திருப்புகழ் 839 சூழும்வினை (வேதாரணியம்)

Thiruppugal 839 Suzhumvinai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தத்தத் தந்தன தந்தன – தனதான

சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி – கழிகாமஞ்
சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு – துணையாதே

ஏழையெ னித்துக் கங்களு டன்தின – முழல்வேனோ
ஏதம கற்றிச் செம்பத சிந்தனை – தருவாயே

ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை – யெழுநாளே
ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் – மருகோனே

வேழமு கற்கு தம்பியெ னுந்திரு – முருகோனே
வேதவ னத்திற் சங்கரர் தந்தருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தத்தத் தந்தன தந்தன – தனதான

சூழும்வினைக் கட்டுன்ப நெடும்பிணி – கழிகாமஞ்
சோரம் இதற்கு சிந்தை நினைந்து – உறுதுணை யாதே

ஏழையென் இத்துக்கங்களுடன் தினம் – உழல்வேனோ
ஏதம் அகற்றிச் செம்பத சிந்தனை – தருவாயே

ஆழியடைத்து இலங்கையை – யெழுநாளே
ஆண்மைசெலுத்தி தன்கைக்கொண்ட கரும்புயல் – மருகோனே

வேழமுகற்கு தம்பியெனுந் திரு – முருகோனே
வேதவனத்திற் சங்கரர் தந்தருள் – பெருமாளே

English

sUzhum vinaigaL thunba nedumpiNi – kazhikAman
sOram idhaRku chinthai ninaindhuRu – thuNaiyAdhE

Ezhai enith dhukkangaL udan dhinam – uzhalvEnO
Edham agatri sempadha chinthanai – tharuvAyE

Azhi adaithuth thangai ilankaiyai – ezhunALE
ANmai seluththik koNda karumpuyal – marugOnE

vEzha mukaRkuth thambiyenun thiru – murugOnE
vEdha vanaththil sankarar thandharuL – perumALE.

English Easy Version

sUzhum vinaigaL thunba nedumpiNi – kazhikAman
sOram idhaRku chinthai ninaindhu uRu – thuNaiyAdhE:

Ezhai enith dhukkangaL udan dhinam – uzhalvEnO
Edham agatri sempadha chinthanai – tharuvAyE

Azhi adaithuth thangai ilankaiyai – ezhunALE
ANmai seluththik koNda karumpuyal – marugOnE

vEzha mukaRkuth thambiyenun thiru – murugOnE
vEdha vanaththil sankarar thandharuL – perumALE