத்தனே போற்றி – அவதான

அறுமுக சுவாமி எனும் அத்தனே போற்றி
அகில தலம் ஓடி வரு நிர்த்தனே போற்றி
அருணகிரி நாத எனும் அப்பனே போற்றி – அசுரேசர்

பெல(ம்) மடிய வேல் விடு கரத்தனே போற்றி
கரதல கபாலி குரு வித்தனே போற்றி
பெரிய குற மாது அணை புயத்தனே போற்றி – பெரு வாழ்வாம்

பிரமன் அறியா விரத தக்ஷிணா மூர்த்தி
பர சமய கோள் அரி தவத்தினால் வாய்த்த
பெரிய மடம் மேவிய சுகத்தனே யோக்யர் – பெருமாளே

English

kalakavizhi mAmakaLir kaikkuLE yAyppoy
kaLavumatha nUlpalapa diththavA vEtkai
kanathanamu mArpumuRa licchaiyA lArththu – kazhuneerAr


kamazhnaRaisa vAthupuzhu kaiththuzhAy vArththu
nilavarasu nAdaRiya kattilpOt tArcchey
karumamaRi yAthusiRu puththiyAl vAzhkkai – karuthAthE

thalamadaisu sALaramu kappilE kAththu
niRaipavusu vAzhvarasu sathyamE vAyththa
thenavuruki yOdiyoru satRuLE vArththai – thadumARith

thazhuviyanu rAkamumvi LaiththumA yAkkai
thanaiyumaru nALaiyuma vaththilE pOkku
thalaiyaRivi lEnaineRi niRkanee theekshai – tharavENum

alakilthami zhAluyarsa marththanE pOtRi
aruNainakar kOpuravi ruppanE pOtRi
adalmayilna dAviyapri yaththanE pOtRi – avathAna

aRumukasu vAmiyenum aththanE pOtRi
akilathala mOdivaru nirththanE pOtRi
aruNakiri nAthaenum appanE pOtRi – asurEsar

pelamadiya vElviduka raththanE pOtRi
karathalaka pAlikuru viththanE pOtRi
periyakuRa mAthaNaipu yaththanE pOtRi -peruvAzhvAm

piramanaRi yAviratha thakshiNA mUrththi
parasamaya kOLaritha vaththinAl vAyththa
periyamada mEviyasu kaththanE yOkyar – perumALE.

English Easy Version

kalaka vizhi mA makaLir kaikkuLE Ayp poy
kaLavu mathan nUl pala padiththu avA vEtkai
kana thanamum mArpum uRal icchaiyAl Arththu – kazhu neer Ar

kamazh naRai savAthu puzhu kaith thuzhAy vArththu
nila arasu nAdu aRiya kattil pOttArs sey
karumam aRiyAthu siRu puththiyAl vAzhkkai – karuthAthE

thalam adaisu sALara mukappilE kAththu
niRai pavusu vAzhvu arasu sathyamE vAyththathu
ena uruki Odi oru satRuLE vArththai – thadumARith

thazhuvi anurAkamum viLaiththu mA yAkkai
thanaiyum aru nALaiyum avaththilE pOkkuthalai
aRivilEnai neRi niRka nee theekshai – tharavENum

alaku il thamizhAl uyar samarththanE pOtRi
aruNai nakar kOpuram iruppanE pOtRi
adal mayil nadAviya priyaththanE pOtRi – avathAna

aRumuka suvAmi enum aththanE pOtRi
akila thalam Odi varu nirththanE pOtRi
aruNakiri nAtha enum appanE pOtRi – asurEsar

pela(m) madiya vEl vidu karaththanE pOtRi
karathala kapAli kuru viththanE pOtRi
periya kuRa mAthu aNai puyaththanE pOtRi – peru vAzhvAm

piraman aRiyA viratha thakshiNA mUrththi
para samaya kOL ari thavaththinAl vAyththa
periya madam mEviya sukaththanE yOkyar – perumALE