திருப்புகழ் 845 முகர வண்டெழு (திருப்பெருந்துறை)

Thiruppugal 845 Mugaravandezhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன – தனதான

முகர வண்டெழுங் கருமுகி லலையவு
முதிய நஞ்சுமிழ்ந் தயில்விழி குவியவு
முகிள சந்திரன் பொருநுதல் வெயரவு – மமுதூறும்

முருகு தங்குசெந் துகிரிதழ் தெரியவு
மருவு சங்கநின் றொலிகொடு பதறவு
முழுது மன்புதந் தமளியி னுதவிய – அநுராகச்

சிகர கும்பகுங் குமபுள கிததன
மிருபு யம்புதைந் திடநடு விடைவெளி
தெரிய லின்றியொன் றிடவுயி ருயிருட – னுறமேவித்

திமிர கங்குலின் புதவிடு மவசர
நினைவு நெஞ்சினின் றறவவர் முகமது
தெரிச னஞ்செயும் பரிவற இனியருள் – புரிவாயே

மகர நின்றதெண் டிரைபொரு கனைகடல்
மறுகி யஞ்சிவந் தடிதொழு திடவொரு
வடிகொள் செஞ்சரந் தொடுபவ னிருபது – புயவீரன்

மடிய வங்குசென் றவனொரு பதுமுடி
முடிய முன்புமண் டமர்பொரு தமர்நிழல்
மதிலி லங்கையும் பொடிபட அருளரி – மருகோனே

நிகரி லண்டமெண் டிசைகளு மகிழ்வுற
விரகு கொண்டுநின் றழகுறு மயில்மிசை
நினைவி னுந்தியம் புவிதனை வலம்வரு – மிளையோனே


நிலவ ரும்புதண் டரளமு மிளிரொளிர்
பவள மும்பொரும் பழனமு மழகுற
நிழல்கு ருந்தமுஞ் செறிதுறை வளர்வுறு – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன – தனதான

முகர வண்டு எழும் கரு முகில் அலையவு(ம்)
முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவு(ம்)
முகிள சந்திரன் பொரு நுதல் வெயரவும் – அமுது ஊறும்

முருகு தங்கு செம் துகிர் இதழ் தெரியவு(ம்)
மருவு சங்க(ம்) நின்று ஒலி கொடு பதறவு(ம்)
முழுது அன்பு தந்து அமளியின் உதவிய – அநுராகச்

சிகர கும்ப குங்கும புளகித தனம்
இரு புயம் புதைந்திட நடு இடைவெளி
தெரியல் இன்றி ஒன்றிட உயிர் உயிருடன் – உற மேவித்

திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர
நினைவு நெஞ்சினின்று அற அவர் முகம் அது
தெரிசனம் செயும் பரிவு அற இனி அருள் – புரிவாயே

மகர(ம்) நின்ற தெள் திரை பொரு கனை கடல்
மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட ஒரு
வடி கொள் செம் சரம் தொடுபவன் இருபது – புய வீரன்

மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி
முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல்
மதில் இலங்கையும் பொடிபட அருள் அரி – மருகோனே

நிகர் இல் அண்டம் எண் திசைகளும் மகிழ் உற
விரகு கொண்டு நின்று அழகு உறு மயில் மிசை
நினைவின் உந்தி அம் புவி தனை வலம் வரும் – இளையோனே

நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர்
பவளமும் பொரும் பழனமும் அழகு உற
நிழல் குருந்தமும் செறி துறை வளர் உறு – பெருமாளே

English

mukara vaNdezhung karumuki lalaiyavu
muthiya nanjumizhn thayilvizhi kuviyavu
mukiLa chanthiran porunuthal veyaravu – mamuthURum

muruku thangusen thukirithazh theriyavu
maruvu sanganin Rolikodu pathaRavu
muzhuthu manputhan thamaLiyi nuthaviya – anurAkac

chikara kumpakung kumapuLa kithathana
mirupu yamputhain thidanadu vidaiveLi
theriya linRiyon Ridavuyi ruyiruda – nuRamEvith

thimira kangulin puthavidu mavasara
ninaivu nenjinin RaRavavar mukamathu
therisa nanjeyum parivaRa iniyaruL – purivAyE

makara ninRatheN diraiporu kanaikadal
maRuki yanjivan thadithozhu thidavoru
vadikoL senjaran thodupava nirupathu – puyaveeran

madiya vangusen Ravanoru pathumudi
mudiya munpumaN damarporu thamarnizhal
mathili langaiyum podipada aruLari – marukOnE

nikari laNdameN disaikaLu makizhvuRa
viraku koNdunin RazhakuRu mayilmisai
ninaivi nunthiyam puvithanai valamvaru – miLaiyOnE

nilava rumputhaN daraLamu miLiroLir
pavaLa mumporum pazhanamu mazhakuRa
nizhalku runthamunj cheRithuRai vaLarvuRu – perumALE.

English Easy Version

mukara vaNdu ezhum karu mukil alaiyavu(m)
muthiya nanju umizhntha ayil vizhi kuviyavu(m)
mukiLa chanthiran poru nuthal veyaravum – amuthu URum

muruku thangu sem thukir ithazh theriyavu(m)
maruvu sanga(m) ninRu oli kodu pathaRavu(m)
muzhuthu anpu thanthu amaLiyin uthaviya – anurAkac

chikara kumpa kunguma puLakitha thanam
iru puyam puthainthida nadu idaiveLi
theriyal inRi onRida uyir uyirudan – uRa mEvith

thimira kangul inpu uthavidum avasara
ninaivu nenjininRu aRa avar mukam
athu therisanam seyum parivu aRa ini – aruL purivAyE

makara(m) ninRa theL thirai poru kanai kadal
maRuki anji vanthu adi thozhuthida oru
vadi koL sem charam thodupavan irupathu – puya veeran

madiya angu senRu avan oru pathu mudi
mudiya munpu maNdu amar poruthu amar nizhal
mathil ilangaiyum podipada aruL ari – marukOnE

nikar il aNdam eN thisaikaLum makizh uRa
viraku koNdu ninRu azhaku uRu mayil misai
ninaivin unthi am puvi thanai valam varum – iLaiyOnE

nilavu arumpu thaN tharaLamum miLir oLir
pavaLamum porum pazhanamum azhaku uRa
nizhal kurunthamum seRi thuRai vaLar uRu – perumALE