Thiruppugal 852 Egininampazhi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன – தனதான
எகினி னம்பழி நாடக மாடிகள்
மயிலெ னுஞ்செய லாரகி நேரல்குல்
இசையி டுங்குர லார்கட னாளிகள் – வெகுமோகம்
எனவி ழுந்திடு வார்முலை மேல்துகில்
அலைய வுந்திரி வாரெவ ராயினும்
இளகு கண்சுழல் வார்விலை வேசியர் – வலைவீசும்
அகித வஞ்சக பாவனை யால்மயல்
கொடுவி ழுந்திட ராகமு நோய்பிணி
யதிக முங்கொடு நாயடி யேனினி – யுழலாமல்
அமுத மந்திர ஞானொப தேசமும்
அருளி யன்புற வேமுரு காவென
அருள்பு குந்திட வேகழ லார்கழல் – அருள்வாயே
ககன விஞ்சையர் கோவென வேகுவ
டவுணர் சிந்திட வேகடல் தீவுகள்
கமற வெந்தழல் வேல்விடு சேவக – முருகோனே
கரிநெ டும்புலி தோலுடை யாரெனை
யடிமை கொண்டசு வாமிச தாசிவ
கடவு ளெந்தையர் பாகம்வி டாவுமை – யருள்பாலா
செகமு மண்டமு மோருரு வாய்நிறை
நெடிய அம்புயல் மேனிய னாரரி
திருவு றைந்துள மார்பக னார்திரு – மருகோனே
தினைவ னந்தனில் வாழ்வளி நாயகி
வளர்த னம்புதை மார்பழ காமிகு
திலக பந்தணை மாநகர் மேவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன – தனதான
எகின் இனம் பழி நாடகம் ஆடிகள்
மயில் எனும் செயலார் அகி நேர் அல்குல்
இசை இடும் குரலார் கடனாளிகள் – வெகுமோகம்
என விழுந்திடும் வார் முலை மேல் துகில்
அலையவும் திரிவார் எவராயினும்
இளகு கண் சுழல் வார் விலை வேசியர் – வலைவீசும்
அகித வஞ்சக பாவனையால் மயல்
கொடு விழுந்திட ராகமு(ம்) நோய் பிணி
அதிகமும் கொடு நாய் அடியேன் இனி – உழலாமல்
அமுத மந்திர ஞான உபதேசமும்
அருளி அன்புறவே முருகா என
அருள் புகுந்திடவே கழல் ஆர் கழல் – அருள்வாயே
ககன விஞ்சையர் கோ எனவே குவடு
அவுணர் சிந்திடவே கடல் தீவுகள்
கமற வெம் தழல் வேல் விடு சேவக – முருகோனே
கரி நெடும் புலி தோல் உடையார் எனை
அடிமை கொண்ட சுவாமி சதாசிவ
கடவுள் எந்தையர் பாகம் விடா உமை – அருள் பாலா
செகமும் அண்டமும் ஓர் உருவாய் நிறை
நெடிய அம்புயல் மேனியனார் அரி
திரு உறைந்துள மார்பகனார் திரு – மருகோனே
தினை வனம் தனில் வாழ் வ(ள்)ளி நாயகி
வளர் தனம் புதை மார்பு அழகா மிகு
திலக பந்தணை மாநகர் மேவிய – பெருமாளே
English
ekini nampazhi nAdaka mAdikaL
mayile numcheya lAraki nEralkul
isaiyi dungkura lArkada nALikaL – vekumOkam
enavi zhunthidu vArmulai mElthukil
alaiya vunthiri vAreva rAyinum
iLaku kaNchuzhal vArvilai vEsiyar – valaiveesum
akitha vanjaka pAvanai yAlmayal
koduvi zhunthida rAkamu nOypiNi
yathika mungkodu nAyadi yEnini – yuzhalAmal
amutha manthira njAnopa thEsamum
aruLi yanpuRa vEmuru kAvena
aruLpu kunthida vEkazha lArkazhal – aruLvAyE
kakana vinjaiyar kOvena vEkuva
davuNar sinthida vEkadal theevukaL
kamaRa venthazhal vElvidu sEvaka – murukOnE
karine dumpuli thOludai yArenai
yadimai koNdasu vAmisa thAsiva
kadavu Lenthaiyar pAkamvi dAvumai – yaruLbAlA
sekamu maNdamu mOruru vAyniRai
nediya ampuyal mEniya nArari
thiruvu RainthuLa mArpaka nArthiru – marukOnE
thinaiva nanthanil vAzhvaLi nAyaki
vaLartha namputhai mArpazha kAmiku
thilaka panthaNai mAnakar mEviya – perumALE.
English Easy Version
ekin inam pazhi nAdakam AdikaL
mayil enum seyalAr aki nEr alkul
isai idum kuralAr kadanALikaL – vekumOkam
ena vizhunthidum vAr mulai mEl thukil
alaiyavum thirivAr evarAyinum
iLaku kaN chuzhal vAr vilai vEsiyar – valaiveesum
akitha vanjaka pAvanaiyAl mayal
kodu vizhunthida rAkamu(m)
nOy piNi athikamum kodu nAy adiyEn ini – uzhalAmal
amutha manthira njAna upathEsamum
aruLi anpuRavE murukA ena
aruL pukunthidavE kazhal Ar kazhal – aruLvAyE
kakana vinjaiyar kO enavE kuvadu
avuNar sinthidavE kadal theevukaL
kamaRa vem thazhal vEl vidu sEvaka – murukOnE
kari nedum puli thOl udaiyAr enai
adimai koNda suvAmi sathAsiva
kadavuL enthaiyar pAkam vidA umai – aruL bAlA
sekamum aNdamum Or uruvAy niRai
nediya ampuyal mEniyanAr ari
thiru uRainthuLa mArpakanAr thiru – marukOnE
thinai vanam thanil vAzh va(L)Li nAyaki
vaLar thanam puthai mArpu azhakA miku
thilaka panthaNai mAnakar mEviya – perumALE.