திருப்புகழ் 825 உரை ஒழிந்து (த்ரியம்பகபுரம்)

Thiruppugal 825 Uraiozhindhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன – தனதான

உரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதென
வுணர்வு கண்டுபின் திரவிய இகலரு
ளொருவர் நண்படைந் துளதிரள் கவர்கொடு – பொருள்தேடி

உளம கிழ்ந்துவந் துரிமையில் நினைவுறு
சகல இந்த்ரதந்த் ரமும்வல விலைமக
ளுபய கொங்கையும் புளகித மெழமிக – வுறவாயே

விரக வன்புடன் பரிமள மிகவுள
முழுகி நன்றியொன் றிடமல ரமளியில்
வெகுவி தம்புரிந் தமர்பொரு சமயம – துறுநாளே

விளைத னங்கவர்ந் திடுபல மனதிய
ரயல்த னங்களுந் தனதென நினைபவர்
வெகுளி யின்கணின் றிழிதொழி லதுவற – அருள்வாயே

செருநி னைந்திடுஞ் சினவலி யசுரர்க
ளுகமு டிந்திடும் படியெழு பொழுதிடை
செகம டங்கலும் பயமற மயில்மிசை – தனிலேறித்

திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு
தெனதெ னந்தெனந் தெனதென தெனதென
திமிதி மிந்திமிந் திமிதிமி திமியென – வருபூதங்

கரையி றந்திடுங் கடலென மருவிய
வுதிர மொண்டுமுண் டிடஅமர் புரிபவ
கலவி யன்புடன் குறமகள் தழுவிய – முருகோனே

கனமு றுந்த்ரியம் பகபுர மருவிய
கவுரி தந்தகந் தறுமுக எனஇரு
கழல்ப ணிந்துநின் றமரர்கள் தொழவல – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன – தனதான

உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என
உணர்வு கண்டு பின் திரவிய(ம்) இகலருள்
ஒருவர் நண்பு அடைந்து உள திரள் கவர்கொடு – பொருள் தேடி

உளம் மகிழ்ந்து உவந்து உரிமையில் நினைவு உறு
சகல இந்த்ர தந்த்ரமும் வ(ல்)ல விலை மகள்
உபய கொங்கையும் புளகிதம் எழ மிக – உறவாயே

விரக அன்புடன் பரிமள மிக உள
முழுகி நன்றி ஒன்றிட மலர் அமளியில்
வெகு விதம் புரிந்து அமர் பொரு சமயம் அது – உறு நாளே

விளை தனம் கவர்ந்திடும் பல மனதியர்
அயல் தனங்களும் தமது என நினைபவர்
வெகுளியின் கண் நின்று இழி தொழில் அது அற – அருள்வாயே

செரு நினைந்திடும் சின வலி அசுரர்கள்
உகம் முடிந்திடும் படி எழு பொழுதிடை
செகம் அடங்கலும் பயம் அற மயில் மிசை – தனில் ஏறி

திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு
தெனதெ னந்தெனந் தெனதென தெனதென
திமிதி மிந்திமிந் திமிதிமி திமி என – வரும் பூதம்

கரை இறந்திடும் கடல் என மருவிய
உதிர(ம்) மொண்டும் உண்டிட அமர் புரிபவ
கலவி அன்புடன் குறமகள் தழுவிய – முருகோனே

கனம் உறு த்ரியம்பக புர(ம்) மருவிய
கவுரி தந்த கந்த அறுமுக என இரு
கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழ வல – பெருமாளே

English

uraiyo zhinthunin Ravarporu LeLithena
vuNarvu kaNdupin thiraviya ikalaru
Loruvar naNpadain thuLathiraL kavarkodu – poruLthEdi

uLama kizhnthuvan thurimaiyil ninaivuRu
sakala inthrathanth ramumvala vilaimaka
Lupaya kongaiyum puLakitha mezhamika – vuRavAyE

viraka vanpudan parimaLa mikavuLa
muzhuki nanRiyon Ridamala ramaLiyil
vekuvi thampurin thamarporu samayama – thuRunALE

viLaitha namkavarn thidupala manathiya
rayaltha nangaLun thanathena ninaipavar
vekuLi yinkaNin Rizhithozhi lathuvaRa – aruLvAyE

seruni nainthidum sinavali yasurarka
Lukamu dinthidum padiyezhu pozhuthidai
sekama dangalum payamaRa mayilmisai – thanilERith

thikuthi kunthikun thikuthiku thikuthiku
thenathe nanthenan thenathena thenathena
thimithi minthimin thimithimi thimiyena – varupUtham

karaiyi Ranthidum kadalena maruviya
vuthira moNdumuN didaamar puripava
kalavi yanpudan kuRamakaL thazhuviya – murukOnE

kanamu Runthriyam pakapura maruviya
kavuri thanthakan thaRumuka enairu
kazhalpa Ninthunin RamararkaL thozhavala – perumALE.

English Easy Version

urai ozhinthu ninRavar poruL eLithu ena
uNarvu kaNdu pin thiraviya(m) ikalaruL
oruvar naNpu adainthu uLa thiraL kavarkodu – poruL thEdi

uLam makizhnthu uvanthu urimaiyil ninaivu uRu
sakala inthra thanthramum va(l)la vilai makaL
upaya kongaiyum puLakitham ezha mika – uRavAyE

viraka anpudan parimaLa mika uLa
muzhuki nanRi onRida malar amaLiyil
veku vitham purinthu amar poru samayam athu – uRu nALE

viLai thanam kavarnthidum pala manathiyar
ayal thanangaLum thamathu ena ninaipavar
vekuLiyin kaN ninRu izhi thozhil athu aRa – aruLvAyE

seru ninainthidum sina vali asurarkaL
ukam mudinthidum padi ezhu pozhuthidai
sekam adangalum payam aRa mayil misai – thanil ERi

thikuthi kunthikun thikuthiku thikuthiku
thenathe nanthenan thenathena thenathena
thimithi minthimin thimithimi thimi ena – varum pUtham

karai iRanthidum kadal ena maruviya
uthira(m) moNdum uNdida amar puripava
kalavi anpudan kuRamakaL thazhuviya – murukOnE

kanam uRu thriyampaka pura(m) maruviya
kavuri thantha kantha aRumuka ena iru
kazhal paNinthu ninRu amararkaL thozha vala – perumALE.,