Thiruppugal 859 Ilagukuzhaikizhiya
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தனதனன தான தானதன
தனன தனதனன தான தானதன
தனன தனதனன தான தானதன – தந்ததான
இலகு குழைகிழிய வூடு போயுலவி
யடர வருமதன னூல ளாவியெதி
ரிளைஞ ருயிர்கவர ஆசை நேர்வலைபொ – திந்தநீலம்
இனிமை கரைபுரள வாகு லாவுசரி
நெறிவு கலகலென வாசம் வீசுகுழ
லிருளின் முகநிலவு கூர மாணுடைய – கன்றுபோக
மலையு மிதழ்பருகி வேடை தீரவுட
லிறுக இறுகியநு ராக போகமிக
வளரு மிளகுதன பார மீதினில்மு – யங்குவேனை
மதுர கவியடைவு பாடி வீடறிவு
முதிர அரியதமி ழோசை யாகவொளி
வசன முடையவழி பாடு சேருமருள் – தந்திடாதோ
கலக அசுரர்கிளை மாள மேருகிரி
தவிடு படவுதிர வோல வாரியலை
கதற வரியரவம் வாய்வி டாபசித – ணிந்தபோகக்
கலப மயிலின்மிசை யேறி வேதநெறி
பரவு மமரர்குடி யேற நாளும்விளை
கடிய கொடியவினை வீழ வேலைவிட – வந்தவாழ்வே
அலகை யுடனடம தாடு தாதைசெவி
நிறைய மவுனவுரை யாடு நீபஎழில்
அடவி தனிலுறையும் வேடர் பேதையைம – ணந்தகோவே
அமணர் கழுவில்விளை யாட வாதுபடை
கருது குமரகுரு நாத நீதியுள
தருளு மிடைமருதில் மேவு மாமுனிவர் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தனன தனதனன தான தானதன
தனன தனதனன தான தானதன
தனன தனதனன தான தானதன – தந்ததான
இலகு குழை கிழிய ஊடு போய் உலவி
அடர வரு மதன நூல் அளாவி எதிர்
இளைஞர் உயிர் கவர ஆசை நேர் வலை – பொதிந்த நீலம்
இனிமை கரை புரள வாகு உலாவு சரி
நெறிவு கலகல என வாசம் வீசு குழல்
இருளின் முக நிலவு கூர மாண் உடை – அகன்று போக
மலையும் இதழ் பருகி வேட தீர உடல்
இறுக இறுகி அநுராக போக மிக
வளரும் இளகு தன பாரம் மீதினில் – முயங்குவேனை
மதுர கவி அடைவு பாடி வீடு அறிவு
முதிர அரிய தமிழோசை ஆக ஒளி
வசனம் உடைய வழிபாடு சேரும் அருள் – தந்திடாதோ
கலக அசுரர் கிளை மாள மேரு கிரி
தவிடு பட உதிர ஓல வாரி அலை
கதற வரி அரவம் வாய் விடா பசி – தணிந்த போகக்
கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி
பரவும் அமரர் குடியேற நாளும் விளை
கடிய கொடிய வினை வீழ வேலை விட – வந்த வாழ்வே
அலகையுடன் நட(ன)ம் அது ஆடும் தாதை செவி
நிறைய மவுன உரையாடு(ம்) நீப எழில்
அடவி தனில் உறையும் வேடர் பேதையை – மணந்த கோவே
அமணர் கழுவில் விளையாட வாது படை
கருது குமரகுரு நாத நீதி உளது
அருளும் இடை மருதில் மேவும் மா முனிவர் – தம்பிரானே
English
ilaku kuzhaikizhiya vUdu pOyulavi
yadara varumathana nUla LAviyethi
riLainja ruyirkavara Asai nErvalaipo – thinthaneelam
inimai karaipuraLa vAku lAvusari
neRivu kalakalena vAsam veesukuzha
liruLin mukanilavu kUra mANudaiya – kanRupOka
malaiyu mithazhparuki vEdai theeravuda
liRuka iRukiyanu rAka pOkamika
vaLaru miLakuthana pAra meethinilmu – yangkuvEnai
mathura kaviyadaivu pAdi veedaRivu
muthira ariyathami zhOsai yAkavoLi
vachana mudaiyavazhi pAdu sErumaruL – thanthidAthO
kalaka asurarkiLai mALa mErukiri
thavidu padavuthira vOla vAriyalai
kathaRa variyaravam vAyvi dApasitha – NinthapOkak
kalapa mayilinmisai yERi vEthaneRi
paravu mamararkudi yERa nALumviLai
kadiya kodiyavinai veezha vElaivida – vanthavAzhvE
alakai yudanadama thAdu thAthaisevi
niRaiya mavunavurai yAdu neepaezhil
adavi thaniluRaiyum vEdar pEthaiyaima – NanthakOvE
amaNar kazhuvilviLai yAda vAthupadai
karuthu kumarakuru nAtha neethiyuLa
tharuLu midaimaruthil mEvu mAmunivar – thambirAnE.
English Easy Version
ilaku kuzhai kizhiya Udu pOy ulavi
adara varu mathana nUl aLAvi ethir
iLainjar uyir kavara Asai nEr valai – pothintha neelam
inimai karai puraLa vAku ulAvu sari
neRivu kalakala ena vAsam veesu kuzhal
iruLin muka nilavu kUra mAN udai – akanRu pOka
malaiyum ithazh paruki vEdai theera udal
iRuka iRuki anurAka pOka mika
vaLarum iLagu thana pAram meethinil – muyanguvEnai
mathura kavi adaivu pAdi veedu aRivu
muthira ariya thamizhOsai Aka oLi
vasanam udaiya vazhipAdu sErum aruL – thanthidAthO
kalaka asurar kiLai mALa mEru kiri
thavidu pada uthira Ola vAri alai
kathaRa vari aravam vAy vidA pasi – thaNintha pOkak
kalapa mayilin misai ERi vEtha neRi
paravum amarar kudiyERa nALum viLai
kadiya kodiya vinai veezha vElai vida – vantha vAzhvE
alakaiyudan nada(na)m athu Adum thAthai sevi
niRaiya mavuna uraiyAdu(m) neepa ezhil
adavi thanil uRaiyum vEdar pEthaiyai – maNantha kOvE
amaNar kazhuvil viLaiyAda vAthu padai
karuthu kumarakuru nAtha neethi uLathu
aruLum idai maruthil mEvum mA munivar – thambirAnE