Thiruppugal 827 Pulavarairakshi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தத்தத் தந்தான தானன
தனதன தத்தத் தந்தான தானன
தனதன தத்தத் தந்தான தானன – தனதானா
புலவரை ரக்ஷிக் குந்தாரு வேமது
ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை
பொருபுய திக்கெட் டும்போயு லாவிய – புகழாளா
பொருவரு நட்புப் பண்பான வாய்மையி
லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல
பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய – கவிபாடி
விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்
எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு – மிடிதீர
மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை
சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை
விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு – மருள்வாயே
இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்
இமயம கட்குச் சந்தான மாகிய – முருகோனே
இளையகொ டிச்சிக் கும்பாக சாதன
னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக
எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன் – மருகோனே
அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனை
திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி – யிசையாலே
அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
அசுரரை வெட்டிச் சங்கார மாடிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தத்தத் தந்தான தானன
தனதன தத்தத் தந்தான தானன
தனதன தத்தத் தந்தான தானன – தனதானா
புலவரை ரக்ஷிக்குந் தாருவே மதுரித
குண வெற்பொக் கும்பூவை மார்முலை
பொருபுய திக்கெட்டும்போயு லாவிய – புகழாளா
பொருவரு நட்புப் பண்பான வாய்மையில்
உலகிலு னக்கொப் புண்டோவெனா நல
பொருள்கள் நிரைத்து செம்பாக மாகிய – கவிபாடி
விலையில்தமிழ்ச்சொற்கு உன்போல் உதாரிகள்
எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
வெறிகொள் உலுத்தர்க்கு என்பாடு கூறிடு – மிடிதீர
மிக அருமைப்பட்டு உன்பாத தாமரை
சரணமெனப்பற் றும்பேதையேன்மிசை
விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு – மருள்வாயே
இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்
இமயமகட்குச் சந்தான மாகிய – முருகோனே
இளையகொடிச்சிக்கும் பாகசாதனன்
உதவுமொருத்திக்குஞ் சீல நாயக
எழிலியெழிற்பற்றுங் காய மாயவன் – மருகோனே
அலர்தரு புட்பத்து உண்டாகும் வாசனை
திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
அணிபொழிலுக்குச் சஞ்சார மாமளி – யிசையாலே
அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்காரமாய்வரும்
அசுரரை வெட்டிச் சங்கார மாடிய – பெருமாளே
English
pulavarai rakshikkun thAruvE madhu
rithaguNa veRpokkum pUvai mArmulai
porubuya dhikkettum pOy ulAviya – pugazhALA
poruvaru natpup paNbAna vAymaiyil
ulagil unak oppuNdO venA nala
poruLgaL niraiththuch sempAga mAgiya – kavipAdi
vilaiyil thamizhsoR kunpOl udhArigaL
evarena meththak koNdAdi vAzhvenum
veRikoL uluththark kenpAdu kURidu – miditheera
miga arumaip pattun pAdha thAmarai
saraNa menap patrum pEdhai yEnmisai
vizhi aruL vaiththu kundrAdha vAzhvaiyum – aruLvAyE
ilagiya vetchich sendhAma mArbuya
silainudhal maikkat sindhUra vANudhal
imaya magatkuch santhAna mAgiya – murugOnE
iLaiya kodicchikkum bAga sAdhanan
udhavum orutthikkum seela nAyaka
ezhili yezhiRpatrung kAya mAyavan – marugOnE
alar tharu pushpath thundAgum vAsanai
disaithoRu muppath theN kAdham veesiya
aNi pozhilukkuch sanjchAra mAmaLi – isaiyAlE
azhagiya sikkaR singAra vElava
samaridai meththap pongAramAy varum
asurarai vetti sankAra mAdiya – perumALE.
English Easy Version
pulavarai rakshikkun thAruvE madhu
rithaguNa veRpokkum pUvai mArmulai
porubuya dhikkettum pOy ulAviya – pugazhALA
poruvaru natpup paNbAna vAymaiyil
ulagil unak oppuNdO venA nala
poruLgaL niraiththuch sempAga mAgiya – kavipAdi
vilaiyil thamizhsoR kunpOl udhArigaL
evarena meththak koNdAdi vAzhvenum
veRikoL uluththark kenpAdu kURidu – miditheera
miga arumaip pattun pAdha thAmarai
saraNa menap patrum pEdhai yEnmisai
vizhi aruL vaiththu kundrAdha vAzhvaiyum – aruLvAyE
ilagiya vetchich sendhAma mArbuya
silainudhal maikkat sindhUra vANudhal
imaya magatkuch santhAna mAgiya – murugOnE
iLaiya kodicchikkum bAga sAdhanan
udhavum orutthikkum seela nAyaka
ezhili yezhiRpatrung kAya mAyavan – marugOnE
alar tharu pushpath thundAgum vAsanai
disaithoRu muppath theN kAdham veesiya
aNi pozhilukkuch sanjchAra mAmaLi – isaiyAlE
azhagiya sikkaR singAra vElava
samaridai meththap pongAramAy varum
asurarai vetti sankAra mAdiya – perumALE