திருப்புகழ் 854 கெண்டைகள் பொரும் (திருப்பந்தணை நல்லூர்)

Thiruppugal 854 Kendaigalporum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்ததன தந்ததன தனதனத்
தந்ததன தந்ததன தனதனத்
தந்ததன தந்ததன தனதனத் – தனதான

கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க்
கொண்டைகள்கு லுங்கநின் றருகினிற்
கெஞ்சுபலு டன்குழைந் தமளியிற் – கொடுபோய்வண்

கெந்தபொடி யும்புனைந் துறவணைத்
தின்பவச னந்தருந் தொழிலடுக்
கின்றமய லின்படுந் துயரறப் – ப்ரபைவீசுந்

தண்டைகள்க லின்கலின் கலினெனக்
கிண்கிணிகி ணின்கிணின் கிணினெனத்
தண்கொலுசு டன்சிலம் பசையவுட் – பரிவாகிச்

சந்ததமும் வந்திரும் பரிமளப்
பங்கயப தங்களென் கொடுவினைச்
சஞ்சலம லங்கெடும் படியருட் – புரிவாயே

தொண்டர்கள்ச ரண்சரண் சரணெனக்
கொம்புகள்கு குங்குகுங் குகுமெனத்
துந்துமிதி மிந்திமிந் திமினெனக் – குறுமோசை

சுந்தரிம ணஞ்செயுஞ் சவுரியக்
கந்தகுற வஞ்சிதங் கருவனத்
துங்கமலை யும்புரந் தமரருக் – கிடர்கூரும்

பண்டர்கள்பு யங்களும் பொடிபடக்
கண்டவப்ர சண்டகுஞ் சரியெழிற்
பைந்தருவ னம்புரந் தகழெயிற் – புடைசூழும்

பந்திவரு மந்திசெண் பகமகிற்
சந்துசெறி கொன்றைதுன் றியவனப்
பந்தணையில் வந்திடுஞ் சரவணப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்ததன தந்ததன தனதனத்
தந்ததன தந்ததன தனதனத்
தந்ததன தந்ததன தனதனத் – தனதான

கெண்டைகள் பொரும் கண் மங்கையர் மலர்க்
கொண்டைகள் குலுங்க நின்று அருகினில்
கெஞ்சு ப(ல்)லுடன் குழைந்து அமளியில் – கொடு போய்

வண் கெந்த பொடியும் புனைந்து உற அணைத்து
இன்ப வசனம் தரும் தொழில்
அடுக்கின்ற மயலின் படும் துயர் அற – ப்ரபை வீசும்

தண்டைகள் கலின்கலின் கலின் எனக்
கிண்கிணி கிணின் கிணின் என தண்
கொலுசுடன் சிலம்பு அசைய உள் – பரிவாகி

சந்ததமும் வந்து இரும் பரிமளப்
பங்கயப் பதங்கள் என் கொடு வினைச்
சஞ்சல மலம் கெடும்படி அருள் – புரிவாயே

தொண்டர்கள் சரண் சரண் சரண் என
கொம்புகள் குகும் குகும் குகும் என
துந்துமி திமிந் திமிந் திமிந் எனக் – குறு(கு)ம் ஓசை

சுந்தரி மணம் செயும் சவுரியக்
கந்த குற வஞ்சி தங்கு அரு வனத்
துங்க மலையும் புரந்து அமரருக்கு – இடர் கூரும்

பண்டர்கள் புயங்களும் பொடிபடக்
கண்டவ ப்ரசண்ட குஞ்சரி எழில்
பைந்தரு வனம் புரந்து அகழ் எயில் – புடை சூழும்

பந்தி வரு மந்தி செண்பகம் அகில்
சந்து செறி கொன்றை துன்றிய வன
பந்தணையில் வந்திடும் சரவணப் – பெருமாளே

English

keNdaikaLpo rungaNman gaiyarmalark
koNdaikaLku lunganin RarukiniR
kenjupalu dankuzhain thamaLiyiR – kodupOyvaN

kenthapodi yumpunain thuRavaNaith
thinpavasa nantharun thozhiladuk
kinRamaya linpadun thuyaraRap – prapaiveesum

thaNdaikaLka linkalin kalinenak
kiNkiNiki NinkiNin kiNinenath
thaNkolusu dansilam pasaiyavut – pAivAki

santhathamum vanthirum parimaLap
pangayapa thangaLen koduvinaic
chanjalama langedum padiyarut – purivAyE

thoNdarkaLsa raNsaraN saraNenak
kompukaLku kungukung kukumenath
thunthumithi minthimin thiminenak – kuRumOsai

sunthrima Nanjeyum savuriyak
kanthakuRa vanjithan karuvanath
thungamalai yumpuran thamararuk – kidarkUrum

paNdarkaLpu yangaLum podipadak
kaNdavapra saNdakun jariyezhiR
paintharuva nampuran thakazheyiR – pudaisUzhum

panthivaru manthiseN pakamakiR
chanthuseRi konRaithun Riyavanap
panthaNaiyil vanthidum saravaNap – perumALE.

English Easy Version

keNdaikaL porum kaN mangaiyar malark
koNdaikaL kulunga ninRu arukinil
kenju pa(l)ludan kuzhainthu amaLiyil – kodu pOy vaN

kentha podiyum punainthu uRa aNaiththu
inpa vasanam tharum thozhil adukkinRa
mayalin padum thuyar aRa – prapai veesum

thaNdaikaL kalinkalin kalin ena
kiNkiNi kiNin kiNin ena
thaN kolusudan silampu asaiya uL – parivAki

santhathamum vanthidum parimaLa
pangaya pathangaL en kodu vinaic
chanjala(m) malam kedumpadi – aruL purivAyE

thoNdarkaL saraN saraN saraN enak
kompukaL kukum kukum kukum enath
thunthumi thimin thimin thimin enak – kuRu(ku)m Osai

sunthari maNam seyum savuriyak
kantha kuRavanji thangu aru vanath
thunga malaiyum puranthu amararukku – idar kUrum

paNdarkaL puyangaLum podipadak
kaNdava prasaNda kunjari ezhil
paintharu vanam puranthu akazh eyil – pudai sUzhum

panthi varu manthi seNpakam akil
santhu seRi konRai thunRiya vana
panthaNaiyil vanthidum saravaNap – perumALE