திருப்புகழ் 829 மார்பு ரம்பினளி (நாகப்பட்டினம்)

Thiruppugal 829 Marburambinali

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தந்ததன தந்ததன தந்ததன
தான தந்ததன தந்ததன தந்ததன
தான தந்ததன தந்ததன தந்ததன – தந்ததான

மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ
டார மும்படித ரம்பொறியு டன்பணிகள்
மாலை யொண்பவள மும்பரிம ளங்கலவை – தொங்கலாட

வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளக
பார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதி
வாகை யென்பஇத ழுஞ்சலச மென்பகள – சங்குமோக

சார மஞ்சள்புய முங்கிளிமு கங்களுகிர்
பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரச
தாழி யென்பஅல்கு லுந்துளிர ரம்பைதொடை – ரம்பைமாதர்

தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணி
யாடல் கொண்டமட மங்கையரு டன்கலவி
தாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்ம – றந்திடேனே

வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர
சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும்
வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ – டர்ந்தசூரன்

வீற டங்கமுகி லுங்கமற நஞ்சுடைய
ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு
மேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநட – னங்கொள்வேலா

நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி
யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி
ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர் – தந்தமூல

ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு
தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய
நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தான தந்ததன தந்ததன தந்ததன
தான தந்ததன தந்ததன தந்ததன
தான தந்ததன தந்ததன தந்ததன – தந்ததான

உரம் மார்பு பின் நளினம் கிரி எனும் தனமொடு
ஆரமும் படி தரம் பொறியுடன் பணிகள்
மாலை ஒண் பவளமும் பரிமள கலவை – தொங்கல் ஆட

வாள் சரம் கண் இயலும் குழை த(ள்)ள அம்பு அளக
பார(ம்) தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி
வாகை என்ப இதழும் சலசம் என்ப கள(ம்) – சங்கு மோக

சார(ம்) மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர்
பாளிதம் புனை துவண்ட இடையொடு இன்ப ரச
தாழி என்ப அல்குலும் துளிர் அரம்பை தொடை – ரம்பை மாதர்

தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி
ஆடல் கொண்ட மட மங்கையருடன் கலவி
தாகம் உண்டு உழல்கினும் கழலுறும் கழல் – மறந்திடேனே

வீர வெண்டைய(ம்) முழங்க வரி சங்கு(ம்) முரசோடு
பொன் பறை ததும்ப விதியும் சுரமும்
வேத விஞ்சையர் உடன் குமுற வெந்து உக – அடர்ந்த சூரன்

வீறு அடங்க முகிலும் கமற நஞ்சு உடைய
ஆயிரம் பகடு கொண்ட உரகன் குவடுமே
கொளுந்த பல சிரம் தனை எறிந்து – நடனம் கொள் வேலா

நார சிங்க வடிவம் கொண்டு ப்ரசண்ட இரணியோன்
நடுங்க நடனம் செய்து இலங்கை வலி
ராவணன் குலம் அடங்க சிலை கொண்ட கரர் – தந்த மூல

ஞான மங்கை அமுதம் சொருபி என்றன் ஒரு
தாய் அணங்கு குற மங்கையை மணந்த புய
நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் – தம்பிரானே

English

mArpu rampinaLi nangkiriye nunthanamo
dAra mumpaditha rampoRiyu danpaNikaL
mAlai yoNpavaLa mumparima Langkalavai – thongalAda

vALsa rangaNiya lungkuzhaitha LampaLaka
pAra thongalaNi peNkaLvatha nangaLmathi
vAkai yenpaitha zhumsalasa menpakaLa – sangumOka

sAra manjaLpuya mungkiLimu kangaLukir
pALi thampunaithu vaNdidaiyo dinparasa
thAzhi yenpaalku lunthuLira rampaithodai – rampaimAthar

thALsa thangkaikolu sungulasi lampumaNi
yAdal koNdamada mangaiyaru dankalavi
thAka muNduzhalki nungkazhalu Rungkazhalma – RanthidEnE

veera veNdaiyamu zhangkavari sangumura
sOdu ponpaRaitha thumpavithi yumsurarum
vEtha vinjaiyaru dankumuRa venthukava – darnthacUran

veeRa dangamuki lungkamaRa nanjudaiya
Ayi rampakadu koNdavura kankuvadu
mEko Lunthapalsi ranthanaiye Rinthunada – nangkoLvElA

nAra singavadi vangodupra saNdiraNi
yOna dunganada nanjeythui langaivali
rAva Nankulama dangasilai koNdakarar – thanthamUla

njAna mangaiyamu thanjorupi yenRanoru
thAya NangukuRa mangaiyaima Nanthapuya
nAkai yampathiya marnthuvaLar namparpukazh – thambirAnE.

English Easy Version

uram mArpu pin naLinam kiri enum thanamodu
Aramum padi tharam poRiyudan paNikaL
mAlai oN pavaLamum parimaLa kalavai – thongal Ada

vAL saram kaN iyalum kuzhai tha(L)La ampu aLaka
pAra(m) thongal aNi peNkaL vathanangaL mathi
vAkai enpa ithazhum salasam enpa kaLa(m) – sangu mOka

sAra(m) manjaL puyamum kiLi mukangaL ukir
pALitham punai thuvaNda idaiyodu inpa rasa
thAzhi enpa alkulum thuLir arampai thodai – rampai mAthar

thAL sathangai kolusum kula silampum aNi
Adal koNda mada mangaiyarudan kalavi
thAkam uNdu uzhalkinum kazhaluRum kazhal – maRanthidEnE

veera veNdaiya(m) muzhanga vari sangu(m) murasOdu
pon paRai thathumpa vithiyum suramum
vEtha vinjaiyar udan kumuRa venthu uka – adarntha cUran

veeRu adanga mukilum kamaRa nanju udaiya
Ayiram pakadu koNda urakan kuvadumE
koLuntha pala siram thanai eRinthu – nadanam koL vElA

nAra singa vadivam koNdu prasaNda iraNiyOn
nadunga nadanam seythu ilangai vali
rAvaNan kulam adanga silai koNda karar – thantha mUla

njAna mangai amutham sorupi enRan oru
thAy aNangku kuRa mangkaiyai maNantha puya
nAkai am pathi amarnthu vaLar nampar pukazh – thambirAnE.,