திருப்புகழ் 842 நீல முகில் ஆன (கோடி .. குழகர் கோயில்)

Thiruppugal 842 Neelamugilana

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன – தனதான

நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன
நேயமதி லேதினமு – முழலாமல்

நீடுபுவி யாசைபொரு ளாசைமரு ளாகியலை
நீரிலுழல் மீனதென – முயலாமற்

காலனது நாவரவ வாயிலிடு தேரையென
காயமரு வாவிவிழ – அணுகாமுன்

காதலுட னோதுமடி யார்களுட னாடியொரு
கால்முருக வேளெனவு – மருள்தாராய்

சோலைபரண் மீதுநிழ லாகதினை காவல்புரி
தோகைகுற மாதினுட – னுறவாடிச்

சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ
சோதிகதிர் வேலுருவு – மயில்வீரா

கோலவழல் நீறுபுனை யாதிசரு வேசரொடு
கூடிவிளை யாடுமுமை – தருசேயே

கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர்
கோடிநகர் மேவிவளர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன – தனதான

நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன
நேயம் அதிலே தினமும் – உழலாமல்

நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை
நீரில் உழல் மீன் அது என – முயலாமல்

காலனது நா அரவ வாயில் இடு தேரை என
காயம் மருவு ஆவி விழ – அணுகா முன்

காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு
கால் முருக வேள் எனவும் – அருள் தாராய்

சோலை பரண் மீது நிழலாக தினை காவல் புரி
தோகை குற மாதினுடன் – உறவாடி

சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ
சோதி கதிர் வேல் உருவு(ம்) – மயில் வீரா

கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு
கூடி விளையாடும் உமை – தரு சேயே

கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர்
கோடி நகர் மேவி வளர் – பெருமாளே

English

neelamuki lAnakuzha lAnamada vArkaLthana
nEyamathi lEthinamu – muzhalAmal

needupuvi yAsaiporu LAsaimaru LAkiyalai
neeriluzhal meenathena – muyalAmal

kAlanathu nAvarava vAyilidu thEraiyena
kAyamaru vAvivizha – aNukAmun

kAthaluda nOthumadi yArkaLuda nAdiyoru
kAlmuruga vELenavu – maruLthArAy

sOlaiparaN meethunizha lAkathinai kAvalpuri
thOkaikuRa mAthinuda – nuRavAdi

sOranena nAdivaru vArkaLvana vEdarvizha
sOthikathir vEluruvu – mayilveerA

kOlavazhal neeRupunai yAthisaru vEsarodu
kUdiviLai yAdumumai – tharusEyE

kOdumuka vAnaipiRa kAnathuNai vAkuzhakar
kOdinakar mEvivaLar – perumALE.

English Easy Version

neela mukil Ana kuzhal Ana madavArkaL thana
nEyam athilE thinamum – uzhalAmal

needu puvi Asai poruL Asai maruL Aki alai
neeril uzhal meen athu ena – muyalAmal

kAlanathu nA arava vAyil idu thErai ena
kAyam maruvu Avi vizha – aNukA mun

kAthaludan Othum adiyArkaLudan nAdi oru
kAl muruka vEL enavum – aruL thArAy

sOlai paraN meethu nizhalAka thinai kAval puri
thOkai kuRa mAthinudan – uRavAdi

sOran ena nAdi varuvArkaL vana vEdar vizha
sOthi kathir vEl uruvu(m) – mayil veerA

kOla azhal neeRu punai Athi saruvEsarodu
kUdi viLaiyAdum umai – tharu sEyE

kOdu muka Anai piRakAna thuNaivA kuzhakar
kOdi nakar mEvi vaLar – perumALE