திருப்புகழ் 836 அயிலார் மைக்கடு (திருக்குடவாயில்)

Thiruppugal 836 Ayilarmaikkadu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனா தத்தன தனனா தத்தன
தனனா தத்தன – தனதான

அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள்
அயலார் நத்திடு – விலைமாதர்

அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக
ளவரே வற்செய்து – தமியேனும்

மயலா கித்திரி வதுதா னற்றிட
மலமா யைக்குண – மதுமாற

மறையால் மிக்கருள் பெறவே யற்புத
மதுமா லைப்பத – மருள்வாயே

கயிலா யப்பதி யுடையா ருக்கொரு
பொருளே கட்டளை – யிடுவோனே

கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ
கதிர் வேல் விட்டிடு – திறலோனே

குயிலா லித்திடு பொழிலே சுற்றிய
குடவா யிற்பதி – யுறைவோனே

குறமா தைப்புணர் சதுரா வித்தக
குறையா மெய்த்தவர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனா தத்தன தனனா தத்தன
தனனா தத்தன – தனதான

அயில் ஆர் மைக் கடு விழியார் மட்டைகள்
அயலார் நத்திடு – விலைமாதர்

அணை மீதில் துயில் பொழுதே தெட்டிகள்
அவர் ஏவல் செய்து – தமியேனும்

மயலாகித் திரிவது தான் அற்றிட
மல மாயைக் குணம் – அது மாற

மறையால் மிக்க அருள் பெறவே அற்புத
மது மாலைப் பதம் – அருள்வாயே

கயிலாயப் பதி உடையாருக்கு ஒரு
பொருளே கட்டளை – இடுவோனே

கடல் ஓடிப் புகு முது சூர் பொட்டு எழ
கதிர் வேல் விட்டிடு – திறலோனே

குயில் ஆலித்திடு பொழிலே சுற்றிய
குடவாயில் பதி – உறைவோனே

குற மாதைப் புணர் சதுரா வித்தக
குறையா மெய்த்தவர் – பெருமாளே

English

ayilAr maikkadu vizhiyAr mattaikaL
ayalAr naththidu – vilaimAthar

aNaimee thitRuyil pozhuthE thettika
LavarE vaRseythu – thamiyEnum

mayalA kiththiri vathuthA natRida
malamA yaikkuNa – mathumARa

maRaiyAl mikkaruL peRavE yaRputha
mathumA laippatha – maruLvAyE

kayilA yappathi yudaiyA rukkoru
poruLE kattaLai – yiduvOnE

kadalO dippuku muthucUr pottezha
kathir vEl vittidu – thiRalOnE

kuyilA liththidu pozhilE sutRiya
kudavA yiRpathi – yuRaivOnE

kuRamA thaippuNar sathurA viththaka
kuRaiyA meyththavar – perumALE.

English Easy Version

ayil Ar maik kadu vizhiyAr mattaikaL
ayalAr naththidu – vilaimAthar

aNai meethil thuyil pozhuthE thettikaL
avar Eval seythu – thamiyEnum

mayalAkith thirivathu thAn atRida
mala mAyaik kuNam – athu mARa

maRaiyAl mikka aruL peRavE aRputha
mathu mAlaip patham – aruLvAyE

kayilAyap pathi udaiyArukku oru
poruLE kattaLai – iduvOnE

kadal Odip puku muthu cUr pottu ezha
kathir vEl vittidu – thiRalOnE

kuyil Aliththidu pozhilE sutRiya
kudavAyil pathi – uRaivOnE

kuRa mAthaip puNar sathurA viththaka
kuRaiyA meyththavar – perumALE