திருப்புகழ் 830 விழுதாதெனவே (நாகப்பட்டினம்)

Thiruppugal 830 Vizhudhadhenave

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா – தனதான

விழுதா தெனவே கருதா துடலை
வினைசேர் வதுவே – புரிதாக

விருதா வினிலே யுலகா யதமே
லிடவே மடவார் – மயலாலே

அழுதா கெடவே அவமா கிடநா
ளடைவே கழியா – துனையோதி

அலர்தா ளடியே னுறவாய் மருவோ
ரழியா வரமே – தருவாயே

தொழுதார் வினைவே ரடியோ டறவே
துகள்தீர் பரமே – தருதேவா

சுரர்பூபதியே கருணா லயனே
சுகிர்தா வடியார் – பெருவாழ்வே

எழுதா மறைமா முடிவே வடிவே
லிறைவா எனையா – ளுடையோனே

இறைவா எதுதா வதுதா தனையே
இணைநா கையில்வாழ் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா – தனதான

விழுதா தெனவே கருதா துடலை
வினைசேர் வதுவே – புரிதாக

விருதா வினிலே உலகா யதமே
லிடவே மடவார் – மயலாலே

அழுது ஆகெடவே அவமாகிட
நாளடைவே கழியாது – உனையோதி

அலர்தா ளடியே னுறவாய்
மருவோரழியா வரமே – தருவாயே

தொழுதார் வினை வே ர்யோ டறவே
துகள்தீர் பரமே – தருதேவா

சுரர்பூபதியே கருணா லயனே
சுகிர்தா அடியார் – பெருவாழ்வே

எழுதா மறைமா முடிவே வடிவேலிறைவா
எனையா – ளுடையோனே

இறைவா எதுதா அதுதா தனையே
இணைநா கையில் வாழ் – பெருமாளே

English

vizhudhA dhenavE karudhAdh udalai
vinaisEr vadhuvE – puridhAga

virudhA vinilE ulagA yadha mEl
idavE madavAr – mayalAlE

azhudhA kedavE avamAgida nAL
adaivE kAzhiyAdh – unaiyOdhi

alarthAL adiyEn uRavAy maruvavOr
azhiyA varamE – tharuvAyE

thozhudhAr vinai vEradiyOd aRavE
thugaLtheer paramE – tharudhEvA

surar bUpathiyE karuNA layanE
sukirthA vadiyAr – peru vAzhvE

ezhudhA maRai mA mudivE vadivEl
iRaivA enaiyAL – udaiyOnE

iRaivA edhuthA adhuthA thanaiyE
iNainA gaiyil vAzh – perumALE.

English Easy Version

vizhudhA dhenavE karudhAdh udalai
vinaisEr vadhuvE – puridhAga

virudhA vinilE ulagA yadha mElidvE
madavAr – mayalAlE

azhudhA kedavE avamAgida nAL
adaivE kAzhiyAdh – unai Odhi

alarthAL adiyEn uRavAy maruvavOr
azhiyA varamE – tharuvAyE

thozhudhAr vinai vEradiyOd aRavE
thugaLtheer paramE – tharudhEvA

surar bUpathiyE karuNA layanE
sukirthA vadiyAr – peru vAzhvE

ezhudhA maRai mA mudivE vadivEl
iRaivA enaiyAL – udaiyOnE

iRaivA edhuthA adhuthA thanaiyE
iNainA gaiyil vAzh – perumALE