திருப்புகழ் 843 இரத்த முஞ்சி (திருப்பெருந்துறை)

Thiruppugal 843 Iraththamunji

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தந்தன தானன தந்தத்
தனத்த தந்தன தானன தந்தத்
தனத்த தந்தன தானன தந்தத் – தனதான

இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்
டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட்
டிருக்கு மண்சல வீடுபு குந்திட் – டதில்மேவி

இதத்து டன்புகல் சூதுமி குந்திட்
டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட்
டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் – டிடமாயா

பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்
துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்
பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் – தடிமேலாய்ப்

பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்
குலுத்தெ னும்படி கூனிய டங்கிப்
பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் – சடமாமோ

தரித்த னந்தன தானன தந்தத்
திமித்தி மிந்திமி தீதக திந்தத்
தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட் – டியல்தாளம்

தனத்த குந்தகு தானன தந்தக்
கொதித்து வந்திடு சூருடல் சிந்தச்
சலத்து டன்கிரி தூள்படெ றிந்திட் – டிடும்வேலா

சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட்
டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச்
சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற் – சரணோனே

செகத்தி னின்குரு வாகிய தந்தைக்
களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத்
திருப்பெ ருந்துறை மேவிய கந்தப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தந்தன தானன தந்தத்
தனத்த தந்தன தானன தந்தத்
தனத்த தந்தன தானன தந்தத் – தனதான

இரத்தமும் சீயும் மூளை எலும்பு உள்
தசைப் பசும் குடல் நாடி புனைந்திட்டு
இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு – அதில் மேவி

இதத்துடன் புகல் சூது மிகுந்திட்டு
அகைத்திடும் பொருள் ஆசை எனும் புள்
தெருட்டவும் தெளியாது பறந்திட்டிட – மாயா

பிரத்தம் வந்து அடு வாத சுரம் பித்தம்
உளைப்புடன் பல வாயுவும் மிஞ்சி
பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி – தடி மேலாய்ப்

பிடித்திடும் பல நாள் கொடு மந்திக்
குலுத்து எனும்படி கூனி அடங்கிப்
பிசக்கு வந்திடு(ம்) போது பின் அஞ்சிச் – சடம் ஆமோ

தரித்த னந்தன தானன தந்தத்
திமித்தி மிந்திமி தீதக திந்தத்
தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு – இயல்தாளம்

தனத்த குந்தகு தானன தந்தக்
கொதித்து வந்திடு சூர் உடல்
சிந்தச் சலத்துடன் கிரி தூள் பட – எறிந்திட்டிடும் வேலா

சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு
இரைத்து வந்து அமரோர்கள் படிந்துச்
சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன் – சரணோனே

செகத்தினில் குருவாகிய தந்தைக்கு
அளித்திடும் குரு ஞான ப்ரசங்க*
திருப் பெருந்துறை மேவிய கந்தப் – பெருமாளே

English

iraththa mumchiyu mULaiye lumput
tasaippa sungkudal nAdipu nainthit
tirukku maNchala veedupu kunthit – tathilmEvi

ithaththu danpukal cUthumi kunthit
takaiththi dumporu LAsaiye numput
terutta vuntheLi yAthupa Ranthit – tidamAyA

piraththam vanthadu vAthasu rampith
thuLaippu danpala vAyuvu minjip
pelaththai yumchila nALuLo dungith – thadimElAyp

pidiththi dumpala nALkodu manthik
kuluththe numpadi kUniya dangip
pisakku vanthidu pOthupi nanjic – chadamAmO

thariththa nanthana thAnana thanthath
thimiththi minthimi theethaka thinthath
thaduttu duNdudu dUdudi miNdit – tiyalthALam

thanaththa kunthaku thAnana thanthak
kothiththu vanthidu cUrudal sinthac
chalaththu dankiri thULpade Rinthit – tidumvElA

siraththu dankara mEdupo zhinthit
tiraiththu vanthama rOrkaLpa dinthuc
chiraththi nungkamazh mAlaima NampoR – charaNOnE

sekaththi ninguru vAkiya thanthaik
kaLiththi dumguru njAnapra sangath
thiruppe runthuRai mEviya kanthap – perumALE.

English Easy Version

iraththamum seeyum mULai elumpu uL
thasaip pasum kudal nAdi punainthittu
iRukku maN sala veedu pukunthittu – athil mEvi

ithaththudan pukal cUthu mikunthittu
akaiththidum poruL Asai enum puL
theruttavum theLiyAthu paRanthittida – mAyA

piraththam vanthu adu vAtha suram piththam
uLaippudan pala vAyuvum minji
pelaththaiyum sila nALuL odungi – thadi mElAyp

pidiththidum pala nAL kodu manthik
kuluththu enumpadi kUni adangip
pisakku vanthidu (m) pOthu pin anjic – chadam AmO

thariththa nanthana thAnana thanthath
thimiththi minthimi theethaka thinthath
thaduttu duNdudu dUdudi miNdittu – iyalthALam

thanaththa kunthaku thAnana thanthak
kothiththu vanthidu cUr udal sinthac
chalaththudan kiri thUL pada – eRinthittidum vElA

siraththudan karam Edu pozhinthittu
iraiththu vanthu amarOrkaL padinthuc
chiraththinum kamazh mAlai maNam pon – saraNOnE

sekaththinil guruvAkiya thanthaikku
aLiththidum guru njAna prasanga
thirup perunthuRai mEviya kanthap – perumALE