திருப்புகழ் 838 தொடுத்த நாள்முதல் (வலிவலம்)

Thiruppugal 838 Thoduththanalmudhal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன – தனதான

தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்
இருக்க வேறொரு பெயர்தம திடமது
துவட்சி யேபெறி லவருடன் மருவிடு – பொதுமாதர்

துவக்கி லேயடி படநறு மலரயன்
விதித்த தோதக வினையுறு தகவது
துறக்க நீறிட அரகர வெனவுள – மமையாதே

அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள்
பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறு
மசட்ட னாதுலன் அவமது தவிரநி – னடியாரோ

டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை
யிருத்தி யேபர கதிபெற மயில்மிசை
யரத்த மாமணி யணிகழ லிணைதொழ – அருள்தாராய்

எடுத்த வேல்பிழை புகலரி தெனஎதிர்
விடுத்து ராவணன் மணிமுடி துணிபட
எதிர்த்து மோர்கணை விடல்தெரி கரதலன் – மருகோனே

எருக்கு மாலிகை குவளையி னறுமலர்
கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை
யெலுப்பு மாலிகை புனைசடி லவனருள் – புதல்வோனே

வடுத்த மாவென நிலைபெறு நிருதனை
அடக்க ஏழ்கட லெழுவரை துகளெழ
வடித்த வேல்விடு கரதல ம்ருகமத – புயவேளே

வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய
கடப்ப மாலிகை யணிபுய அமரர்கள்
மதித்த சேவக வலிவல நகருறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன – தனதான

தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும்
இருக்க வேறொரு பெயர் தமது இடம் அது
துவட்சியே பெறில் அவருடன் மருவிடு(ம்) – பொது மாதர்

துவக்கிலே அடி பட நறு மலர் அயன்
விதித்த தோதக வினை உறு தகவு அது
துறக்க நீறு இட அரகர என உ(ள்)ளம் – அமையாதே

அடுத்த பேர் மனை துணைவியர் தமர் பொருள்
பெருத்த வாழ்வு இது சதம் என மகிழ் உறும்
அசட்டன் ஆதுலன் அவம் அது தவிர நின் – அடியாரோடு

அமர்த்தி மா மலர் கொ(ண்)டு வழி பட எனை
இருத்தியே பர கதி பெற மயில் மிசை
அரத்த மா மணி அணி கழல் இணை தொழ – அருள் தாராய்

எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர்
விடுத்து ராவணன் மணி முடி துணி பட
எதிர்த்தும் ஓர் கணை விடல் தெரி கரதலன் – மருகோனே

எருக்கு மாலிகை குவளையின் நறு மலர்
கடுக்கை மாலிகை பகிரதி சிறு பிறை
எலுப்பு மாலிகை புனை சடில் அவன் அருள் – புதல்வோனே

வடுத்த மா என நிலை பெறு நிருதனை
அடக்க ஏழ் கடல் எழு வரை துகள் எழ
வடித்த வேல் விடு கரதல ம்ருகமத – புய வேளே

வனத்தில் வாழ் குற மகள் முலை முழுகிய
கடப்ப மாலிகை அணி புய அமரர்கள்
மதித்த சேவக வலிவல நகர் உறை – பெருமாளே

English

thoduththa nALmuthal maruviya iLainjanum
irukka vERoru peyarthama thidamathu
thuvatchi yEpeRi lavarudan maruvidu – pothumAthar

thuvakki lEyadi padanaRu malarayan
vithiththa thOthaka vinaiyuRu thakavathu
thuRakka neeRida arahara venavuLa – mamaiyAthE

aduththa pErmanai thuNaiviyar thamarporuL
peruththa vAzhvithu sathamena makizhvuRu
masatta nAthulan avamathu thavirani – nadiyArO

damarththi mAmalar koduvazhi padaenai
yiruththi yEpara kathipeRa mayilmisai
yaraththa mAmaNi yaNikazha liNaithozha – aruLthArAy

eduththa vElpizhai pukalari thenaethir
viduththu rAvaNan maNimudi thuNipada
ethirththu mOrkaNai vidaltheri karathalan – marukOnE

erukku mAlikai kuvaLaiyi naRumalar
kadukkai mAlikai pakirathi siRupiRai
yeluppu mAlikai punaisadi lavanaruL – puthalvOnE

vaduththa mAvena nilaipeRu niruthanai
adakka Ezhkada lezhuvarai thukaLezha
vadiththa vElvidu karathala mrukamatha – puyavELE

vanaththil vAzhkuRa makaLmulai muzhukiya
kadappa mAlikai yaNipuya amararkaL
mathiththa sEvaka valivala nakaruRai – perumALE.

English Easy Version

thoduththa nAL muthal maruviya iLainjanum
irukka vERoru peyar thamathu idam athu
thuvatchiyE peRil avarudan maruvidu(m) – pothu mAthar

thuvakkilE adi pada naRu malar ayan
vithiththa thOthaka vinai uRu thakavu
athu thuRakka neeRu ida arahara ena u(L)Lam – amaiyAthE

aduththa pEr manai thuNaiviyar thamar poruL
peruththa vAzhvu ithu satham ena makizh uRum
asaddan Athulan avam athu thavira nin – adiyArOdu

amarththi mA malar ko(N)du vazhi pada enai
iruththiyE para kathi peRa mayil misai
araththa mA maNi aNi kazhal iNai thozha – aruL thArAy

eduththa vEl pizhai pukal arithu ena ethir
viduththu rAvaNan maNi mudi thuNi pada
ethirththum Or kaNai vidal theri karathalan – marukOnE

erukku mAlikai kuvaLaiyin naRu malar
kadukkai mAlikai pakirathi siRu piRai
eluppu mAlikai punai sadil avan aruL – puthalvOnE

vaduththa mA ena nilai peRu niruthanai
adakka Ezh kadal ezhu varai thukaL ezha
vadiththa vEl vidu karathala mrukamatha – puya vELE

vanaththil vAzh kuRa makaL mulai muzhukiya
kadappa mAlikai aNi puya amararkaL
mathiththa sEvaka valivala nakar uRai – perumALE