திருப்புகழ் 840 சேலை உடுத்து (வேதாரணியம்)

Thiruppugal 840 Selaiuduththu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தனத்தன தந்த தான தனத்தன தந்த
தான தனத்தன தந்த – தனதான

சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து
சீத வரிக்குழல் கிண்டி – யளிமூசத்

தேனி லினிக்கமொ ழிந்து காமு கரைச்சிறை கொண்டு
தேச மனைத்தையும் வென்ற – விழிமானார்

மாலை மயக்கில்வி ழுந்து காம கலைக்குளு ளைந்து
மாலி லகப்பட நொந்து – திரிவேனோ

வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள்
மாயை தொலைத்திட வுன்ற – னருள்தாராய்

பாலை வனத்தில்ந டந்து நீல அரக்கியை வென்று
பார மலைக்குள கன்று – கணையாலேழ்

பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்து
பால்வ ருணத்தலை வன்சொல் – வழியாலே

வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கை
வீட ணருக்கருள் கொண்டல் – மருகோனே

மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து
வேத வனத்தில மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தனத்தன தந்த தான தனத்தன தந்த
தான தனத்தன தந்த – தனதான

சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து
சீத வரிக் குழல் கிண்டி – அளி மூச

தேனின் இனிக்க மொழிந்து காமுகரைச் சிறை கொண்டு
தேசம் அனைத்தையும் வென்ற – விழி மானார்

மாலை மயக்கில் விழுந்து காம கலைக்குள் உளைந்து
மாலில் அகப்பட நொந்து – திரிவேனோ

வால ரவிக் கிரணங்களாம் என உற்ற பதங்கள்
மாயை தொலைத்திட உன்றன் – அருள் தாராய்

பாலை வனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று
பார மலைக்குள் அகன்று – கணையாலே ஏழ்

பார மரத் திரள் மங்க வாலி உரத்தை இடந்து
பால் வருணத் தலைவன் சொல் – வழியாலே

வேலை அடைத்து வரங்கள் சாடி அரக்கர் இலங்கை
வீடணருக்கு அருள் கொண்டல் – மருகோனே

மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து
வேதவனத்தில் அமர்ந்த – பெருமாளே.

English

chElai yuduththuna danthu mAlai yavizhththumu dinthu
seetha varikkuzhal kiNdi – yaLimUsath

thEni linikkamo zhinthu kAmu karaicchiRai koNdu
thEsa manaiththaiyum venRa – vizhimAnAr

mAlai mayakkilvi zhunthu kAma kalaikkuLu Lainthu
mAli lakappada nonthu – thirivEnO

vAla ravikkira Nanga LAme navutRapa thangaL
mAyai tholaiththida vunRa – naruLthArAy

pAlai vanaththilna danthu neela arakkiyai venRu
pAra malaikkuLa kanRu – kaNaiyAlEzh

pAra maraththiraL manga vAli yuraththaiyi danthu
pAlva ruNaththalai vanchol – vazhiyAlE

vElai yadaiththuva rangaL sAdi yarakkari langai
veeda NarukkaruL koNdal – marukOnE

mEvu thiruththaNi senthil neeLpa zhanikkuLu kanthu
vEtha vanaththila marntha – perumALE.

English Easy Version

chElai uduththu nadanthu mAlai avizhththu mudinthu
seetha varik kuzhal kiNdi – aLi mUsa

thEnin inikka mozhinthu kAmukaraic chiRai koNdu
thEsam anaiththaiyum venRa – vizhi mAnAr

mAlai mayakkil vizhunthu kAma kalaikkuL uLainthu
mAlil akappada nonthu – thirivEnO

vAla ravik kiraNangaLAm ena utRa pathangaL
mAyai tholaiththida unRan – aruL thArAy

pAlai vanaththil nadanthu neela arakkiyai venRu
pAra malaikkuL akanRu – kaNaiyAlE Ezh

pAra marath thiraL manga vAli uraththai idanthu
pAl varuNath thalaivan chol – vazhiyAlE

vElai adaiththu varangaL sAdi arakkar ilangai
veedaNarukku aruL koNdal – marukOnE

mEvu thiruththaNi senthil neeL pazhanikkuL ukanthu
vEthavanaththil amarntha – perumALE.,