திருப்புகழ் 833 கடல் ஒத்த விடம் (எட்டிகுடி)

Thiruppugal 833 Kadaloththavidam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த – தனதானா

கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த
கயலொத்த மலரொத்த – விழிமானார்

கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு
கதிர்முத்து முலைதைக்க – அகலாதே

மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று
மிடிபட்டு மடிபட்டு – மனமாழ்கி

மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
மிகநட்பொ டருள்தற்கு – வருவாயே

தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
தலைபத்து டையதுட்ட – னுயிர்போகச்

சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
தருசக்ர தரனுக்கு – மருகோனே

திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
சிவனுக்கு விழியொத்த – புதல்வோனே

செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
திகழெட்டி குடியுற்ற – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த – தனதானா

கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த
கயல் ஒத்த மலர் ஒத்த – விழி மானார்

கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு
கதிர் முத்து முலை தைக்க – அகலாதே

மிடல் உற்ற கலவிக்குள் உள(ம்) நச்சி வளம் அற்று
மிடி பட்டு மடி பட்டு – மன(ம்) மாழ்கி

மெலிவு உற்ற தமியற்கு உ(ன்)னிரு பத்ம சரணத்தை
மிக நட்பொடு அருள்தற்கு – வருவாயே

தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற
தலை பத்துடைய துட்டன் – உயிர் போக

சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி
தரு சக்ரதரனுக்கு – மருகோனே

திடம் உற்ற கனகப் பொதுவில் நட்புடன் நடித்த
சிவனுக்கு விழி ஒத்த – புதல்வோனே

செழு நத்து உமிழு(ம்) முத்து வயலுக்குள் நிறை பெற்ற
திகழ் எட்டிகுடி உற்ற – பெருமாளே

English

kadaloththa vidamoththa kaNaiyoththa piNaiyoththa
kayaloththa malaroththa – vizhimAnAr

kanaseppu naLinaththu mukaiveRpai nikarseppu
kathirmuththu mulaithaikka – akalAthE

midalutRa kalavikku LuLanacchi vaLamatRu
midipattu madipattu – manamAzhki

melivutRa thamiyaRku nirupathma saraNaththai
mikanatpo daruLthaRku – varuvAyE

thadaiyatRa kaNaivittu maNivajra mudipetRa
thalaipaththu daiyathutta – nuyirpOkac

chalasaththu mayilutRa siRaivittu varuvetRi
tharusakra tharanukku – marukOnE

thidamutRa kanakappo thuvilntpu danadiththa
sivanukku vizhiyoththa – puthalvOnE

sezhunaththu mizhumuththu vayalukkuL niRaipetRa
thikazhetti kudiyutRa – perumALE.

English Easy Version

kadal oththa vidam oththa kaNai oththa piNai oththa
kayal oththa malar oththa – vizhi mAnAr

kana seppu naLinaththu mukai veRpai nikar seppu
kathir muththu mulai thaikka – akalAthE

midal utRa kalavikkuL uLa(m) nacchi vaLam atRu
midi pattu madi pattu mana(m) – mAzhki

melivu utRa thamiyaRku u(n)niru pathma saraNaththai
mika nadpodu aruLthaRku – varuvAyE

thadai atRa kaNai vittu maNi vajra mudi petRa
thalai paththudaiya thuttan – uyir pOka

chalasaththu mayil utRa siRai vittu varu vetRi
tharu sakratharanukku – marukOnE

thidam utRa kanakap pothuvil natpudan nadiththa
sivanukku vizhi oththa – puthalvOnE

sezhu naththu umizhu(m) muththu vayalukkuL niRai petRa
thikazh ettikudi utRa – perumALE.