திருப்புகழ் 853 கும்பமு நிகர்த்த (திருப்பந்தணை நல்லூர்)

Thiruppugal 853 Kumbamunigarththa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தன தனத்த தந்தன தனத்த
தந்தன தனத்த – தனதான

கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த
கொஞ்சுகி ளியொத்த – மொழிமானார்

குங்கும பணிக்குள் வண்புழு குவிட்ட
கொந்தள கம்வைத்த – மடவார்பால்

வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து
மங்கிந ரகத்தில் – மெலியாமல்

வண்கயி லைசுற்றி வந்திடு பதத்தை
வந்தனை செய்புத்தி – தருவாயே

பம்புந தியுற்ற பங்கொரு சமர்த்தி
பண்டுள தவத்தி – லருள்சேயே

பைம்புய லுடுத்த தண்டலை மிகுத்த
பந்தணை நகர்க்கு – ளுறைவோனே

சம்புநி ழலுக்குள் வந்தவ தரித்த
சங்கரர் தமக்கு – மிறையோனே

சங்கணி கரத்த ரும்பர்ப யமுற்ற
சஞ்சல மறுத்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தன தனத்த தந்தன தனத்த
தந்தன தனத்த – தனதான

கும்பமு(ம்) நிகர்த்த கொங்கையை வளர்த்த
கொஞ்சு கிளி ஒத்த – மொழி மானார்

குங்கும பணிக்குள் வண் புழுகு விட்ட
கொந்து அளகம் வைத்த – மடவார்பால்

வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து
மங்கி நரகத்தில் – மெலியாமல்

வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை
வந்தனை செய் புத்தி – தருவாயே

பம்பு நதி பங்கு உற்ற ஒரு சமர்த்தி
பண்டு உள தவத்தில் – அருள் சேயே

பைம் புயல் உடுத்த தண்டலை மிகுத்த
பந்தணை நகர்க்குள் – உறைவோனே

சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த
சங்கரர் தமக்கும் – இறையோனே

சங்கு அணி கரத்தர் உம்பர் பயம் உற்ற
சஞ்சலம் அறுத்த – பெருமாளே

English

kumpamu nikarththa kongaiyai vaLarththa
konjuki Liyoththa – mozhimAnAr

kunguma paNikkuL vaNpuzhu kuvitta
konthaLa kamvaiththa – madavArpAl

vampukaL viLaiththu naNpukaL koduththu
mangina rakaththil – meliyAmal

vaNkayi laisutRi vanthidu pathaththai
vanthanai seypuththi – tharuvAyE

pampuna thiyutRa pangoru samarththi
paNduLa thavaththi – laruLsEyE

paimpuya luduththa thaNdalai mikuththa
panthaNai nakarkku – LuRaivOnE

sampuni zhalukkuL vanthava thariththa
sankarar thamakku – miRaiyOnE

sangaNi karaththa rumparpa yamutRa
sanjala maRuththa – perumALE.

English Easy Version

kumpamu(m) nikarththa kongaiyai vaLarththa
konju kiLi oththa – mozhi mAnAr

kunguma paNikkuL vaN puzhuku vitta
konthu aLakam vaiththa – madavArpAl

vampukaL viLaiththu naNpukaL koduththu
mangi narakaththil – meliyAmal

vaN kayilai sutRi vanthidu pathaththai
vanthanai sey puththi – tharuvAyE

pampu nathi pangu utRa oru samarththi
paNdu uLa thavaththil – aruL sEyE

paim puyal uduththa thaNdalai mikuththa
panthaNai nakarkkuL – uRaivOnE

sampu nizhalukkuL vanthu avathariththa
sankarar thamakkum – iRaiyOnE

sangu aNi karaththar umpar payam utRa
sanjalam aRuththa – perumALE