திருப்புகழ் 855 தேனிருந்த இதழார் (திருப்பந்தணை நல்லூர்)

Thiruppugal 855 Thenirundhaidhazhar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன – தந்ததான

தேனி ருந்தஇத ழார்ப ளிங்குநகை
யார்கு ளிர்ந்தமொழி யார்ச ரங்கள்விழி
சீர்சி றந்தமுக வாரி ளம்பிறைய – தென்புரூவர்

தேன மர்ந்தகுழ லார்க ளங்கமுகி
னார்பு யங்கழையி னார்த னங்குவடு
சேர்சி வந்தவடி வார்து வண்டஇடை – புண்டரீகம்

சூனி யங்கொள்செய லார ரம்பைதொடை
யார்ச ரண்கமல நேரி ளம்பருவ
தோகை சந்தமணி வாரு டன்கலவி – யின்பமூடே

சோக முண்டுவிளை யாடி னுங்கமல
பாத மும்புயமி ராறு மிந்துளபல்
தோட லங்கலணி மார்ப மும்பரிவு – ளங்கொள்வேனே

ஓந மந்தசிவ ரூபி யஞ்சுமுக
நீலி கண்டிகலி யாணி விந்துவொளி
யோசை தங்குமபி ராமி யம்பிகைப – யந்தவேளே

ஓல மொன்றவுணர் சேனை மங்கையர்கள்
சேறு டன்குருதி யோட எண்டிசையும்
ஓது கெந்தருவர் பாட நின்றுநட – னங்கொள்வேலா

ஏனல் மங்கைசுசி ஞான ரம்பையென
தாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுற
மானொ டும்பர்தரு மான ணைந்தழகி – லங்குமார்பா


ஏர்க ரந்தையறு கோடு கொன்றைமதி
யாற ணிந்தசடை யார்வி ளங்குமெழில்
ஈறில் பந்தணைந லூர மர்ந்துவளர் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன – தந்ததான

தேன் இருந்த இதழார் பளிங்கு நகையார்
குளிர்ந்த மொழியார் சரங்கள் விழி
சீர் சிறந்த முகவார் இளம் பிறையது – என் புரூவர்

தேன் அமர்ந்த குழலார் களம் கமுகினார்
புயம் கழையினார் தனம் குவடு
சேர் சிவந்த வடிவார் துவண்ட இடை – புண்டரீகம்

சூனியம் கொள் செயலார் அரம்பை தொடையார்
சரண் கமல நேர் இளம் பருவ
தோகை சந்தம் அணிவாருடன் கலவி – இன்பம் ஊடே

சோகம் உண்டு விளையாடினும் கமல
பாதமும் புயம் ஈராறும் இந்துளம் பல்
தோடு அலங்கல் அணி மார்பமும் பரிவு உளம் – கொள்வேனே

ஓ(ம்) நம அந்த சிவ ரூபி அஞ்சு முக
நீலி கண்டி கலியாணி விந்து ஒளி
ஓசை தங்கும் அபிராமி அம்பிகை – பயந்த வேளே

ஓலம் ஒன்ற அவுணர் சேனை மங்கையர்கள்
சேறுடன் குருதி ஓட எண் திசையும்
ஓது கெந்தருவர் பாட நின்று நடனம் – கொள் வேலா

ஏனல் மங்கை சுசி ஞான ரம்பை எனது
ஆயி சந்த்ர முக பாவை வஞ்சி குற
மானொடு உம்பர் தரு மான் அணைந்த அழகு – இலங்கும் மார்பா

ஏர் கரந்தை அறுகோடு கொன்றை மதி
ஆறு அணிந்த சடையார் விளங்கும் எழில்
ஈறு இல் பந்தணை ந(ல்)லூர் அமர்ந்து வளர் – தம்பிரானே

English

thEni runthaitha zhArpa Lingunakai
yArku Lirnthamozhi yArsa rangaLvizhi
seersi Ranthamuka vAri LampiRaiya – thenpurUvar

thEna marnthakuzha lArka Langamuki
nArpu yangazhaiyi nArtha nangkuvadu
sErsi vanthavadi vArthu vaNdaidai – puNdareekam

cUni yangkoLseya lAra rampaithodai
yArsa raNkamala nEri Lamparuva
thOkai santhamaNi vAru dankalavi – yinpamUdE

sOka muNduviLai yAdi nungkamala
pAtha mumpuyami rARu minthuLapal
thOda langalaNi mArpa mumparivu – LangkoLvEnE

Ona manthasiva rUpi yanjumuka
neeli kaNdikali yANi vinthuvoLi
yOsai thangumapi rAmi yampikaipa – yanthavELE

Ola monRavuNar sEnai mangaiyarkaL
sERu dankuruthi yOda eNdisaiyum
Othu kentharuvar pAda ninRunada – nangkoLvElA

Enal mangaisusi njAna rampaiyena
thAyi chanthramuka pAvai vanjikuRa
mAno dumpartharu mAna Nainthazhaki – langumArpA

Erka ranthaiyaRu kOdu konRaimathi
yARa Ninthasadai yArvi Langumezhil
eeRil panthaNaina lUra marnthuvaLar – thambirAnE.

English Easy Version

thEn iruntha ithazhAr paLingu nakaiyAr
kuLirntha mozhiyAr sarangaL vizhi
seer siRantha mukavAr iLam piRaiyathu – en purUvar

thEn amarntha kuzhalAr kaLam kamukinAr
puyam kazhaiyinAr thanam kuvadu
sEr sivantha vadivAr thuvaNda idai – puNdareekam

cUniyam koL seyalAr arampai thodaiyAr
saraN kamala nEr iLam paruva
thOkai santham aNivArudan kalavi – inpam UdE

sOkam uNdu viLaiyAdinum kamala
pAthamum puyam eerARum inthuLam pal
thOdu alangal aNi mArpamum parivu uLam – koLvEnE

O(m) nama antha siva rUpi anju muka
neeli kaNdi kaliyANi vinthu oLi
Osai thangum apirAmi ampikai – payantha vELE

Olam onRa avuNar sEnai mangaiyarkaL
sERudan kuruthi Oda eN thisaiyum
Othu kentharuvar pAda ninRu nadanam – koL vElA

Enal mangai susi njAna rampai enathu
Ayi chanthra muka pAvai vanji kuRa
mAnodu umpar tharu mAn aNaintha azhaku – ilangum mArpA

Er karanthai aRukOdu konRai mathi
ARu aNintha sadaiyAr viLangum ezhil
eeRu il panthaNai na(l)lUr amarnthu vaLar – thambirAnE