திருப்புகழ் 831 உரமுற் றிரு (எட்டிகுடி)

Thiruppugal 831 Uramutrriru

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் – தனதான

உரமுற் றிருசெப் பெனவட் டமுமொத்
திளகிப் புளகித் – திடமாயே

உடைசுற் றுமிடைச் சுமையொக் கஅடுத்
தமிதக் கெறுவத் – துடன்வீறு

தரமொத் துபயக் களபத் தளமிக்
கவனத் தருணத் – தனமீதே

சருவிச் சருவித் தழுவித் தழுவித்
தவமற் கவிடுத் – துழல்வேனோ

அரிபுத் திரசித் தசஅக் கடவுட்
கருமைத் திருமைத் – துனவேளே

அடல்குக் குடநற் கொடிகட் டியனர்த்
தசுரப் படையைப் – பொருவோனே

பரிவுற் றவருக் கருள்வைத் தருள்வித்
தகமுத் தமிழைப் – பகர்வோனே

பழனத் தொளிர்முத் தணியெட் டிகுடிப்
பதியிற் குமரப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் – தனதான

உரம் உற்று இரு செப்பு என வட்டமும் ஒத்து
இளகிப் புளகித் – திடமாயே

உடை சுற்றும் இடைச் சுமை ஒக்க அடுத்து
அமிதக் கெறுவத்துடன் – வீறு

தரம் ஒத்து உபயக் களபத் தள(ம்) மிக்க
வனத் தருணத் – தனம் மீதே

சருவிச் சருவித் தழுவித் தழுவித்
தவம் அற்க விடுத்து – உழல்வேனோ

அரி புத்திர சித்தசன் அக் கடவுட்கு
அருமைத் திரு – மைத்துன வேளே

அடல் குக்குட நல் கொடி கட்டி அனர்த்த
அசுரப் படையைப் – பொருவோனே

பரிவுற்றவருக்கு அருள் வைத்து அருள் வித்தக
முத்தமிழைப் – பகர்வோனே

பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடிப்
பதியில் குமரப் – பெருமாளே

English

uramut Rirusep penavat tamumoth
thiLakip puLakith – thidamAyE

udaisut Rumidaic chumaiyok kaaduth
thamithak keRuvath – thudanveeRu

tharamoth thupayak kaLapath thaLamik
kavanath tharuNath – thanameethE

charuvic charuvith thazhuvith thazhuvith
thavamaR kaviduth – thuzhalvEnO

ariputh thirasith thasaak kadavut
karumaith thirumaith – thunavELE

adalkuk kudanaR kodikat tiyanarth
thasurap padaiyaip – poruvOnE

parivut Ravaruk karuLvaith tharuLvith
thakamuth thamizhaip – pakarvOnE

pazhanath thoLirmuth thaNiyet tikudip
pathiyiR kumarap – perumALE.

English Easy Version

uram utRu iru seppu ena vattamum oththu
iLakip puLakith – thidamAyE

udai sutRum idaic chumai okka aduththu
amithak keRuvath – thudan veeRu

tharam oththu upayak kaLapath thaLa(m)
mikka vanath tharuNath – thanam meethE

charuvic charuvith thazhuvith thazhuvith
thavam aRka viduththu – uzhalvEnO

ari puththira siththasan ak kadavutku
arumaith thiru – maiththuna vELE

adal kukkuda nal kodi katti anarththa
asurap padaiyaip – poruvOnE

parivutRavarukku aruL vaiththu aruL viththaka
muththamizhaip – pakarvOnE

pazhanaththu oLir muththu aNi ettikudip
pathiyil kumarap – perumALE