Thiruppugal 857 Kondharmaikkuzhal
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தா தத்தன தந்தா தத்தன
தந்தா தத்தன – தனதான
கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை
யென்றே செப்பிய – மொழிமாதர்
கொங்கார் முத்துவ டந்தா னிட்டத
னந்தா னித்தரை – மலைபோலே
வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம
னந்தா னிப்படி – யுழலாமல்
மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம்
என்றே யிப்படி – அருள்வாயே
இந்தோ டக்கதிர் கண்டோ டக்கட
மண்டா நற்றவர் – குடியோட
எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரி
யென்றே திக்கென – வருசூரைப்
பந்தா டித்தலை விண்டோ டக்களம்
வந்தோ ரைச்சில – ரணகாளிப்
பங்கா கத்தரு கந்தா மிக்கப
னந்தா ளுற்றருள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்தா தத்தன தந்தா தத்தன
தந்தா தத்தன – தனதான
கொந்து ஆர் மைக் குழல் இந்து ஆர் சர்க்கரை
என்றே செப்பிய – மொழி மாதர்
கொங்கு ஆர் முத்து வடம் தான் இட்ட
தனம் தான் இத்தரை – மலை போலே
வந்தே சுற்றி வளைந்தால் அற்ப மனம்
தான் இப்படி – உழலாமல்
மங்கா நற்பொருள் இந்தா அற்புதம்
என்றே இப்படி – அருள்வாயே
இந்து ஓடக் கதிர் கண்டு ஓடக் கடம்
மண்டா நல் தவர் – குடி ஓட
எங்கே அக்கிரி எங்கே இக்கிரி
என்றே திக்கென – வரு சூரை
பந்தாடித் தலை விண்டு ஓட களம்
வந்தோரைச் சில – ரண காளி
பங்காகத் தரு கந்தா மிக்க
பனந்தாள் உற்று அருள் – பெருமாளே
English
konthAar maikkuzha linthAar sarkkarai
yenRE seppiya – mozhimAthar
kongAar muththuva danthA nittatha
nanthA niththarai – malaipOlE
vanthE sutRiva LainthA laRpama
nanthA nippadi – yuzhalAmal
mangA naRporu LinthA aRputham
enRE yippadi – aruLvAyE
inthO dakkathiar kaNdO dakkada
maNdA natRavar – kudiyOda
engE yakkiri yengE yikkiri yenRE
thikkena – varucUraip
panthA diththalai viNdO dakkaLam
vanthO raicchila – raNakALip
pangA kaththaru kanthA mikkapa
nanthA LutRaruL – perumALE.
English Easy Version
konthu Ar maik kuzhal inthu Ar sarkkarai
enRE seppiya – mozhi mAthar
kongu Ar muththu vadam thAn itta thanam
thAn iththarai – malai pOlE
vanthE sutRi vaLainthAl aRpa
manam thAn ippadi – uzhalAmal
mangA naRporuL inthA aRputham
enRE ippadi – aruLvAyE
inthu Odak kathir kaNdu Odak kadam
maNdA nal thavar – kudi Oda
engE akkiri engE ikkiri enRE
thikkena – varu cUrai
panthAdith thalai viNdu Oda kaLam
vanthOraic chila – raNa kALi
pangAkath tharu kanthA mikka
pananthAL utRu aruL – perumALE.,