Thiruppugal 849 Karuththithappadu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்த தத்தன தானா தானன
தனத்த தத்தன தானா தானன
தனத்த தத்தன தானா தானன – தனதான
கருத்தி தப்படு காமா லீலைகள்
விதத்தை நத்திய வீணா வீணிகள்
கவட்டு விற்பன மாயா வாதிகள் – பலகாலுங்
கரைத்து ரைத்திடு மோகா மோகிகள்
அளிக்கு லப்பதி கார்போ லோதிகள்
கடைக்க ணிற்சுழ லாயே பாழ்படு – வினையேனை
உரைத்த புத்திகள் கேளா நீசனை
யவத்த மெத்திய ஆசா பாசனை
யுளத்தில் மெய்ப்பொரு ளோரா மூடனை – யருளாகி
உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை
யளிக்கு நற்பொரு ளாயே மாதவ
வுணர்ச்சி பெற்றிட வேநீ தாளிணை – யருள்வாயே
செருக்கி வெட்டிய தீயோ ராமெனு
மதத்த துட்டர்கள் மாசூ ராதிய
சினத்தர் பட்டிட வேவே லேவிய – முருகோனே
சிவத்தை யுற்றிடு தூயா தூயவர்
கதித்த முத்தமிழ் மாலா யோதிய
செழிப்பை நத்திய சீலா வீறிய – மயில்வீரா
வரைத்த வர்க்கரர் சூலா பாணிய
ரதிக்கு ணத்தரர் தீரா தீரர்த
மனத்தி யற்படு ஞானா தேசிக – வடிவேலா
வருக்கை யிற்கனி சாறாய் மேலிடு
தழைத்த செய்த்தலை யூடே பாய்தரு
மருத்து வக்குடி வாழ்வே தேவர்கள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்த தத்தன தானா தானன
தனத்த தத்தன தானா தானன
தனத்த தத்தன தானா தானன – தனதான
கருத்து இதப் படு காமா லீலைகள்
விதத்தை நத்திய வீணா வீணிகள்
கவட்டு விற்ப(ன்)ன மாயா வாதிகள் – பல காலும்
கரைத்து உரைத்திடு மோகா மோகிகள்
அளிக் குலப் பதி கார் போல் ஓதிகள்
கடைக் க(ண்)ணின் சுழலாயே பாழ் படு – வினையேனை
உரைத்த புத்திகள் கேளா நீசனை
அவத்த(ம்) மெத்திய ஆசா பாசனை
உ(ள்)ளத்தில் மெய்ப் பொருள் ஓரா மூடனை – அருளாகி
உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை
அளிக்கு நல் பொருள் ஆயே மாதவ
உணர்ச்சி பெற்றிடவே நீ தாளிணை – அருள்வாயே
செருக்கி வெட்டிய தீயோர் ஆம் எனும்
மதத்த துட்டர்கள் மா சூர் ஆதிய
சினத்தர் பட்டிடவே வேல் ஏவிய – முருகோனே
சிவத்தை உற்றிடு தூயா தூயவர்
கதித்த முத்தமிழ் மாலாய் ஓதிய
செழிப்பை நத்திய சீலா வீறிய – மயில் வீரா
வரைத் தவர்க்கு அரர் சூலா பாணியர்
அதிக் குணத்து அரர் தீரா தீரர் தம்
மனத்து இயல் படு ஞானா தேசிக – வடிவேலா
வருக்கையின் கனி சாறாய் மேலிடு
தழைத்த செய்த்தலை ஊடே பாய் தரு
மருத்துவக் குடி வாழ்வே தேவர்கள் – பெருமாளே
English
karuththi thappadu kAmA leelaikaL
vithaththai naththiya veeNA veeNikaL
kavattu viRpana mAyA vAthikaL – palakAlung
karaiththu raiththidu mOkA mOkikaL
aLikku lappathi kArpO lOthikaL
kadaikka NiRchuzha lAyE pAzhpadu – vinaiyEnai
uraiththa puththikaL kELA neesanai
yavaththa meththiya AsA pAsanai
yuLaththil meypporu LOrA mUdanai – yaruLAki
uyarcchi petRidu mElA mUthurai
yaLikku naRporu LAyE mAthava
vuNarcchi petRida vEnee thALiNai – yaruLvAyE
serukki vettiya theeyO rAmenu
mathaththa thuttarkaL mAcU rAthiya
sinaththar pattida vEvE lEviya – murukOnE
sivaththai yutRidu thUyA thUyavar
kathiththa muththamizh mAlA yOthiya
sezhippai naththiya seelA veeRiya – mayilveerA
varaiththa varkkarar cUlA pANiya
rathikku Naththarar theerA theerartha
manaththi yaRpadu njAnA thEsika – vadivElA
varukkai yiRkani chARAy mElidu
thazhaiththa seyththalai yUdE pAytharu
maruththu vakkudi vAzhvE thEvarkaL – perumALE.
English Easy Version
karuththu ithap padu kAmA leelaikaL
vithaththai naththiya veeNA veeNikaL
kavattu viRpa(n)na mAyA vAthikaL – pala kAlum
karaiththu uraiththidu mOkA mOkikaL
aLik kulap pathi kAr pOl OthikaL
kadaik ka(N)Nin suzhalAyE pAzh padu – vinaiyEnai
uraiththa puththikaL kELA neesanai
avaththa(m) meththiya AsA pAsanai
u(L)Laththil meyp poruL OrA mUdanai – aruLAki
uyarcchi petRidu mElA mUthurai
aLikku nal poruL AyE mAthava
uNarcchi petRidavE nee thALiNai – aruLvAyE
serukki vettiya theeyOr Am enum
mathaththa thuttarkaL mA cUr Athiya
sinaththar pattidavE vEl Eviya – murukOnE
sivaththai utRidu thUyA thUyavar
kathiththa muththamizh mAlAy Othiya
sezhippai naththiya seelA veeRiya – mayil veerA
varaith thavarkku arar cUlA pANiyar
athik kuNaththu arar theerA theerar tham
manaththu iyal padu njAnA thEsika – vadivElA
varukkaiyin kani chARAy mElidu
thazhaiththa seyththalai UdE pAy tharu
maruththuvak kudi vAzhvE thEvarkaL – perumALE