திருப்புகழ் 846 மலைக் கனத்தென (திருத்துருத்தி)

Thiruppugal 846 Malaikganaththena

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத் தனத்தன தானன தானன
தனத் தனத்தன தானன தானன
தனத் தனத்தன தானன தானன – தனதான

மலைக் கனத்தென மார்பினி லேயிரு
முலைக் கனத்துற வேயிடை நூலென
வளைத் துகுப்பமை யார்குழல் தோளொடும் – அலைமோத


மயிற் குலத்தவ ராமென நீள்கலை
நெகிழ்த் துவித்திரு வார்விழி வேல்கொடு
மயக் கிநத்தினர் மேல்மறு பாடும – விழியேவி

விலைக் கெனத்தன மாயிர மாயிர
முலைக் களப்பினு மாசைபொ தாதென
வெறுப் பர்குத்திர காரியர் வேசையர் – மயல்மேலாய்

வெடுக் கெடுத்தும காபிணி மேலிட
முடக் கிவெட்கும தாமத வீணனை
மினற் பொலிப்பத மோடுற வேயருள் – புரிவாயே

அலைக் கடுத்தசு ரார்பதி கோவென
விடப் பணச்சிர மாயிர சேடனும்
அதிர்த் திடக்கதிர் வேல்விடு சேவக – மயில்வீரா

அடைக் கலப்பொரு ளாமென நாயெனை
அழைத் துமுத்திய தாமநு பூதியெ
னருட் டிருப்புக ழோதுக வேல்மயி – லருள்வோனே

சிலைக் கைமுப்புர நீறெழ வேதிரு
வுளத் திலற்பமெ னாநினை தேசிகர்
சிறக் கமுத்தமி ழாலொரு பாவக – மருள்பாலா

திருக் கடப்பலர் சூடிய வார்குழல்
குறத் திகற்புட னேவிளை யாடியொர்
திருத் துருத்தியில் வாழ்முரு காசுரர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத் தனத்தன தானன தானன
தனத் தனத்தன தானன தானன
தனத் தனத்தன தானன தானன – தனதான

மலைக் கனத்து என மார்பினிலே இரு
முலைக் கனத்து உறவே இடை நூல் என
வளைத்து உகுப்ப மை ஆர் குழல் தோளொடும் – அலை மோத

மயில் குலத்தவர் ஆம் என நீள் கலை
நெகிழ்த்துவித்து இரு வார் விழி வேல் கொடு
மயக்கி நத்தினர் மேல் மறு பாடும் அவ் – விழி ஏவி

விலைக்கு எனத் தனம் ஆயிரம் ஆயிரம்
முலைக்கு அளப்பினும் ஆசை பொதாது என
வெறுப்பர் குத்திர காரியர் வேசையர் – மயல் மேலாய்

வெடுக்கு எடுத்து மகா பிணி மேலிட
முடக்கி வெட்கும் அ(த்)தாமத வீணனை
மி(ன்)னல் பொல் இப் பதமோடு உறவே அருள் – புரிவாயே

அலைக்கு அடுத்த அசுரார் பதி கோ என
விடப் பணச் சிரம் ஆயிரம் சேடனும்
அதிர்த்திடக் கதிர் வேல் விடு சேவக – மயில் வீரா

அடைக்கலப் பொருள் ஆம் என நாயெனை
அழைத்து முத்தி அது ஆம் அநுபூதியெ
அருள் திருப்புகழ் ஓதுக வேல் மயில் – அருள்வோனே

சிலைக் கை முப்புரம் நீறு எழவே திரு
உ(ள்)ளத்தில் அற்பம் எனா நினை தேசிகர்
சிறக்க முத்தமிழால் ஒரு பாவகம் – அருள் பாலா

திரு கடப்பு அலர் சூடிய வார் குழல்
குறத்தி கற்புடனே விளையாடி ஒர்
திருத்துருத்தியில் வாழ் முருகா சுரர் – பெருமாளே

English

malaik kanaththena mArpini lEyiru
mulaik kanaththuRa vEyidai nUlena
vaLaith thukuppamai yArkuzhal thOLodum – alaimOtha

mayiR kulaththava rAmena neeLkalai
nekizhth thuviththiru vArvizhi vElkodu
mayak kinaththinar mElmaRu pAduma – vizhiyEvi

vilaik kenaththana mAyira mAyira
mulaik kaLappinu mAsaipo thAthena
veRup parkuththira kAriyar vEsaiyar – mayalmElAy

veduk keduththuma kApiNi mElida
mudak kivetkuma thAmatha veeNanai
minaR polippatha mOduRa vEyaruL – purivAyE

alaik kaduththasu rArpathi kOvena
vidap paNacchira mAyira sEdanum
athirth thidakkathir vElvidu sEvaka – mayilveerA

adaik kalapporu LAmena nAyenai
azhaith thumuththiya thAmanu pUthiye
narut tiruppuka zhOthuka vElmayi – laruLvOnE

silaik kaimuppura neeRezha vEthiru
vuLath thilaRpame nAninai thEsikar
siRakka muththami zhAloru pAvaka – maruLbAlA

thiruk kadappalar cUdiya vArkuzhal
kuRath thikaRpuda nEviLai yAdiyor
thiruth thuruththiyil vAzhmuru kAsurar – perumALE

English Easy Version

malaik kanaththu ena mArpinilE iru
mulaik kanaththu uRavE idai nUl ena
vaLaiththu ukuppa mai Ar kuzhal thOLodum – alai mOtha

mayil kulaththavar Am ena neeL kalai
nekizhththuviththu iru vAr vizhi vEl kodu
mayakki naththinar mEl maRu pAdum av – vizhi Evi

vilaikku enath thanam Ayiram Ayiram
mulaikku aLappinum Asai pothAthu ena
veRuppar kuththira kAriyar vEsaiyar – mayal mElAy

vedukku eduththu makA piNi mElida
mudakki vetkum a(th)thAmatha veeNanai
mi(n)nal pol ip pathamOdu uRavE – aruL purivAyE

alaikku aduththa asurAr pathi kO ena
vidap paNac chiram Ayiram sEdanum
athirththidak kathir vEl vidu sEvaka – mayil veerA

adaikkalap poruL Am ena nAyenai
azhaiththu muththi athu Am anupUthiye
aruL thiruppukazh Othuka vEl mayil – aruLvOnE

silaik kai muppuram neeRu ezhavE thiru
u(L)Laththil aRpam enA ninai thEsikar
siRakka muththamizhAl oru pAvakam – aruL pAlA

thiru kadappu alar cUdiya vAr kuzhal
kuRaththi kaRpudanE viLaiyAdi or
thiruththuruththiyil vAzh murukA surar – perumALE