திருப்புகழ் 844 வரித்த குங்குமம் (திருப்பெருந்துறை)

Thiruppugal 844 Variththakungkumam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தனந் தனதன தனத்தனந் தனதன
தனத்தனந் தனதன – தனதான

வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன
மகிழ்ச்சிகொண் டிடஅதி – விதமான

வளைக்கரங் களினொடு வளைத்திதம் படவுடன்
மயக்கவந் ததிலறி – வழியாத

கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தர
களிப்புடன் களிதரு – மடமாதர்

கருப்பெருங் கடலது கடக்கவுன் திருவடி
களைத்தருந் திருவுள – மினியாமோ

பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியொடு
புகைப்பரந் தெரியெழ – விடும்வேலா

புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவி
பொறுத்தமந் தரகிரி – கடலூடே

திரித்தகொண் டலுமொரு மறுப்பெறுஞ் சதுமுக
திருட்டியெண் கணன்முத – லடிபேணத்

திருக்குருந் தடியமர் குருத்வசங் கரரொடு
திருப்பெருந் துறையுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தனந் தனதன தனத்தனந் தனதன
தனத்தனந் தனதன – தனதான

வரித்த குங்குமம் அணி முலைக் குரும்பையர் மன
மகிழ்ச்சி கொண்டிட அதி – விதமான

வளைக்கரங்களினொடு வளைத்து இதம் பட உடன்
மயக்க(ம்) வந்ததில் அறிவு – அழியாத

கருத்து அழிந்திட இரு கயல் க(ண்)ணும் புரள் தர
களிப்புடன் களி தரு – மட மாதர்

கருப் பெரும் கடல் அது கடக்க உன் திருவடிகளைத்
தரும் திரு உள்ளம் – இனி ஆமோ

பொருப்பு அகம் பொடி பட அரக்கர் தம் பதியோடு
புகைப் பரந்த எரி எழ – விடும் வேலா

புகழ்ப் பெரும் கடவுளர் களித்திடும் படி புவி
பொறுத்த மந்தர கிரி – கடல் ஊடே

திரித்த கொண்டலும் ஒரு மறுப் பெறும் சது முக
திருட்டி எண் க(ண்)ணன் முதல் – அடி பேண

திருக் குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு
திருப்பெருந்துறை உறை – பெருமாளே

English

variththakun gumamaNi mulaikkurum paiyarmana
makizhcchikoN didAthi – vithamAna

vaLaikkaran gaLinodu vaLaiththitham padavudan
mayakkavan thathilaRi – vazhiyAtha

karuththazhin thidairu kayaRkaNum puraLthara
kaLippudan kaLitharu – madamAthar

karupperum kadalathu kadakkavun thiruvadi
kaLaiththarun thiruvuLa – miniyAmO

poruppakam podipada arakkartham pathiyodu
pukaipparan theriyezha – vidumvElA

pukazhpperum kadavuLar kaLiththidum padipuvi
poRuththaman tharakiri – kadalUdE

thiriththakoN dalumoru maRuppeRum chathumuka
thiruttiyeN kaNanmutha – ladipENath

thirukkurun thadiyamar kuruthvasan kararodu
thirupperun thuRaiyuRai – perumALE.

English Easy Version

variththa kungumam aNi mulaik kurumpaiyar mana
makizhcchi koNdida athi – vithamAna

vaLaikkarangaLinodu vaLaiththu itham pada udan
mayakka(m) vanthathil aRivu – azhiyAtha

karuththu azhinthida iru kayal ka(N)Num puraL thara
kaLippudan kaLi tharu – mada mAthar

karup perum kadal athu kadakka un thiruvadi
kaLaith tharum thiru uLLam – ini AmO

poruppu akam podi pada arakkar tham pathiyOdu
pukaip parantha eri ezha – vidum vElA

pukazhp perum kadavuLar kaLiththidum padi puvi
poRuththa manthara kiri – kadal UdE

thiriththa koNdalum oru maRup peRum sathu muka
thirutti eN ka(N)Nan muthal – adi pENa

thiruk kurunthu adi amar kuruthva sangararodu
thirupperundhuRai uRai – perumALE